Published:Updated:

எல்.ஐ.சி பங்கு விலை எப்போது உயரும்? முன்னணி பங்கு தரகு நிறுவனத்தின் ஆய்வு சொல்வதென்ன?

எல்.ஐ.சி பங்கு விலை

எல்.ஐ.சி நிறுவனப் பங்கு வெளியீட்டைத் தாங்கிப் பிடித்தது சிறு முதலீட்டாளர்கள் என்றால், அது மிகையாகாது. பங்கு விலை 20% வரை குறைந்தாலும், மீண்டும் கூடிய விரைவில் உயர்ந்துவிடும் என்பது சிறு முதலீட்டாளர்களின் நம்பிக்கையாக உள்ளது.

எல்.ஐ.சி பங்கு விலை எப்போது உயரும்? முன்னணி பங்கு தரகு நிறுவனத்தின் ஆய்வு சொல்வதென்ன?

எல்.ஐ.சி நிறுவனப் பங்கு வெளியீட்டைத் தாங்கிப் பிடித்தது சிறு முதலீட்டாளர்கள் என்றால், அது மிகையாகாது. பங்கு விலை 20% வரை குறைந்தாலும், மீண்டும் கூடிய விரைவில் உயர்ந்துவிடும் என்பது சிறு முதலீட்டாளர்களின் நம்பிக்கையாக உள்ளது.

Published:Updated:
எல்.ஐ.சி பங்கு விலை

புதிய பங்கு மூலதன வெளியீட்டைத் தொடர்ந்து பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட எல்.ஐ.சி நிறுவனத்தின் பங்குகள் விலை தற்போது ரூ.760 என்ற அளவில் இறங்கி வர்த்தகமாகி வருகிறது.

பங்கு வெளியீட்டுக்குப் பிறகு, கடந்த இரண்டு வாரங்களில் எல்.ஐ.சி பங்கு 150 ரூபாய்க்கு மேல் சரிவை சந்தித்துள்ளது. எல்.ஐ.சி நிறுவனத்தில் அதிக முதலீடு செய்த சிறு முதலீட்டாளர்கள் இரண்டு வாரங்களில் தமது முதலீட்டில் அதிகபட்சமாக 20 சதவிகிதத்தை இழந்துள்ளனர். ஒரு சிறு முதலீட்டாளர் சென்ற மாதம் இரண்டு லட்சம் ரூபாய் எல்.ஐ.சி பங்கு வெளியீட்டில் முதலீடு செய்திருந்தால் அவருக்கு இரண்டு வாரங்களில் 30,000 ரூபாய் நஷ்டம் ஏற்பட்டிருக்கக் கூடும்.

எல்.ஐ.சி நிறுவனத்தை ஆய்வு செய்து பரிந்துரை செய்துள்ள எம்.கே குளோபல் பங்கு தரகு நிறுவனம் இன்னும் ஓர் ஆண்டுக்குள் எல்.ஐ.சி நிறுவனத்தின் பங்கு ரூ. 875 வரை உயரும் என்று கணிப்பு வெளியிட்டுள்ளனர். மேலும், அவர்கள் தமது குறிப்பில் எல்.ஐ.சி என்னும் யானையால் ஆட முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

எல்.ஐ.சி நிறுவனப் பங்கு வெளியீட்டைத் தாங்கிப் பிடித்தது சிறு முதலீட்டாளர்கள் என்றால், அது மிகையாகாது. பங்கு விலை 20% வரை குறைந்தாலும் மீண்டும் கூடிய விரைவில் உயர்ந்துவிடும் என்பது சிறு முதலீட்டாளர்களின் நம்பிக்கையாக உள்ளது.

ஆனால், எம்.கே.குளோபல் நிறுவனம் எல்.ஐ.சி நிறுவனத்தால் அதே துறையில் உள்ள பிற தனியார்துறை நிறுவனங்களுக்கு இணையாக வளர்ச்சி பெற முடியாது என்று குறிப்பிட்டுள்ளது. அந்த நிறுவனத்தின் கணிப்பு உண்மையாகும்பட்சத்தில் இன்னும் ஓர் ஆண்டுக் காலம் காத்திருந்தாலும் எல்ஐசி நிறுவன பங்கு விலை அதன் ஐ.பி.ஓ விலைக்கு இணையாக உயராது என்பதை நம்மால் உணர முடிகிறது.

எல்.ஐ.சி பங்கு விலை
எல்.ஐ.சி பங்கு விலை

பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சி மட்டும் அதன் ஐ.பி.ஓ விலையைவிட குறைவாகத் தற்போது வர்த்தகம் ஆகவில்லை. 2010-ம் ஆண்டு முதல் 22 பொதுத்துறை நிறுவனங்கள் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளன. அதில் பாதிக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் அதன் பங்கு வெளியிட்டு விலையைவிட தற்போது குறைவாக வர்த்தகமாகி வருகிறது. இதன் மூலம் பத்து ஆண்டுகள் காத்திருந்தாலும் பல நிறுவனங்கள் அதன் மூலதன வெளியீட்டு விலையை எட்டவில்லை என்பதை அறிய முடிகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பொதுத்துறை நிறுவனங்களைப் பொறுத்தவரை அரசு பங்கு வெளியீடு மூலம் முதலீட்டாளர்களிடம் பணத்தை மட்டும் பெற்றுக்கொள்கிறது. அவ்வாறு திரட்டப்படும் நிதியானது பெரும்பாலும் நிறுவனத்தின் வளர்ச்சித் திட்டங்களுக்கு பயன்படுத்தப்படுவது இல்லை. அரசின் வருமானத்தில் சேர்க்கப்பட்டு பிற அரசு திட்டங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. இது பொதுத்துறை நிறுவனங்களுக்குப் பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

எல்.ஐ.சி நிறுவனத்தைப் பொறுத்தவரை ஆயுள் காப்பீட்டுத் துறையில் 60 சதவிகிதத்துக்கும் மேல் வாடிக்கையாளர்களை தன்னிடம் கொண்டுள்ளது. ஆனால், 10 ஆண்டுகளுக்கு முன்பு 80 சதவிகிதத்துக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் எல்.ஐ.சி நிறுவனத்திடம் இருந்தனர். 10 ஆண்டுகளில் எல்.ஐ.சி நிறுவனம் தமது 20 சதவிகித வாடிக்கையாளர்களைத் தனியார் நிறுவனங்களிடம் இழந்துள்ளது.

எல்ஐசி ஐபிஓ
எல்ஐசி ஐபிஓ

மேலும், சென்ற வாரத்தில் காலாண்டு முடிவுகளை வெளியிட்ட எல்.ஐ.சி நிறுவனம் 2,400 கோடி ரூபாய் அளவுக்கு லாபத்தை ஈட்டியுள்ளது. இந்த நிறுவனத்தின் ஆண்டு லாபம் 4,000 கோடி ஆக உள்ளது. ஆனால், எல்.ஐ.சி நிறுவனத்தைவிட பத்து மடங்கு மார்க்கெட் மதிப்பு குறைவாக உள்ள நிறுவனங்கள் பல இதைவிட அதிக லாபத்தை வழங்கி வருகின்றன.

சென்ற காலாண்டு முடிவுகளின்போது எல்.ஐ.சி நிறுவனம் நஷ்டம் அடைந்திருக்கும் முதலீட்டாளர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் நல்ல டிவிடெண்ட் வழங்கும் என்று எதிர்பார்ப்பு சந்தையில் நிலவியது. ஆனால், அதுவும் பொய்த்துப் போகும்படி அந்த நிறுவனம் மிகக் குறைவாக ரூ.1.50 மட்டுமே டிவிடெண்ட் வழங்கியிருக்கிறது. இதுவும் அந்த நிறுவனத்தின் பங்கு விலை கணிசமாகக் குறைய காரணமாக உள்ளது.

கடந்த 18 மாதங்களாக வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நமது பங்குச் சந்தையில் தொடர்ந்து பங்குகளை விற்று வெளியேறி வருகின்றனர். அவர்கள் கடந்த 14 ஆண்டுகளில் செய்திருந்த மொத்த முதலீட்டில் சரி பாதி அளவை கடந்த ஒரு வருடத்தில் நமது பங்கு சந்தையில் இருந்து எடுத்துச் சென்றுவிட்டனர். அவ்வளவு அதிகமான பங்குகள் விற்கப்பட்டாலும் இந்தியப் பெரு முதலீட்டாளர்கள் மற்றும் சிறு முதலீட்டாளர்கள் முதலீடு காரணமாக பங்குச் சந்தை கடுமையான வீழ்ச்சியை சந்திக்கவில்லை. நோய்த்தொற்றுக் காலத்தில் இந்தியர்களில் பலர் வீட்டில் இருந்து பணி மேற்கொண்டனர்.

