நடப்பு ஆண்டின் மார்ச் 10-ம் தேதி எல்.ஐ.சி ஐ.பி.ஓ வெளியிடப்படும் எனச் சொல்லப்பட்டிருந்த நிலையில், உக்ரைன் - ரஷ்யா போர் காரணமாக இந்திய பங்குச் சந்தைகள் பெரும் சரிவைச் சந்திந்தன. இந்த நிலையில், எல்.ஐ.சி ஐ.பி.ஓ வெளியிடுவது சாதகமாக இருக்காது என்பதை உணர்ந்து, மத்திய அரசாங்கம் அதைச் சிறிது காலத்துக்கு ஒத்திவைத்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
தற்போது இந்திய பங்குச் சந்தைகள் மீண்டும் ஏற்றப் போக்கில் காணப்படுவதால், நடப்பு மாதத்தில் எல்.ஐ.சி ஐ.பி.ஓ வெளியாகும் என்கிற தகவல் வெளியாகி இருக்கின்றன. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி மற்றும் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோர் கொண்ட அமைச்சரவைக்குழு எல்.ஐ.சி ஐ.பி.ஓ வெளியீட்டுக்கான தேதிகளை அரசுக்கு சமர்ப்பித்துள்ளதாகத் தெரிகிறது.
இதன் அடிப்படையில், நடப்பு மாதத்தின் மூன்றாவது வாரத்தில் அல்லது இறுதி வாரத்தில் எல்.ஐ.சி ஐ.பி.ஓ வெளியாகலாம் எனத் தகவல் வெளியாகியிருக்கிறது. அதிகபட்சமாக மே மாதம் 12-ம் தேதிக்குள் எல்.ஐ.சி ஐ.பி.ஓ வெளியிடப்படலாம் எனவும் சொல்லப்படுகிறது.
இந்த ஐ.பி.ஓ-வில் எல்.ஐ.சி-யின் பங்குகளை வாங்க பல முதலீட்டாளர்கள் ஆர்வத்துடன் இருக்கிறார்கள். எல்.ஐ.சி பாலிசிதாரர்களுக்கு 10% ஒதுக்கீடு கிடைக்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது

இந்தப் பங்கு முதலீட்டில் பங்கேற்க விரும்பும் பாலிசிதாரர்கள் பான் கார்டு, ஆதார் கார்டு விவரங்களை 2022 பிப்ரவரி 28 அப்டேட் செய்திருக்க வேண்டும் என்று எல்.ஐ.சி நிறுவனமும் அறிவித்துள்ளது.