Published:Updated:

LIC IPO: எகிறும் எதிர்பார்ப்பு; யாருக்கு என்ன லாபம் தரப் போகிறது எல்.ஐ.சி?

எல்.ஐ.சி

ஆக்சிஸ் செக்யூரிட்டீஸில் மட்டுமே ஐ.பி.ஓ முதலீடுகளுக்காகப் புதிதாக 45,000 கணக்குகளைத் தொடங்கியிருப்பதாகவும் இவர்களில் 40% பேர் புதிய முதலீட்டாளர்கள் என்றும் அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பி.கோப்குமார் கூறியுள்ளார்.

LIC IPO: எகிறும் எதிர்பார்ப்பு; யாருக்கு என்ன லாபம் தரப் போகிறது எல்.ஐ.சி?

ஆக்சிஸ் செக்யூரிட்டீஸில் மட்டுமே ஐ.பி.ஓ முதலீடுகளுக்காகப் புதிதாக 45,000 கணக்குகளைத் தொடங்கியிருப்பதாகவும் இவர்களில் 40% பேர் புதிய முதலீட்டாளர்கள் என்றும் அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பி.கோப்குமார் கூறியுள்ளார்.

Published:Updated:
எல்.ஐ.சி

எங்கு திரும்பினாலும் எல்.ஐ.சி ஐ.பி.ஓ குறித்த செய்திகள்தான் கண்ணில் படுகின்றன. செபியிடம் தாக்கல் செய்த விண்ணப்ப ஆவணத்தில் 5% பங்குகளை விற்கப்போவதாகச் சொல்லியிருந்த நிலையில், தற்போது 3.5% பங்குகளை மட்டுமே விற்பனை செய்ய உள்ளது. ரஷ்யா-உக்ரைன் போர் காரணமாக ஐ.பி.ஓ வெளியீடு தாமதமானதோடு பங்குகளின் அளவும் குறைக்கப்பட்டிருக்கிறது.

ஆனாலும், எல்.ஐ.சி ஐ.பி.ஓ-வுக்கு ஏகோபித்த வரவேற்பு முதலீட்டாளர்களிடமிருந்து வந்துள்ளது. எப்படி, ஏன்?

LIC
LIC

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

எல்.ஐ.சி பங்கு விற்பனையில் கலந்துகொண்டு அந்தப் பங்கை வாங்க வேண்டும் என்பதற்காகவே பலர் புதிதாக டிமேட் கணக்குகளைத் தொடங்கியிருக்கின்றனர். பலர் தங்களுடைய பான் எண்ணை இணைக்க முடியாமல் போனதால் முதலீடு செய்ய முடியுமா என்று தெரியவில்லை என்று கேள்வி எழுப்புகின்றனர்.

ஆக்சிஸ் செக்யூரிட்டீஸில் மட்டுமே ஐ.பி.ஓ முதலீடுகளுக்காகப் புதிதாக 45,000 கணக்குகளைத் தொடங்கியிருப்பதாகவும் இவர்களில் 40% பேர் புதிய முதலீட்டாளர்கள் என்றும் அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பி.கோப்குமார் கூறியுள்ளார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

எல்.ஐ.சி ஐ.பி.ஓ-வுக்கு இவ்வளவு வரவேற்பு கிடைக்க முக்கிய காரணம், இந்திய இன்ஷூரன்ஸ் அது செலுத்திவரும் ஆதிக்கம். 30 கோடிக்கும் மேலான பாலிசிதாரர்கள் எல்.ஐ.சி-யில் உள்ளனர். இந்தியாவில் உள்ள ஐந்தில் மூன்று குடும்பங்களில் எல்.ஐ.சி-யின் சேவை இருந்திருக்கிறது. இன்று பல்வேறு இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் சந்தையைப் பிடிக்க முயற்சி செய்தாலும் எல்.ஐ.சி-யின் இடத்தைப் பிடிக்க எத்தனை ஆண்டுகள் ஆகும் என்றே கணிக்க முடியாது.

எல்.ஐ.சி ஐ.பி.ஓ குறித்து அதன் தலைவர் எம்.ஆர்.குமார் கூறுகையில், ``எல்.ஐ.சி பாலிசிதாரர்களில் இதுவரை 6.5 கோடி பான் எண் இணைக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால், அதில் எத்தனை பேருக்கு டிமேட் கணக்கு உள்ளது என்ற விவரம் தெரியவில்லை.

