Published:Updated:

`100 ரூபாய்க்கும் தங்கம் வாங்கலாம்!' - முதலீட்டாளர்களுக்கு வரப்பிரசாதமா டிஜிட்டல் கோல்டு?

ஆன்லைன்மூலம் தங்கம் விற்பனை செய்யும் நிறுவனத்தின் இணையதளத்தில் பணம் கட்டி தங்கம் வாங்கிவிட முடியும். டிஜிட்டல் முறையில் ஆன்லைனில் எப்போது வேண்டுமானாலும் தங்கம் வாங்கலாம்; விற்கலாம் என்பது இதில் இருக்கும் கூடுதல் சிறப்பு.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தீபாவளிப் பண்டிகை நெருங்குவதை ஒட்டி டிஜிட்டல் முறையில் தங்கம் வாங்க முதலீட்டாளர்களுக்குப் புதிய வாய்ப்புகள் உருவாகியுள்ளன. ரூ.100-க்குக்கூட தங்கம் வாங்கும் அளவுக்கு தொழில்நுட்ப வசதிகள் பெருகியிருக்கின்றன.

முன்பெல்லாம் தங்கம் வாங்க வேண்டும் எனில், பவுன் கணக்கிலேயே வாங்க முடிந்தது. அதன்பின் ஒரு கிராம் அளவுக்கு வாங்கலாம் என்கிற அளவுக்கு தொழில்நுட்பம் முன்னேறியது. இப்போது ஆன்லைனில் கொஞ்சம் கொஞ்சமாக தங்கம் வாங்கிச் சேர்க்க முடியும் என்பதால், ரூ.100-க்குக்கூட தங்கம் வாங்கிச் சேர்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

கோல்டு ஈ.டி.எஃப்
கோல்டு ஈ.டி.எஃப்
இன்னும் தங்க நகைகள் மூலம்தான் தங்கத்தில் முதலீடு செய்கிறீர்களா? ஒரு நிமிஷம் ப்ளீஸ்! #HerMoney - 5

இதற்காக பெரிய தங்க நகை நிறுவனங்கள் பல்வேறு நிறுவனங்களுடன் கூட்டணி அமைத்து வருகின்றன. இன்னும் சில நிறுவனங்கள் ரூ.1-க்குக்கூட தங்கம் வாங்கலாம் என்று சொல்லி வருகின்றன.

கல்யாண் ஜுவல்லர்ஸ் நிறுவனம் டிஜிட்டல் மூலம் தங்கம் விற்க, ஆக்மென்ட் நிறுவனத்துடனும், டாடாவின் தனிஷ்க் நிறுவனம் பி.சி. ஜுவல்லர் நிறுவனத்துடனும் கூட்டணி அமைத்துள்ளன. பேடிஎம், அமேசான் பே, போன் பே போன்ற நிறுவனங்கள் ஏற்கெனவே டிஜிட்டல் முறையில் தங்கம் விற்று வருகின்றன.

இவ்வாறு டிஜிட்டல் முறையில் சேர்க்கப்படும் தங்கத்தை சில தங்க நகை நிறுவனங்கள் தங்க நகை வாங்கும்போது மீண்டும் வாங்கி, பணத்தைக் கழித்துக்கொள்கின்றன. வேறு சில நிறுவனங்கள் தங்கத்தை விற்று, பணமாகத் திரும்பப் பெற்றுக் கொள்ளும் வசதியை வைத்திருக்கின்றன.

ஆன்லைனில் டிஜிட்டல் முறையில் தங்கம் வாங்குவது மிக எளிது. ஆன்லைன்மூலம் தங்கம் விற்பனை செய்யும் நிறுவனத்தின் இணையதளத்தில் பணம் கட்டி தங்கம் வாங்கிவிட முடியும். டிஜிட்டல் முறையில் ஆன்லைனில் எப்போது வேண்டுமானாலும் தங்கம் வாங்கலாம்; விற்கலாம் என்பது இதில் இருக்கும் கூடுதல் சிறப்பு.

தங்கம்
தங்கம்
நகைக்கடன் vs நகை விற்பனை; இரண்டில் எது நமக்கு நல்லது தெரியுமா? - பணம் பண்ணலாம் வாங்க - 18

என்றாலும், இது இன்னும் முழுமையாக முறைப்படுத்தப்பட வில்லை என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். பங்குச் சந்தைக் கட்டுப்பாட்டு வாரியமான செபி, சில புரோக்கர்கள் டிஜிட்டல் முறையில் தங்கம் விற்கத் தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது. தவிர, குறுகிய காலத்தில் விற்கும்போது வரி விதிப்புக்கு உட்பட வேண்டியிருக்கும் என்பதையும் மறக்கக் கூடாது.

டிஜிட்டல் முறையில் தங்கம் வாங்குவதில் உள்ள ரிஸ்க்கை எதிர்கொள்ள விரும்பாதவர்கள், சாவரின் கோல்டு பாண்ட் திட்டத்திலோ அல்லது கோல்டு இ.டி.எஃப் திட்டத்திலோ முதலீடு செய்வதே நல்லது என்கிறார்கள் நிபுணர்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு