Published:Updated:

காப்பீடு துறையில் கெத்து காட்டும் எல்.ஐ.சி; மார்க்கெட் ஷேர் 68.57% ஆக உயர்வு

எல்.ஐ.சி பங்கு விலை

சமீபத்தில் ஐபிஓ வெளியாகி எல்.ஐ.சி பங்கு பங்குச் சந்தையில் பட்டியலானது. ஐபிஓ விலையை விட விலை குறைந்து வர்த்தகமாகி முதலீட்டாளர்களை ஏமாற்றத்துக்குள்ளாக்கிய நிலையில் தற்போது இதன் மார்க்கெட் ஷேர் அதிகரித்துள்ளது பாசிட்டிவான விஷயமாக உள்ளது.

நாட்டின் வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றிய சில நிறுவனங்களில் எல்.ஐ.சிக்கு எப்போதுமே முக்கிய இடமுண்டு. கடந்த 40 ஆண்டுகளாக காப்பீடு துறையில் முன்னணி இடத்தை தக்கவைத்திருக்கும் எல்.ஐ.சி. தொடர்ந்து அந்த இடத்தை விடாமல் கெத்து காட்டிவருகிறது.

2021 ஜூலை மாத நிலவரப்படி காப்பீடு துறையில் எல்.ஐ.சி நிறுவனத்தின் பங்களிப்பு 65.11 சதவிகிதமாக இருந்தது. இது 2022 ஜூலை மாதத்தில் 68.57 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.

எல்.ஐ.சி
எல்.ஐ.சி

கடந்த பத்தாண்டுகளில் பல தனியார் நிறுவனங்கள், சர்வதேச நிறுவனங்கள் காப்பீடு துறையில் களம் இறங்கி உள்ளன. ஆனாலும் காப்பீடு துறையில் எல்.ஐ.சி நிறுவனத்தின்இடத்தைப் பிடிக்க அவற்றால் முடியவில்லை.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதுமட்டுமல்லாமல் புதிய பிரீமியம் வருமானத்திலும் சிறப்பான வளர்ச்சியைக் கண்டுள்ளது. கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் ரூ.12,030 கோடியாக இருந்த புதிய பிரீமியம் வருமானம் இந்த ஆண்டின் ஜூலை மாதத்தில் இரண்டு மடங்காக உயர்ந்து ரூ.29,116 கோடியாக உள்ளது.

எல்.ஐ.சி
எல்.ஐ.சி
vikatan

சமீபத்தில் ஐபிஓ வெளியாகி எல்.ஐ.சி பங்கு பங்குச் சந்தையில் பட்டியலானது. ஐபிஓ விலையை விட விலை குறைந்து வர்த்தகமாகி முதலீட்டாளர்களை ஏமாற்றத்துக்குள்ளாக்கிய நிலையில் தற்போது இதன் மார்க்கெட் ஷேர் அதிகரித்துள்ளது பாசிட்டிவான விஷயமாக உள்ளது.

949 ரூபாய்க்கு ஐபிஓ வெளியிட்ட இப்பங்கின் விலை தொடர்ந்து சரிவடைந்து 650 என்ற நிலை வரை இறக்கம் கண்டது. தற்போது சற்று ஏற்றம் கண்டு 684 ரூபாய் என்கிற அளவில் வர்த்தகமாகி வருகிறது.