எம்.ஆர்.குமார், எல்ஐசி தலைவர்
எம்.ஆர்.குமார், எல்ஐசி தலைவர்
M.R.Kumar, LIC chairman

டிமேட் கணக்கு இருப்பவர்கள் ஐ.பி.ஓ-வில் பங்குகளைச் சலுகை விலையில் பெற முடியும். இதில் எத்தனை பேர் பங்குகளை வாங்க விண்ணப்பிப்பார்கள் என்பதும் பின்னர்தான் தெரியும். ஆனாலும், வரவேற்பு நன்றாக உள்ளது. நிச்சயம் பாலிசிதாரர்கள் அனைவரும் எல்ஐசி பங்குகளை வாங்க விரும்புவார்கள்.

எங்களுடைய அடுத்தகட்ட நோக்கமெல்லாம் எல்.ஐ.சி-யில் நம்பிக்கையுடன் முதலீடு செய்யும் முதலீட்டாளர்களுக்கு அந்த நம்பிக்கையைக் காப்பாற்றும் வகையில் நிறுவனத்தை வளர்த்தெடுப்பதுதான். பாலிசி திட்டங்கள், முதலீடுகள் போன்றவற்றில் தீவிர கவனம் செலுத்தி தேவையான மாற்றங்களைச் செய்யவும் தயாராக உள்ளோம். தனியார் இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் வளர்ந்துவரும் நிலையில் போட்டியைச் சமாளித்து சந்தை பங்களிப்பைத் தக்கவைத்துக் கொள்ளவும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறோம்'' என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேலும், ஐ.பி.ஓ வெளியாக இது சரியான நேரமா என்ற கேள்விக்கு பதிலளித்தவர், ``ஆறு மாதத்துக்கு முன் இந்தக் கேள்வியைக் கேட்டிருந்தால் நான் பொறுமையாக இருக்கலாம் என்று சொல்லியிருப்பேன். ஏனெனில், அப்போதுதான் கொரோனா தணிந்துகொண்டிருந்தது.

போர்ச் சூழலும் உருவாகிக்கொண்டிருந்தது. ஆனால், இப்போது கேட்டால் எவ்வளவு காலம் இன்னும் பொறுத்திருப்பது என்றுதான் சொல்ல வேண்டும். காரணம், 2020-ம் ஆண்டு பட்ஜெட்டில் பங்கு விற்பனை தொடர்பான அறிவிப்பை நிதி அமைச்சர் அறிவித்தார்.

அதன்பிறகு இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்டன. எனவே, இப்போது ஐபிஓ வெளியிடுவது குறித்து இரண்டாம் கருத்து என்று எதுவும் இல்லை. நான்காம் காலாண்டு முடிவுகள் வந்திருந்தால் அதன் அடிப்படையில் நிறுவனத்தை மதிப்பீடு செய்திருக்கலாம்.

ஆனால், அதற்காகக் காத்திருந்தால் போர் முடியவும், சந்தை மீண்டும் ஏற்றம் காணவும் வாய்ப்புள்ளது என்பதால் சாதகமான வாய்ப்பைத் தவறவிட்டிருப்போம். இப்போது சரியான நேரம்தான்.

நிச்சயம் ஐபிஓ எதிர்பார்த்தபடி சிறப்பாக நிறைவடையும் என்ற நம்பிக்கை உள்ளது. அதேசமயம் 7.5% பங்குகளை விற்பனை செய்ய திட்டமிட்டிருந்தோம். ஆனால் 5% விற்பனை செய்ய முடிவெடுத்தோம். அதிலும் தற்போது போர் சூழல் காரணமாக குறைத்து 3.5% பங்குகளை விற்க உள்ளோம்'' என்றார்.

IPO
IPO

சந்தையில் பட்டியலான பிறகு சந்தை மதிப்பு அடிப்படையில் இன்ஷூரன்ஸ் பிரிவில் 5-வது பெரிய நிறுவனமாக எல்.ஐ.சி விளங்கும். எனவே, முதலீட்டாளர்கள் தாராளமாக விண்ணப்பிக்கலாம்.

அதே சமயம், கவனமாக இருக்குமாறும் நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். பட்டியலான பிறகு எல்ஐசி பங்கு குறுகிய காலத்தில் கணிக்க முடியாத நகர்வுகளுடன் இருக்கும். நீண்டகாலத்தில் இப்பங்கு டிவிண்ட் வருமானம் தரும் எனவும் அவர்கள் கூறுகிறார்கள்.

பங்கு ஐ.பி.ஓ சந்தையில் பிரீமியம் விலையில் விற்கிறது. எனவே, எல்.ஐ.சி பாலிசிதாரர்கள், முதலீட்டாளர்கள் கவனமும் இப்பங்கில் முதலீடு செய்ய வேண்டும் என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism