Published:Updated:

எல்.ஐ.சி-யின் புதிய திட்டம் Dhan Sanchay: மொத்தமாக அல்லது பகுதியாக இழப்பீடு பெறலாம்!

எல்ஐசி ( LIC )

இது பங்குச் சந்தையுடன் இணைக்கப்படாத, தனிநபர், சேமிப்பு காப்பீட்டுத் திட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தில், அவசரத் தேவைக்கு பாலிசி தொகையில் இருந்து கடன் பெற்றுக் கொள்ளும் வசதியும் உள்ளது. பாலிசி காலத்துக்கு ஏற்ப, 3 வயது முதல் இத்திட்டத்தில் சேர முடியும்.

இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனம் (எல்ஐசி) 'தன் சஞ்சய்' (Dhan Sanchay) என்ற பெயரில் புதிய ஆயுள் காப்பீட்டு திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இது பங்குச் சந்தையுடன் இணைக்கப்படாத, தனிநபர், சேமிப்பு காப்பீட்டுத் திட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது பாலிசிதாரர்களுக்கு காப்பீடு மற்றும் சேமிப்பை வழங்குகிறது. இது முதிர்வு காலத்தில் உத்தரவாதமான வருவாயை வழங்கும் திட்டமாகும்.

எல்.ஐ.சி
எல்.ஐ.சி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்த புதிய திட்டம், 5 முதல் அதிகபட்சமாக 15 ஆண்டு காலத்துக்கு கிடைக்கிறது. பாலிசி பிரீமியத்தை, பாலிசிதாரர் ஒரே தவணையாகவோ, தங்களுக்கு ஏற்ற வகையிலோ செலுத்தும் வசதி உள்ளது. பாலிசிதாரர் எதிர்பாராத வகையில் இறந்துவிட்டால், அவர் தேர்வு செய்தபடி அவரது குடும்பத்துக்கு இழப்பீட்டு தொகை மொத்தமாகவோ, 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை குறிப்பிட்ட தொகையாகவோ வழங்கப்படும்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அவசரத் தேவைக்கு, பாலிசி தொகையில் இருந்து கடன் பெற்றுக் கொள்ளும் வசதியும் உள்ளது. பாலிசி காலத்துக்கு ஏற்ப, 3 வயது முதல், பாலிசி திட்டத்தில் சேர முடியும். எல்ஐசி முகவர்கள் மூலமோ, கிளைகள் மூலமோ, சேவை மையங்கள் மூலமோ இந்த பாலிசி திட்டத்தில் சேர முடியும். www.licindia.in என்ற இணையதளம் மூலமும், இந்த பாலிசி திட்டத்தில் சேரலாம்.

புதிய பாலிசியை எல்ஐசி நிறுவன  சேர்மன் எம்.ஆர்.குமார் வெளியிட்டார். உடன் நிர்வாக இயக்குநர்கள் மற்றும் உயர் அதிகாரிகள்.
புதிய பாலிசியை எல்ஐசி நிறுவன சேர்மன் எம்.ஆர்.குமார் வெளியிட்டார். உடன் நிர்வாக இயக்குநர்கள் மற்றும் உயர் அதிகாரிகள்.

தன் சஞ்சை என்ற இந்த புதிய பாலிசியை, எல்ஐசி நிறுவனத்தின் சேர்மன் எம்.ஆர்.குமார் வெளியிட்டார். இந்த நிகழ்வின் போது, நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism