Election bannerElection banner
Published:Updated:

16% சம்பள உயர்வு, வாரத்தில் 5 நாள் மட்டுமே வேலை... LIC ஊழியர்களுக்கு ஏன் இந்த திடீர் சலுகை?

எல்.ஐ.சி
எல்.ஐ.சி

கொரோனா தொற்றுக்குப் பிறகு கடந்த ஓர் ஆண்டில் மட்டும் எல்.ஐ.சி பிரீமியம் தொகையில் 60,000 கோடி ரூபாய் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை மூலம் பெறப்பட்டுள்ளது...

சமீபத்தில் எல்.ஐ.சி ஊழியர்கள் அமைப்பு மற்றும் அரசு மத்தியில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் 15% முதல் 16% வரை ஊதிய உயர்வு மற்றும் வாரம் 5 நாள்கள் மட்டுமே வேலை ஆகிய முக்கியக் கோரிக்கைகளுக்கு மத்திய அரசு முழுமையாக ஒப்புதல் அளித்துள்ளது.

lic
lic

இதோடு எல்.ஐ.சி ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள இந்தச் சம்பள உயர்வு, வங்கி ஊழியர்களுக்குச் சம்பள உயர்வு அளிக்கப்படும் வேளையில் அளிப்பதாக அரசு உறுதியளித்துள்ளது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள சம்பள உயர்வு எல்.ஐ.சி நிறுவனத்தின் 1.14 லட்சம் ஊழியர்களுக்குப் பொருந்தும் காரணத்தால், இந்நிறுவனம் சம்பளத்துக்காகச் செலவு செய்யும் தொகை 2,700 கோடி ரூபாயாக உயரும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

எல்.ஐ.சி ஊழியர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கப்பட்டு இருந்தாலும் இணையம் மூலம் பிரீமியம் செலுத்தும் தொகை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் ஊழியர்கள் வேலை செய்யும் நேரத்தைக் குறைக்கும் ஒரு நடவடிக்கையாகத்தான் வாரத்தில் ஐந்து நாள் வேலை என்கிற அறிவிப்பை எல்.ஐ.சி ஊழியர்கள் பார்க்கிறார்கள்.

LIC Building in Chennai
LIC Building in Chennai
Photo: Vikatan / Kalimuthu.P
எல்.ஐ.சி-யின் 64-வது பிறந்தநாள், பங்குகளை விற்கப்போகும் அரசு... என்னாகும் எல்.ஐ.சியின் எதிர்காலம்?

கடந்த ஓர் ஆண்டில் மட்டும் எல்.ஐ.சி பிரீமியம் தொகையில் 60,000 கோடி ரூபாய் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை மூலம் பெறப்பட்டிருக்கிறது. இதனால் புதிதாக பேமென்ட் கேட்வே பயன்பாட்டுக்கு 'பேடிஎம்' நிறுவனத்துடன் எல்.ஐ.சி இணைந்து செயல்படப்போவதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு