Published:Updated:

ஏர்டெல் நிறுவனத்தின் இறக்குமதிச் சலுகை லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டதா?

ஏர்டெல்
ஏர்டெல் ( vikatan )

ஏர்டெல் தரப்பிலோ, எங்களுக்கு இறக்குமதிச் சலுகைக்கான அங்கீகாரம் தேவைப்படாததால் 2018, ஏப்ரல் முதலாகவே அந்த லைசென்ஸ் எடுக்கவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

மத்திய வர்த்தக அமைச்சகத்தின் கீழ் செயல்படும் வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் (DGFT), பார்தி ஏர்டெல் நிறுவனம் இறக்குமதிக்கான சலுகைகளைப் பெறமுடியாத கறுப்புப்பட்டியலில் வைக்கப்பட்டுள்ளது.

இறக்குமதி
இறக்குமதி
vikatan

ஏற்றுமதி ஊக்குவிப்பு மூலதன பொருள்கள் (EPCG) திட்டத்தின் கீழ் சலுகைகளைப் பெறுவதற்குரிய செயல்பாட்டைச் சரிவர நிறைவேற்றாத காரணத்தால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இ.பி.சி.ஜி திட்டத்தின்கீழ், மூலப்பொருள்களை 0% சுங்க வரியிலேயே இறக்குமதி செய்துகொள்ளும் சலுகை அளிக்கப்படும்.

இறக்குமதிச் சலுகைக்கான அங்கீகாரம் பெற்றுள்ளவர்கள், மூலப்பொருள்கள் இறக்குமதிக்குப் பெறப்பட்ட வரிச்சலுகையைப்போல் 6 மடங்கு அளவு வரி வருமானம் பெறக்கூடிய அளவுக்கு ஏற்றுமதி செய்யப்பட வேண்டும். இதை ஏர்டெல் பூர்த்தி செய்யாததாலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் என்று கூறப்பட்டது.

ஏர்டெல்
ஏர்டெல்
vikatan

ஆனால் ஏர்டெல் தரப்பிலோ, எங்களுக்கு இறக்குமதிச் சலுகைக்கான அங்கீகாரம் தேவைப்படாததால் 2018 ஏப்ரல் முதலாகவே அந்த லைசென்ஸ் எடுக்கவில்லை என்று கூறப்பட்டுள்ளது. மேலும், இதற்கு முன்னர் எடுக்கப்பட்ட லைசென்ஸ்கள் அனைத்தையும் ரத்து செய்வதற்கு ஏற்கெனவே விண்ணப்பிக்கப்பட்டு, அதிகாரிகளின் ஒப்புதலுக்காகக் காத்திருப்பதாகவும் ஏர்டெல் தரப்பில் கூறப்பட்டுள்ளது. எனவே, இதுகுறித்த உண்மைத்தன்மையை அறித்துகொள்வதற்காக மும்பை பங்குச்சந்தை சார்பில், ஏர்டெல் நிறுவனத்திடம் கேட்கப்பட்டுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு