Published:Updated:

66 வது ஆண்டு நிறைவை கொண்டாடும் எல்.ஐ.சி... இதுவரை செய்தது என்ன ?

LIC Chennai

இந்திய காப்பீடு துறையில் உள்ள பாலிசிகளின் எண்ணிக்கையில் 74.62 சதவிகிதம் எல்.ஐ.சிக்கு சொந்தமானவை. 2021-22 நிதி ஆண்டில் மட்டுமே 2.17 கோடி பாலிசிகளை விற்பனை செய்துள்ளது.

66 வது ஆண்டு நிறைவை கொண்டாடும் எல்.ஐ.சி... இதுவரை செய்தது என்ன ?

இந்திய காப்பீடு துறையில் உள்ள பாலிசிகளின் எண்ணிக்கையில் 74.62 சதவிகிதம் எல்.ஐ.சிக்கு சொந்தமானவை. 2021-22 நிதி ஆண்டில் மட்டுமே 2.17 கோடி பாலிசிகளை விற்பனை செய்துள்ளது.

Published:Updated:
LIC Chennai

எல்.ஐ.சி என்றால் இன்ஷூரன்ஸ், இன்ஷூரன்ஸ் என்றால் எல்.ஐ.சி எனும் அளவுக்கு இரண்டும் பிரிக்க முடியாததாகி விட்டது என்று சொன்னால் மிகையாகாது. கிட்டதட்ட 66 ஆண்டுகளை நிறைவு செய்த எல்.ஐ.சி இந்தியாவின் வளர்ச்சியில் மக்களின் வாழ்வாதாரத்தில் பல முக்கிய மாற்றங்களை நிகழ்த்தியிருக்கிறது.

LIC
LIC

1956 -ல் இந்திய நாடாளுமன்றம் ஆயுள் காப்பீடு சட்டத்தை இயற்றிய போது நிறுவப்பட்டதுதான் எல்.ஐ.சி நிறுவனம். இந்தியாவில் அப்போது செயல்பட்டுக் கொண்டிருந்த 245 தனியார் காப்பீடு நிறுவனங்களையும் ஒருங்கிணைத்து அரசு நிறுவனமாக உருவாக்கப்பட்டதுதான் எல்.ஐ.சி. மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் எல்.ஐ.சி 14 நாடுகளில் தன்னுடைய தொழில் செயல்பாடுகளைத் தற்போது கொண்டுள்ளது.

காப்பீடு சேவைகள் எல்லா தரப்பு மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதுதான் எல்.ஐ.சியின் தாரக மந்திரமாக இருந்தது. 1956 -ல் வெறும் ரூ.5 கோடியில் தொடங்கப்பட்ட எல்.ஐ.சி 66 ஆண்டுகளில் ரூ.42 லட்சம் கோடி மதிப்பு நிறுவனமாக வளர்ந்திருக்கிறது. இன்று பல பன்னாட்டு நிறுவனங்கள் காப்பீடு துறையில் நுழைந்திருந்தாலும், காப்பீடு துறையில் 63.25 சதவிகித பங்களிப்புடன் அசைக்க முடியாத ஜாம்பவனாக எல்.ஐ.சி திகழ்கிறது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

8 பிராந்திய அலுவலகங்கள், 113 மண்டல அலுவலகங்கள், 74 வாடிக்கையாளர் மையங்கள், 2048 கிளைகள், 1564 சாட்டிலைட் அலுவலகங்கள், 44900 பிரீமியம் கலெக்‌ஷன் மையங்கள், ஒரு லட்சத்துக்கும் மேலான ஊழியர்கள், 13.26 லட்சம் ஏஜெண்டுகள் என எல்.ஐ.சி எனும் ஆலமரம் மிகப் பிரம்மாண்டமானது.

எல்ஐசி
எல்ஐசி
LIC

74 வங்கிகளுடன் இணைந்து மக்களுக்குத் தேவையான அனைத்து நிதி சேவைகளையும் வழங்கி வருகிறது. இந்திய காப்பீடு துறையில் உள்ள பாலிசிகளின் எண்ணிக்கையில் 74.62 சதவிகிதம் எல்.ஐ.சிக்கு சொந்தமானவை. 2021-22 நிதி ஆண்டில் மட்டுமே 2.17 கோடி பாலிசிகளை விற்பனை செய்துள்ளது. எல்.ஐ.சியின் முதல் வருட பிரீமியம் வருமானம் மட்டுமே 7.92 சதவிகிதம் வளர்ச்சி கண்டு ரூ.1.98 லட்சம் கோடியாக இருக்கிறது.