Election bannerElection banner
Published:Updated:

மார்ச் 16-ல் IPO வெளியிடும் கல்யாண் ஜூவல்லர்ஸ்... பங்கு விலை என்ன?

கல்யாண் ஜூவல்லர்ஸ் ஐ.பி.ஓ
கல்யாண் ஜூவல்லர்ஸ் ஐ.பி.ஓ

ஆரம்பத்தில் கேரளாவில் ஒரே ஒரு ஷோரூமுடன் தொடங்கு கல்யாண் ஜுவல்லர்ஸ், இன்று 21 மாநிலங்களில் 107 ஷோரூம்களாக வளர்ந்திருக்கிறது!

பிரபல நகைக் கடைகளில் ஒன்றான கல்யாண் ஜுவல்லர்ஸ் புதிய பங்கு வெளியீட்டின் (ஐ.பி.ஓ) மூலம் 1,175 கோடி ரூபாய் நிதி திரட்ட முடிவு செய்திருந்தது. இதற்கான அனுமதியை செபி வழங்கியிருக்கும் நிலையில், வருகிற மார்ச் 16-ம் தேதி ஐ.பி.ஓ வெளியிடுகிறது. இந்த ஐ.பி.ஓ-வில் பங்கெடுக்க நினைக்கும் முதலீட்டாளர்கள் மார்ச் 18-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

Gold
Gold

இந்த வெளியீட்டில் 800 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய பங்குகளும், 375 கோடி மதிப்புள்ள பங்குகள் ஆஃபர் ஃபார் சேல் முறையிலும் விற்பனை செய்யப்படுகின்றன. பங்கு ஒன்றின் விலை 86 - 87 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு முதலீட்டாளர் குறைந்தபட்சம் 172 பங்குகளுக்கு விண்ணப்பிக்க வேண்டும். அதற்குமேல், தேவைப்படுபவர்கள் அதன் மடங்கில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

கல்யாண் ஜுவல்லர்ஸ் நிறுவனம் 1993-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் கேரளாவில் ஒரே ஒரு ஷோரூம் மட்டும் தொடங்கப்பட்ட நிலையில், இன்று அதன் ஷோரூம்கள் 21 மாநிலங்களில் 107 ஷோரூம்களாக வளர்ந்திருக்கின்றன. சர்வதேச அளவில் 30 ஷோரூம்கள் உள்ளன. இவற்றோடு இந்த நிறுவனம் candere.com என்ற இணையத்தின் மூலமாகவும் நகைகளை விற்பனையை செய்துவருகிறது.

கல்யாண் ஜூவல்லர்ஸ்
கல்யாண் ஜூவல்லர்ஸ்

அத்துடன், புதிய ஷோரூம்களைத் திறக்கவும் திட்டமிட்டு வருவதாகவும், இந்தப் புதிய பங்கு வெளியீட்டின் மூலம் திரட்டப்படும் நிதியை அதற்காகப் பயன்படுத்தப் போவதாகவும் கல்யாண் ஜூவல்லர்ஸ் தெரிவித்துள்ளது.

இந்த பங்கு வெளியீட்டினை ஆக்ஸிஸ் கேப்பிட்டல், சிட்டி குரூப் குளோபல் மார்கெட்ஸ் இந்தியா, ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ், எஸ்.பி.ஐ கேப்பிட்டல் மார்க்கெட்ஸ், பி.ஓ.பி கேப்பிட்டல் மார்கெட்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் நிர்வகிக்க உள்ளன.

சமீபத்தில் வெளிவந்த ஐ.பி.ஓ-களுக்கு முதலீட்டாளர்கள் ஏகோபித்த ஆதரவு தந்தனர். அதுபோல, கல்யாண் ஜுவல்லர்ஸ் ஐ.பி.ஓ-வுக்கும் ஆதரவு கிடைக்குமா என்பது அடுத்த வாரத்தில் தெரியும்!

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு