Published:Updated:

MADE IN TAMILNADU: துபாயைத் தொடர்ந்து ஜெர்மனி தொழில் கண்காட்சியில் அரங்கம் அமைக்கும் தமிழகம்!

முதல்வர் ஸ்டாலின்

ஜெர்மனியில் உலகப் புகழ்பெற்ற ஹன்னோவர் மெஸ்ஸே (Hannover Messe) என்ற தொழில்கண்காட்சி நடை பெறுகிறது. மூன்று நாள்கள் நடைபெற இருக்கும் இந்தத் தொழில்கண்காட்சியில் பல உலக நாடுகள், சர்வதேச நிறுவனங்கள் கலந்துகொள்ள இருக்கின்றன.

MADE IN TAMILNADU: துபாயைத் தொடர்ந்து ஜெர்மனி தொழில் கண்காட்சியில் அரங்கம் அமைக்கும் தமிழகம்!

ஜெர்மனியில் உலகப் புகழ்பெற்ற ஹன்னோவர் மெஸ்ஸே (Hannover Messe) என்ற தொழில்கண்காட்சி நடை பெறுகிறது. மூன்று நாள்கள் நடைபெற இருக்கும் இந்தத் தொழில்கண்காட்சியில் பல உலக நாடுகள், சர்வதேச நிறுவனங்கள் கலந்துகொள்ள இருக்கின்றன.

Published:Updated:
முதல்வர் ஸ்டாலின்

தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை வளர்க்கவும், வேலை வாய்ப்பை உருவாக்கவும் சர்வதேச நிறுவனங்களைத் தொழில் தொடங்க அழைக்கவும் தமிழ்நாடு அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில் MADE IN TAMILNADU என்ற பெயரில் தமிழ்நாட்டின் உற்பத்தியை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகளைத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக, ஜெர்மனியில் நடைபெற இருக்கும் தொழில்கண்காட்சியில் சர்வதேச முதலீடுகளை ஈர்க்க தமிழ்நாடு அரசு சார்பில் அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.

துபாய் அமைச்சர்களுடன் ஸ்டாலின்
துபாய் அமைச்சர்களுடன் ஸ்டாலின்

துபாய் எக்ஸ்போ தொழில்கண்காட்சி கடந்த மார்ச் மாதம் நிறைவடைந்தது. 192 நாடுகள் கலந்துகொண்ட இந்தக் கண்காட்சியில் கடந்த மார்ச் 26, 27 ஆகிய நாள்களில் தமிழ்நாடு அரசின் சார்பாகக் கைத்தறி, விவசாயம் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கான அரங்குகள் அமைக்கப்பட்டன. துபாய் சென்ற தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதைத் திறந்து வைத்து பார்வையிட்டார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்நிலையில், ஜெர்மனியில் உலகப் புகழ்பெற்ற ஹன்னோவர் மெஸ்ஸே (Hannover Messe) என்ற தொழில்கண்காட்சி நடை பெறுகிறது. மூன்று நாள்கள் நடைபெற இருக்கும் இந்தத் தொழில் கண்காட்சியில் பல உலக நாடுகள், சர்வதேச நிறுவனங்கள் கலந்துகொள்ள இருக்கின்றன.

துபாய் எக்ஸ்போ அரங்கம்
துபாய் எக்ஸ்போ அரங்கம்

இந்தக் கண்காட்சியில் நவீன கண்டுபிடிப்புகள், வெளியுலகுக்கு அதிகம் அறிமுகம் இல்லாத உள்நாட்டு தயாரிப்புகள், எதிர்காலத்துக்குத் தேவையான கண்டுபிடிப்பு மாடல்கள், தொழில் திட்டங்கள், டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் போன்றவை காட்சிப்படுத்தப்படுவதுடன், புதிய கண்டுபிடிப்புகள் அறிமுகம் செய்யப்படவும் இருக்கின்றன. விஞ்ஞானிகள், பொறியாளர்கள், தொழிலதிபர்கள், பன்னாட்டு அரசு உயரதிகாரிகள் இதில் கலந்துகொண்டு பேச இருக்கின்றனர்.

இதில் தமிழ்நாடு அரசு சார்பில் அரங்கம் அமைக்கப்பட உள்ளது. ஜெர்மனி கண்காட்சியில் அமைக்கப்படும் தமிழ்நாடு அரங்கத்தில் உற்பத்தியில், ஆற்றல், லாஜிஸ்டிக்ஸ், நெட்வொர்க்கிங் போன்ற துறைகளில் முதலீடுகளை ஈர்ப்பதற்கு தமிழ்நாடு அரசு திட்டமிட்டு இருப்பதாகத் தலைமைச் செயலக அதிகாரிகள் கூறுகின்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism