Published:Updated:

“கடந்த ஆண்டு லாக்டௌன்ல இதைதான் கத்துக்கிட்டோம்!” அனுபவம் பேசும் வாசகர்கள்

I N T E R A C T I O N

பிரீமியம் ஸ்டோரி

கொரோனா இரண்டாம் அலையைத் தொடர்ந்து தமிழகத்தில் மீண்டும் முழுநேர லாக்டௌன் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. சென்ற வருடமும் இதே போன்ற தொரு சூழல் வந்தபோது நீங்கள் கற்றுக்கொண்ட பாடம் என்ன என்று நாணயம் விகடன் ஃபேஸ்புக் (https://www.facebook.com/NaanayamVikatan) மற்றும் ட்விட்டர் (https://twitter.com/NaanayamVikatan) பக்கங்களில் கேட்டோம். அதற்கு வாசகர்கள் அளித்த கமென்டுகள் இனி.

“மருத்துவமனையிலதான் வாழ்க்கையின் நிலையில்லாத் தன்மை புரிஞ்சுது. நம்மை நம்பி இருப் போருக்குப் பாதுகாப்புக்காக டேர்ம் லைஃப் இன்ஷூரன்ஸ் எடுத்தேன். இதுவரை பணத்தைக் கையாளுறதுல நான் செய்த தவறுகளைத் திருத்திக் கிட்டேன். எல்லாத்துக்கும் மேலே முதலீடு செய்யணும்னு கத்துகிட்டேன். தினமும் உடற்பயிற்சி, தொழிலுக்குத் தேவையான திறமைகளை வளர்க்க 40 நிமிடம் செலவழிக்கிறேன்’’ என தன் அனுபவங்களை உணர்வுப் பூர்வமா சொல்லியிருக்கிறார் மஹி. சூப்பர்!

சேமிப்பு
சேமிப்பு

“அவசரகால நிதி என்ற ஒன்று தேவை எனப் புரிய வைத்தது போன லாக்டௌன். இப்போது சம்பளத்தில் 10% சேமிக்குறேன். நம் உடல் நலத்தையும் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதைப் புரிந்துகொண்டு தினமும் ஒரு மணி நேரம் யோகா செய்கிறேன்”னு சொல்லியிருக்கிறார் பிரசன்ன நாராயணசாமி. வாவ்..!

“தினமும் 1, 2, 3 ரூபாய்கள் என்று, 365-வது நாள் அன்று 365 ரூபாய் என்று சேமித்தால், வருட முடிவில் 60,000-க்கு மேல் பணம் இருக்கும். முயன்று பாருங்கள்’’ என்று ஐடியா கொடுத்திருக்கிறார் கி.பார்த்தசாரதி. நோட் பண்ணிக்கிறோம் சார்.

“வங்கிகளில் உள்ள கடன்களை மிக விரைவாக அடைப்பது, கூடுமானளவு கையில் பணம் இருந்தால் அதற்குத் தகுந்தாற்போல் தொழில் மற்றும் வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்வது, தேவையில்லாத ஆடம்பரச் செலவுகளைக் குறைப்பது எனப் பல விஷயங்களைக் கற்றுக் கொண்டேன். அவசரத்துக்கு என்று சிறு பணத்தைச் சேமித்து வைப்பது நல்லது. தற்சார்பு வாழ்க்கை முறையைப் பின்பற்ற வேண்டும் என்பதே நான் கற்றுக்கொண்ட பெரிய பாடம்”னு சொல்லிருக்காரு மோகன். வாழ்க்கைப் பாடம் சார்!

“வீட்டுல இருக்கோம்’னு வித்தியாசமா ஸ்நாக்ஸ் செஞ்சு அதை வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்ல வச்சு பல பேர் வயித்தெரிச்சல வாங்கிக் கொட்டி, உடம்பையும் மனசையும் கெடுத்துக்கிட்டதுதான் மிச்சம். இந்தத் தடவை பார்த்து சூதானமா நடந்துக்கணும்”னு சொல்லிருக்காங்க வாணி. உண்மைதான் மேடம்!

“துணி, நகைகள், காஸ்மெடிக்ஸ்,‌ வெளிஉணவுகளைத் தவிர்க்கலாம். அத்தியாவசிய செலவு தவிர, வேறு எதற்கும் செலவு செய்வதில்லை. வீட்டு வேலைக்கு ஆட்கள் இல்லை. முடிந்தவரை மின்சாரத்தைச் சேமிக்கிறோம்”னு சொல்லிருக்காங்க மாலதி. ‘கீப் இட் அப்’ மேம்!

“முன்னாடி 100% சம்பளத்தில் 15% சேமித்தேன். அந்த சேமிப்புகள் ஊரடங்கு நேரத்தில் உதவியாய் இருந்தன. வீட்டிலிருந்து வேலை செய்யும்போது 75% சம்பளமே கிடைத்தது. அதிலும் 10% சேமிக்க முற்பட்டேன். பின் நிலைமை சரியானதும் 100% சம்பளத்தில் 65% மட்டுமே செலவுகள் செய்றேன். மீதியைச் சேமிக்கிறேன்”னு சொல்லிருக்காரு நிவேதன். ஆஹா அருமை!

“கடந்த முறை திடீர் லாக்டெளன்ல மனைவி இங்கேயே இருந்தாங்க. நிறைய கஷ்டத்தை அனுபவிச்சிட் டேன். ஆனா, இந்தத் தடவை பக்காவா பிளான் பண்ணி வீட்டம் மாவை அவங்க வீட்டுக்கு அனுப் பிட்டேன். லாக்டெளன் போட்டதால அழைக்க வர முடியலன்னு வாட்ஸ் அப்ல ஸ்டேட்டஸ் வச்சி சீன்போட்டு கிட்டு இருக்கேன்”னு சொல்லிருக்காரு என்னா ஒரு வில்லத்தனம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு