Published:Updated:

லாக்டௌன் காலத்தில் நீங்கள் எடுத்த சபதம் என்ன..? வாசகர்களின் கமென்ட்ஸ்...

I N T E R A C T I O N

பிரீமியம் ஸ்டோரி

கொரோனா லாக்டௌன் காலத்தில் ‘இனி இப்படித்தான் இருக்க வேண்டும், அப்படித் தான் இருக்க வேண்டும்’ என்றெல்லாம் புதிய முடிவுகளைச் செய்திருப்போம். பொருளாதார ரீதியில் அப்படி நீங்கள் எடுத்த சபதம் என்ன என்று சொல்லுங்கள்’’ என்று நாணயம் விகடன் ஃபேஸ்புக் (https://www.facebook.com/NaanayamVikatan) மற்றும் டிவிட்டர் (https://twitter.com/NaanayamVikatan) பக்கங்களில் கேட்டிருந்தோம். இதற்கு வாசகர்கள் கமென்டுகள் இனி...

“நகரம் சார்ந்து இருந்ததால்தானே இத்தனை இன்னல்களை நான் அனுபவிச்சேன். கிராமங்களில் எல்லாம் பெருசா எந்த பாதிப்பும் இல்லைங்க. என் பாட்டி எல்லாம் வழக்கம்போல எந்தக் கவலையும் இல்லாம கிராமத்துல இருக்காங்க. ஆடு, மாடு, கோழி எல்லாம் வளர்க்குறாங்க. சொந்த வீடு, வாடகை இல்லை. தனக்குத் தேவையான காய்கறிகளை எல்லாம் தோட்டத்துல போட்டுகிட்டாங்க. கைச்செலவுக்குப் பால் கறந்து ஊத்தி, வருமானம் பாத்தாங்க. முக்கியமா வாழ்க்கையை சுயசார்புல அழகா ரன் பண்ணுறாங்க. அவரவர் ஊர்களிலேயே வாழ்க்கையை அழகா ரன் பண்ண லாம் என்பதை லாக்டௌனில் உணர்ந்துகொண்டேன். எனக்கு சிட்டியில நிலம் வாங்கி வீடு கட்ற ஐடியா இல்லை. கிராமங்களிலேயே நெட்வெர்க் நல்லா கிடைக்குது. அங்கயே மார்க்கெட்ல இன்வெஸ்ட் பண்ணலாம், டிரேட் பண்ணிக்கலாம். பேங்க் வசதி, ஆன்லைன் வசதி எல்லாமே இருக்கு என் கிராமத்துல. சொந்த ஊரே சிறப்பு, அங்கயே செட்டில் ஆகலாம்னு முடிவு பண்ணிட் டேங்க”னு சொல்லிருக்காரு சுரேஷ் நந்தகுமார். பேஷ்.... பேஷ்..!

“யாரும் சிரிக்காதீங்க... நான் மாதம் ஒருமுறை மேக்கப்புக்கு செலவிடுவேன். அதை அநாவசியமான செலவாக இப்போது உணர்வதால், அவசியம் தேவை என்றால் மட்டுமே மேக்கப்புக்கு செலவு செய்ய சபதம் செய்துள்ளேன்” என்று கமென்ட் பண்ணிருக்காங்க வாணி. நல்ல முடிவு மேடம்..!

லாக்டௌன் காலத்தில் நீங்கள் எடுத்த சபதம் என்ன..? வாசகர்களின் கமென்ட்ஸ்...

“நாம் வீட்டில் இருந்தாலும் வருமானம் தடையின்றி வர வேண்டும். பணம், பணத்தைச் சம்பாதிக்க வேண்டும். ஆகவே, மியூச்சுவல் ஃபண்ட், ஷேர் மார்க்கெட்டுல முதலீடு செய்ய முடிவெடுத்துருக்கேன்” என்று சொல்லிருக்காரு பிரசன்ன நாராயண சாமி. அருமை ஜி!

“இனிமேல் வாரத்தில் இரண்டு நாள்கள் ஷாப்பிங்லாம் பண்ணவே கூடாதுனு முடிவெடுத்துட்டேன்”னு சொல்லிருக்காரு மணிகண்டன். பலே, பலே...

“லாக்டௌன் காலத்தில் என்.ஐ.எஸ்.எம்மில் மியூச்சுவல் ஃபண்ட் டிஸ்ட்ரிபியூட்டர் தேர்வை எழுதி தேர்ச்சி அடைந்தேன். இனி இதுபோன்ற இக்கட்டான சூழலையையும் வளர்ச்சிக்குப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்துள்ளேன்”னு சொல்லிருக்காரு தர் சாரதி. ஆல் தி பெஸ்ட் சார்...

“சிகரெட் பிடிக்கிறதை விட்டுட்டேன். வீட்ல இருக்கிறதால சிகரெட் பிடிக்க முடியாது. குழந்தை கள்கூட வீட்டில் இருக்கிறதால‌ நான் இந்தப் பழக்கத்தை விட்டொழிச் சிட்டேன். இதனால ஒருநாளைக்கு எனக்கு 40 ரூபாய் சேவ் ஆகுது”னு சொல்லிருக்காரு கீரனூரான் தங்கையா. ஹெல்த் இஸ் வெல்த்!

“லாக்டௌன் காலத்துல வெளியில் ஹோட்டல்களில் சாப்பிடுவதில்லை. இதனால் ஏகப்பட்ட தொகை மிச்சமாகிறது. அதனால இனிமேல் ஹோட்டல்ல சாப்பிடுவதைக் குறைச்சிக்கணும்னு முடிவெடுத்துருக்கேன்”னு சொல்லி ருக்காரு தீபக். வாரே வா...

“ஆறு மாதங்களுக்குத் தேவையான நிதியைச் சேர்த்து வைத்திருந்தால் அவசரகாலத்துக்குப் போதும் என்ற நிலை இப்போது மாறிவிட்டது. அவசர கால நிதி மற்றும் சேமிப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்துட்டேன். அதிகமா சேமிக்க முடிவு எடுத்துள்ளேன்”னு சொல்லிருக்காரு தில்லை மகேந்திரன். வாவ்..!

வாசகர்களே, நீங்க என்ன சபதம் எடுத்திருக்கீங்க?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு