Published:Updated:

யாருக்கு சாதகமாக செயல்படுகிறது மோடி அரசு; கிரிப்டோகரன்சிக்கு எதிராக வழக்கு தொடுத்த வழக்கறிஞர் கேள்வி

கிரிப்டோகரன்சி

ரிசர்வ் வங்கி, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கிரிப்டோகரன்சிகள் அதிக ரிஸ்க் உள்ளவை என்று கூறியிருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் கிரிப்டோகரன்சிகள் மூலமாகத் தீவிரவாத பணப் பரிவர்த்தனையும், பணமோசடி, கறுப்புப் பணத்தை வெள்ளையாக்குதல் போன்ற நடவடிக்கைகளும் நடப்பதாகக் கூறப்படுகிறது.

யாருக்கு சாதகமாக செயல்படுகிறது மோடி அரசு; கிரிப்டோகரன்சிக்கு எதிராக வழக்கு தொடுத்த வழக்கறிஞர் கேள்வி

ரிசர்வ் வங்கி, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கிரிப்டோகரன்சிகள் அதிக ரிஸ்க் உள்ளவை என்று கூறியிருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் கிரிப்டோகரன்சிகள் மூலமாகத் தீவிரவாத பணப் பரிவர்த்தனையும், பணமோசடி, கறுப்புப் பணத்தை வெள்ளையாக்குதல் போன்ற நடவடிக்கைகளும் நடப்பதாகக் கூறப்படுகிறது.

Published:Updated:
கிரிப்டோகரன்சி

கிரிப்டோகரன்சி எனும் டிஜிட்டல் கரன்சி மக்களிடையே அதிக பிரபலமடைந்து வருகிறது. பிட்காயின், எத்ரியம், டோஜ்காயின் உள்ளிட்ட பல நூற்றுக்கணக்கான கிரிப்டோகரன்சிகள் புழகத்தில் உள்ளன. இவற்றில் மக்கள் வயது வித்தியாசமின்றி அனைவரும் ஆர்வமுடன் முதலீடு செய்துவருகிறார்கள். ஆனால், இந்த டிஜிட்டல் கரன்சிகளை யார் உருவாக்குகிறார்கள், யார் நிர்வகிக்கிறார்கள் என்பது எதுவும் தெரியாத நிலையில் எதை நம்பி முதலீடு செய்கிறார்கள் என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது.

ரிசர்வ் வங்கியும் சரி, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் சரி கிரிப்டோகரன்சிகள் அதிக ரிஸ்க் உள்ளவை என்று கூறியிருக் கிறார்கள். அதுமட்டுமல்லாமல் கிரிப்டோரகரன்சிகள் மூலமாக தீவிரவாத பணப் பரிவர்த்தனையும், பணமோசடி, கறுப்புப் பணத்தை வெள்ளையாக்குதல் போன்ற நடவடிக்கைகளும் நடப்பதாகக் கூறப்படுகிறது.

பிட்காயின் - கிரிப்டோ கரன்சி
பிட்காயின் - கிரிப்டோ கரன்சி

இவ்வாறான சட்ட விரோதமான நடவடிக்கைகள், பண மோசடி சம்பவங்கள் நாட்டின் பல பகுதிகளில் நடந்து வருவதையும் பார்க்க முடிகிறது. இத்தகைய சூழலில் கிரிப்டோகரன்சி விளம்பரங்கள் அதிகமாக வெளியிடப்பட்டுவருகின்றன. செயதித்தாள்கள், இதழ்கள், காட்சி ஊடகங்களில் விளம்பரங்கள் செய்யப்பட்டுவருகின்றன. இவற்றுக்கு எதிராக வழக்கறிஞர் அய்யா வழக்கு ஒன்றை சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ளார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதுதொடர்பாக அவரிடம் பேசினோம், "கிரிப்டோகரன்சி எனும் டிஜிட்டல் கரன்சிகளுக்கான மதிப்பு எந்தவித உத்தரவாதமும் இல்லை. அப்படி மதிப்பு உத்தரவாதம் எதுவும் இல்லாத கரன்சி மூலம் பல பிரச்னைகள் உள்ளன. இது நம்முடைய அதிகார பூர்வ நாணயத்துக்கு எதிராகச் செயல்படும் அபாயம் இருக்கிறது. அதோடு தீவிரவாத ஊக்குவிப்புக்கான பணப் பரிவர்த்தனை, கருப்புப் பணத்தை வெள்ளையாக மாற்றுவது, வரியிலிருந்து தப்பிப்பது போன்ற பல சிக்கல்கள் இதில் உள்ளன.