முதலீடு
முதலீடு

அவர்களில் கணிசமானோர் தமது முதலீட்டில் கணிசமான தொகையை பங்குச் சந்தையில் முதலீடு செய்துள்ளனர். மேலும், மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டு முறையில் மாதம்தோறும் பத்தாயிரம் கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு மேற்கொள்ளப் படுகிறது. இந்த நிலையில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தொடர்ந்து மேலும் வெளியேறும்போது இந்திய முதலீட்டாளர்கள் எத்தனை காலம் சந்தையைத் தாங்கிப் பிடிக்க முடியும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து பங்குச் சந்தை நஷ்டத்தைத் தரும் பட்சத்தில் சில்லறை முதலீட்டாளர்களு பங்குகளை விற்றால் முதலுக்கே மோசமாக முடிந்துவிடும். அரசு பங்குச் சந்தையைப் பணம் காய்க்கும் மரமாகப் பார்க்கிறது. நமது நாட்டில் மட்டும்தான் பங்குகள் வாங்கி நஷ்டத்தில் விற்றாலும் அரசுக்கு வரி செலுத்தும் நிலை உள்ளது. பங்குகளை வாங்கினாலும், விற்றாலும் அரசுக்கு செக்யூரிட்டி டிரான்சாக்சன்ஸ் வரி என்ற பெயரில் வருவாய் கிடைக்கும்.

எல்.ஐ.சி நிறுவனப் பங்குகளை அதன் ஐ.பி.ஓ விலையில் வாங்கி அதைத் தற்போது 150 ரூபாய் நஷ்டத்தில் விற்றாலும் அரசுக்கு 400 ரூபாய் வரி கிடைத்துவிடும். இதற்கு மாறாக மற்றொரு பங்கை லாபத்தில் விற்றாலும் கூடுதலாக மூலதன ஆதாய வரி செலுத்த வேண்டும். அதனால் பங்குச் சந்தையில் நடைபெறும் ஒவ்வொரு செயல்பாடும் அரசுக்கு வருமானத்தை ஈட்டித்தரும். லாப நஷ்டம் என்பது முதலீட்டாளர்களுக்கு மட்டும்தான். அரசுக்கு எப்போதும் வரி வருவாய் கிடைத்துவிடும்.

எல்.ஐ.சி பங்கு மூலதன வெளியீட்டுக்குப் பிறகு, உண்மையான சுய சார்பு இந்தியா பங்குச் சந்தையில் ஏற்பட்டுள்ளது என்று அரசு சார்பில் பெருமிதத்துடன் தெரிவிக்கப்பட்டது. சிறு முதலீட் டாளர்கள் அதிக அளவில் முதலீடு செய்ததைத்தான் அரசு இவ்வாறு குறிப்பிட்டது. ஆனால், அந்தச் சிறு முதலீட்டாளர் களுக்கு அரசு குறைந்த அளவிலாவது உதவிட வேண்டும் என்ற எண்ணம் பெரும்பாலான சிறு முதலீட்டாளர்களிடம் உள்ளது.

முதலீடு
முதலீடு

செக்யூரிட்டி டிரான்சாக்சன் டாக்ஸ் என்பது பங்குச் சந்தையில் கிடைக்கும் லாபத்துக்கு எந்த வரியும் விதிக்கப்படாத நிலையில் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால், 2017-ம் ஆண்டு பங்குகளுக்கும் மூலதன வரி அறிமுகம் செய்யப்பட்டது. அதன் பிறகும் தொடர்ந்து செக்யூரிட்டி டிரான்சாக்சன் டாக்ஸ் வசூலிக்கப்படுகிறது. இதன் மூலம் முதலீட்டாளர்கள் தமக்கு கிடைக்கும் லாபத்தில் 30 சதவிகிதத்துக்கும் மேல் வரி செலுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், ஆப்சன் வர்த்தகத்திலும் மிக அதிகமான வரி வசூலிக்கப்படுகிறது.

பங்குச் சந்தை நீண்ட கால வளர்ச்சிக்கு சிறு முதலீட்டாளர்களின் பங்களிப்பு மிக முக்கியமானதாகும். அமெரிக்கா போன்ற நாடுகளில் மிக அதிக அளவிலான மக்கள் பங்குச் சந்தையில் முதலீடு செய்துள்ளனர். நமது நாட்டில் பங்குச் சந்தை முதலீடு 5 சதவிகிதத்துக்கும் குறைவாகவே உள்ளது. பங்குச் சந்தை முதலீட்டை ஊக்கப்படுத்த அரசு தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதுதான் சிறு முதலீட்டாளர்களை பங்குச் சந்தை நோக்கி ஈர்க்கும் யுத்தி ஆகும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism