Published:Updated:

`பாரத் பெட்ரோலியத்தை வாங்க நாங்க ரெடி!' - ரஷ்யாவைச் சேர்ந்த ரோஸ்நெஃப்ட் அறிவிப்பு

ரோஸ்நெஃப்ட்
News
ரோஸ்நெஃப்ட் ( Rosneft )

ரஷ்யாவைப் பூர்வீகமாகக் கொண்ட ரோஸ்நெஃப்ட், இந்தியாவின் இரண்டாவது பெரிய தனியார் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனம் என்பதை இங்கே குறிப்பிட்டாக வேண்டும்!

இந்தியாவின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனமான பாரத் பெட்ரோலியம் (BPCL), ஏர் இந்தியா உட்பட இன்னும் சில பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை தனியாருக்கு விற்கப் போவதாக மத்திய அரசு அறிவித்திருப்பது தெரிந்ததே. இதற்கான அனுமதி வழங்கப்பட்டிருக்கும் சூழலில், ரஷ்யாவின் மிகப்பெரிய எண்ணெய் உற்பத்தி நிறுவனமான ரோஸ்நெஃப்ட் (Rosneft Petroleum Refining Company), பாரத் பெட்ரோலியத்தின் பங்குகளை ஏலத்தில் எடுக்க ஆர்வமாக உள்ளதாக, அந்த நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

பாரத் பெட்ரோலியம்
பாரத் பெட்ரோலியம்
BPCL

ரஷ்யாவைப் பூர்வீகமாகக் கொண்ட ரோஸ்நெஃப்ட், இந்தியாவின் இரண்டாவது பெரிய தனியார் எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய நிறுவனம் என்பதை இங்கே குறிப்பிட்டாக வேண்டும்! மேலும் உலகின் எரிசக்தி சந்தையில் மூன்றாவது பெரிய மற்றும் வேகமாக வளர்ந்து வரும் நிறுவனமாகவும் ரோஸ்நெஃப்ட் உள்ளது. இந்த நிலையில், ரோஸ்நெஃப்ட்டின் மூத்த அதிகாரியான இகோர் செச்சின், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் தர்மேந்திர பிரதானைச் சந்தித்து, BPCL பங்குகளின் விற்பனை தொடர்பாகப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ரோஸ்நெஃப்ட் ஏற்கெனவே நாயரா எனர்ஜி லிமிடெட் (முன்பு எஸ்ஸார் ஆயில் லிமிடெட்) நிறுவனத்தின் 49.13% பங்குகளை வைத்திருக்கிறது. மேலும் குஜராத்தின் வடிநாரில், ஆண்டுக்கு 20 மில்லியன் டன் அளவிலான எண்ணெயை சுத்திகரிப்பு செய்யும் நிலையத்தையும் கொண்டுள்ளது. மேலும் 5,628 பெட்ரோல் பங்க்களையும் நிறுவியிருக்கிறது. எனவே, இதன் தொடர்ச்சியாகத்தான், பாரத் பெட்ரோலியத்தின் பங்குகளை வாங்க ரோஸ்நெஃப்ட் ஆர்வம் காட்டுவதாகக் கூறப்படுகிறது.

சவுதி அராம்கோ
சவுதி அராம்கோ
Saudi Aramco

இந்தியாவின் எண்ணெய் சுத்திகரிப்பில், BPCL 14% பங்கு வகிக்கிறது. நாட்டில் உள்ள மொத்த பெட்ரோல் பங்க்களில் (67,440) நான்கில் ஒரு பகுதியை (25%) பாரத் பெட்ரோலியம் கொண்டுள்ளது. அதன்படி, தற்போது நாட்டில் 15,177 பெட்ரோல் பங்க்கள் மற்றும் 6,011 எல்பிஜி விநியோக மையங்களைத் தன்வசம் கொண்டுள்ளது BPCL. மும்பை, கொச்சின், பினா (மத்தியப் பிரதேசம்), நுமலிகர் (அசாம்) உள்ளிட்ட பகுதிகளில் 4 சுத்திகரிப்பு நிலையங்களையும் கொண்டுள்ளது பாரத் பெட்ரோலியம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இது ஆண்டுக்கு 38.3 மில்லியன் டன் கொள்ளளவுடன் இயங்கிவருகிறது. இதுதவிர 51 எல்பிஜி பாட்லிங் ஆலைகளும் 250 விமான எரிபொருள் நிரப்பு மையங்களும் BPCL வசம் உள்ளன. இந்த நிறுவனத்தின் சந்தை மூலதனம் ரூ.1 லட்சம் கோடியாகும்! இதில் மத்திய அரசின் பங்குமதிப்பு மட்டுமே, ரூ.54,000 கோடி ரூபாய் என்பது கவனிக்கத்தக்கது.

ADNOC
ADNOC
ADNOC

பிபிசில்லைப் பொறுத்தமட்டில், மத்திய அரசின் வசம் உள்ள 53.29% பங்குகளை முழுமையாக வாங்க முன்வரும் நிறுவனத்துக்கே முன்னுரிமை அளிக்கப்படும் எனவும், இதன்மூலமாகக் கிடைக்கும் வருவாயில் தனது எரிபொருள் சில்லறை விற்பனை வலையமைப்பை விரிவுபடுத்தவுள்ளதாகவும் அதிகாரிகள் வட்டாரத்தில் கூறப்படுகிறது. இதனாலேயே பி.பி.சி.எல்-லை வாங்க ரோஸ்நெஃப்ட் மட்டுமல்லாது, சவுதி அரேபியாவின் சவுதி அராம்கோ - ஐக்கிய அரசு எமிரேட்ஸின் ADNOC - போன்ற தனியார் நிறுவனங்களும் ஏலத்தில் எடுக்க ஆர்வம் தெரிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.