இவையெல்லாம் ஒருபக்கம் இருந்தாலும் மக்களுக்கு இந்த கிரிப்டோகரன்சிகள் குறித்து போதிய தெளிவோ அறிவோ இல்லை. படித்தவர்களுக்கே கிரிப்டோகரன்சிகள் குறித்து புரிந்துகொள்வது கடினமாக இருக்கும் சூழல்தான் நிலவுகிறது. இத்தகைய நிலையில் இது தொடர்பான விளம்பரங்கள் அதிகமாக வந்துகொண்டே இருக்கின்றன. இடையில் கிரிப்டோ விளம்பரங்களில் பிரபலங்கள் நடிக்கக் கூடாது என்ற அறிவிப்பு வந்தது. அது வரவேற்கத்தக்கது.

கிரிப்டோகரன்சி
கிரிப்டோகரன்சி

ஆனால், அதேசமயம் முறைப்படுத்தப்படாத, எந்தவித விதிமுறைகளும் வகுக்கப்படாத, இந்தப் பரிவர்த்தனைகளை கண்காணிக்கவோ, ஒழுங்குபடுத்தவோ எந்த அமைப்பும் இல்லாத நிலையில் எந்தவகையிலும் விளம்பரங்களைச் செய்வதற்கு அனுமதி தரக்கூடாது.

ஆனால், இது ரிஸ்க் உள்ளது என்று சொல்லிவிட்டு ரிசர்வ் வங்கியும், நிதி அமைச்சகமும் ஒதுங்கியிருப்பது எந்த வகையில் நியாயம். ஏற்கெனவே நாட்டில் பல்வேறு நிதி மோசடிகள் நடந்துகொண்டிருக்கின்றன. மக்கள் தெரியாமல் பணத்தை போட்டுவிட்டு ஏமாற்றமடைந்து அவதிக்குள்ளாகின்றனர்.

இந்நிலையில் கிரிப்டோ முதலீடுகளில் பணத்தைப் போட்ட சிலர் தற்கொலை செய்துகொண்ட செய்திகளும் வந்திருக்கின்றன. இவற்றையெல்லாம் அரசு ஏன் கவனிக்க மறுக்கிறது? ஒன்று அரசு கிரிப்டோகரன்சி வர்த்தக செயல்பாடுகளுக்கு தகுந்த விதிமுறைகளை வகுத்து அதைக் கண்காணிக்க வேண்டும்.

வழக்கறிஞர் அய்யா
வழக்கறிஞர் அய்யா

இல்லையென்றால் முற்றிலுமாக அதற்குத் தடை விதிக்க வேண்டும். இப்படியும் இல்லாமல், அப்படியும் இல்லாமல் அரசு செயல்படுவது மக்களைக் குழப்பத்துக்குள்ளாக்குவதாகவே இருக்கிறது.

மக்கள் விளம்பரங்களைப் பார்த்து ஆசைப்பட்டு பணத்தை போட்டுவிடுவார்கள். அவர்களுக்கு இதில் உள்ள பிரச்னைகள் தெரியாது. ஒரே இரவில் கிரிப்டோகரன்சி லாக் செய்யப்பட்டால் அதில் போட்ட முதலீடு அத்தனையும் லாக் ஆகிவிடும். இது மக்களுக்குப் பெரிய ஆபத்தாக முடியும். அந்த நிலைக்கு மக்கள் தள்ளப்படாமல் பாதுகாப்பது அரசின் கடமை.

எனவே எந்தவித விதிமுறைகளும், கண்காணிப்பும் இல்லாத கிரிப்டோகரன்சி தொடர்பான விளம்பரங்களை வெளியிட தடை விதிக்க வேண்டும்" என்று அவர் கூறியுள்ளார்.

கிரிப்டோமைனிங்
கிரிப்டோமைனிங்

வழக்கறிஞர் அய்யா குறிப்பிட்டதுபோல் அரசு கிரிப்டோகரன்சி விஷயத்தில் விரைவில் முடிவெடுக்க வேண்டும். இல்லையெனில் மக்கள் பலரும் இதில் ஈடுபட தொடங்கிவிடுவார்கள். பின்னாளில் ஏதேனும் பிரச்னை எனில் அவர்களின் இழப்புக்கு அரசுதான் பொறுப்பேற்க வேண்டியிருக்கும்.