Election bannerElection banner
Published:Updated:

`இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் இனி பணமில்லா சேவையை தட்டிக்கழிக்கக் கூடாது!' - ஐ.ஆர்.டி.ஏ அதிரடி

ஹெல்த் பாலிசி
ஹெல்த் பாலிசி

கொரோனா சிகிச்சை உட்பட, அனைத்து மருத்துவ சிகிச்சைகளுக்கும், பாலிசிகள் வாயிலாக பணமில்லா சிகிச்சைகளுக்கு அனைத்து தனியார் மருத்துவமனைகளும் அனுமதிக்க வேண்டும்.

மெடிக்கல் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசிகள் எடுத்திருக்கும்பட்சத்தில், அந்த பாலிசியின் மூலம் மருத்துவமனைகளில் பணமில்லா சிகிச்சை பெற முடியும் என்றுதான் இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் அதை விளம்பரப்படுத்துகின்றன.

அதற்கான வசதிகளையும் பெரும்பாலான மருத்துவமனைகள் கொண்டிருக்கின்றன. ஆனால், கொரோனா சிகிச்சைக்கான கிளைம்கள் அதிகரிக்க ஆரம்பித்த நாளிலிருந்து பணமில்லா சிகிச்சை வசதிகளை மெரும்பாலான தனியார் நிறுவனங்கள் வழங்குவதில்லை. இது குறித்து மக்கள் அதிக அளவில் புகார் கொடுத்து வந்த நிலையில், இதற்கான நடவடிக்கையை விரைந்து எடுக்கும்படி இன்ஷூரன்ஸ் கட்டுப்பாட்டாளரான ஐ.ஆர்.டி.ஏ.ஐ அமைப்புக்கு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உத்தரவிட்டிருக்கிறார். ட்விட்டரிலும் இதற்கான பதிவை அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

இவரது உத்தரவை நடைமுறைப்படுத்தும் வகையில், ஐ.ஆர்.டி.ஏ.ஐ அமைப்பு, ``கொரோனா சிகிச்சை உட்பட, அனைத்து மருத்துவ சிகிச்சைகளுக்கும், பாலிசிகள் வாயிலாக பணமில்லா சிகிச்சைகளுக்கு அனைத்து தனியார் மருத்துவமனைகளும் அனுமதிக்க வேண்டும். எந்த ஒரு பாலிசியையும் தட்டிக்கழிக்கக் கூடாது" என மருத்துவமனைகளுக்கு தெரிவித்திருக்கிறது. பாலிசிதார்களுக்கான வசதிகளை அந்தந்த இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் எனவும் ஐ.ஆர்.டி.ஏ.ஐ தெரிவித்துள்ளது.

நீங்கள் எடுத்திருக்கும் இன்ஷூரன்ஸ் திட்டங்கள் குறித்தும், கிளைம் தொடர்பான விஷயங்கள் குறித்தும் ஐ.ஆர்.டி.ஏ.ஐ மூலம் புகார்களை தாக்கல் செய்ய முடியும். ஐ.ஆர்.டி.ஏ.ஐ-ல் புகார்களைத் தெரிவிப்பதற்கு முன்பாக பாலிசிதாரர்கள், சம்பந்தப்பட்ட காப்பீட்டு நிறுவனங்களிடம் தங்களின் புகார்களைத் தெரிவித்திருக்க வேண்டும்.

குறிப்பிட்ட காலத்துக்குள் தெரிவித்த புகார்களுக்கு சம்பந்தப்பட்ட காப்பீட்டு நிறுவனங்கள் பதில் அளிக்காமல் இருந்தாலோ, அவர்கள் கொடுத்த பதில் உங்களுக்குத் திருப்தி அளிக்காமல் இருந்தாலோ ஐ.ஆர்.டி.ஏ.ஐ-யில் உள்ள புகார் செல்லுக்கு புகார்களை அனுப்பலாம். காப்பீட்டுச் சேவை குறைபாடு தொடர்பான புகார்களுக்கு விரைந்து தீர்வு காண்பதற்கு வசதியாக காப்பீட்டுத் தீர்ப்பாயம் விதிமுறைகள் 2017-ல் (Ombudsman Rules 2017) மத்திய அரசாங்கம் திருத்தம் கொண்டு வந்துள்ளது. காப்பீட்டு நிறுவனங்கள், பாலிசி தாரரின் புகாருக்கு குறிப்பிட்ட நாள்களுக்குள் தீர்வு தராவிட்டால் அல்லது அந்தத் தீர்வில் அதிருப்தி அடைந்தால், ஐ.ஆர்.டி.ஏ.ஐ-யின் நுகர்வோர் விவகாரத்துறையின் குறைதீர்க்கும் பிரிவை அணுகலாம். புதிய விதிமுறைகளின்படி, பாலிசிதாரர்களின் புகார் நிலையை ஆன்லைனில் கண்காணிக்க இது உதவுகிறது. மேலும், ஆம்பூட்ஸ்மேன், வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரணை செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹெல்த் இன்ஷூரன்ஸ்
ஹெல்த் இன்ஷூரன்ஸ்
அதிகரிக்கும் ஆன்லைன் இன்ஷூரன்ஸ் பாலிசிகள்..! கவனிக்க வேண்டிய அம்சங்கள்...

ஐ.ஆர்.டி.ஐ.ஏ-யின் ஆன்லைன் போர்ட்டலைப் பயன்படுத்தி புகார் தெரிவிக்கலாம். அதாவது, ஒருங்கிணைந்த குறைதீர்க்கும் முறை (ஐ.ஜி.எம்.எஸ்) மூலம் புகாரை https://www.policyholder.gov.in/Report.aspx# -ல் பதிவு செய்யலாம். மின்னஞ்சல் மூலம் complaints@irdai.gov.in என்ற முகவரிக்கு புகரை அனுப்பலாம். கட்டணமில்லா எண் 155255 அல்லது 1800425473-ல் அழைக்கலாம். புகாருடன் ஐ.ஆர்.டி.ஏ.ஐ-க்கு ஒரு கடிதம் அனுப்ப வேண்டுமானால், https://www.policyholder.gov.in/uploads/CEDocuments/complaintform.pdf என்கிற படிவத்தைப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்!

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு