Published:Updated:

பாதுகாப்பு துறை; நிலக்கரி துறைகளில் என்னென்ன சீர்திருத்தங்கள்.. நிர்மலா சீதாராமன் அறிவிப்பு விவரம்!

நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன்

பிரதமர் அறிவித்த ரூ.20 லட்சம் கோடி திட்டங்கள் தொடர்பான நான்காம் கட்ட அறிவிப்பை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வெளியிட்டார்.

கொரோனா ஊரடங்கால் இந்தியப் பொருளாதாரம் முடங்கிய நிலையில், அதை மீட்டெடுக்கும் நடவடிக்கையாக பிரதமர் மோடி ரூ.20 லட்சம் கோடிக்கு நிவாரணத் திட்டங்கள் அறிவிக்கப்படும் என்றார். கடந்த சில நாள்களாக இதுதொடர்பான அறிவிப்பை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுவருகிறார்.

இன்று, நான்காம் கட்ட அறிவிப்பை வெளியிட்டுப் பேசிய நிர்மலா சீதாராமன், “சுயசார்பு இந்தியாவை உருவாக்க வேண்டும் என பிரதமர் மோடி கூறினார். போட்டியைச் சமாளித்து, சுயசார்பு இந்தியாவை உருவாக்க மத்திய அரசு பாடுபடுகிறது. சுயசார்பு பாரதத்தை உருவாக்க கடுமையான போட்டிகளைச் சமாளிக்க வேண்டும்.

நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன்

இன்றைய அறிவிப்புகளில், கட்டமைப்பு ரீதியிலான சீர்திருத்தங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. தொழில்துறை உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் ஏற்கெனவே தொடங்கப்பட்டுள்ளன.

சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் துறைகள்

நிலக்கரி

தாதுக்கள்

மின்சாரம்

விண்வெளி

விமானப் போக்குவரத்து

அணுசக்தித் துறை

பாதுகாப்புத் துறை

 நான்காம் கட்ட அறிவிப்புகள்
நான்காம் கட்ட அறிவிப்புகள்

நிலக்கரித் துறையில் வர்த்தக ரீதியிலான மாற்றங்கள்:

  • நிலக்கரித் துறை தனியார் மயமாக்கப்படும்.

  • வருவாய் பகிர்வு அடிப்படையில் நிலக்கரித் துறையில் வர்த்தக ரீதியிலான அனுமதி.

  • நிலக்கரிச் சுரங்கங்களை யார் வேண்டுமானாலும் ஏலம் எடுத்து பொதுச் சந்தையில் விற்பனை செய்யலாம்.

  • வெளிப்படையான முறையில் 500 சுரங்கங்கள் விரைவில் ஏலம் விடப்படவுள்ளன.

  • அலுமினியத் துறையில் போட்டியை ஊக்குவிக்க பாக்சைட் மற்றும் நிலக்கரிச் சுரங்கங்கள் சேர்த்து ஏலம் விடப்படும்.

  • சுரங்கங்களிலிருந்து நிலக்கரியைக் கொண்டுசெல்வதற்கான போக்குவரத்து கட்டமைப்புக்கு ரூ.50,000 கோடி ஒதுக்கீடு.

பாதுகாப்புத் துறை

  • பாதுகாப்புத் தளவாட உற்பத்தியில் தன்னம்பிக்கையை மேம்படுத்துதல்.

  • வெளிநாடுகளிலிருந்து சில ஆயுதங்களை இறக்குமதி செய்யத் தடை.

  • ஆயுத உதிரி பாகங்கள் இந்தியாவிலே தயாரிக்க முடிவு.

  • பாதுகாப்பு உற்பத்தித் துறையில் அந்நிய முதலீட்டு வரம்பு 49 சதவிகிதத்திலிருந்து 74 சதவிகிதமாக உயர்வு.

 நான்காம் கட்ட அறிவிப்புகள்
நான்காம் கட்ட அறிவிப்புகள்

விமானத் துறை

  • பயணிகள் விமானப் போக்குவரத்துக்கு திறமையான வான்வெளி மேலாண்மை.

  • இந்திய வான்பரப்பில் 60 சதவிகிதம் மட்டுமே இலவசமாகக் கிடைக்கிறது.

  • இந்திய வான்பரப்பைப் பயன்படுத்துவற்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்.

  • இதன்மூலம் ஆண்டுக்கு ரூ.1000 கோடி மிச்சமாகும்.

  • தனியார் மூலம் கூடுதல் முதலீடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

  • இந்திய விமான பழுது மற்றும் பராமரிப்புத் துறையில் அடுத்த மூன்று ஆண்டுகளில் ரூ.800 கோடியிலிருந்து ரூ.2000 கோடியாக அதிகரிக்கும்.

  • விமான நிலைய பராமரிப்பை தனியார் மயமாக்க மேலும் 6 விமான நிலையங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

  • உலகத் தரம் வாய்ந்த வசதிகளுக்காக 12 விமான நிலையங்களில் கூடுதல் முதலீடுகள் நடக்க வாய்ப்புள்ளது. இதன்மூலம் 2,300 கோடி கிடைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

  • முதல் மற்றும் இரண்டாம் கட்ட முதலீடாக 12 விமான நிலையங்கள் ரூ.13,000 கோடி கூடுதல் முதலீடாக எதிர்பார்க்கப்படுகிறது.

  • இந்தியா விரைவில் விமான பராமரிப்பு பழுதுபார்க்கும் உலகளாவிய மையமாக மாற உள்ளது.

மின்சாரம்

  • யூனியன் பிரதேசங்களில் உள்ள மின்விநியோக நிறுவனங்கள் தனியார்மயமாக்கப்படும்.

  • கட்டண விவரங்கள் குறித்த அறிவிப்புகள் விரைவில் அறிவிக்கப்படும்.

  • டிஸ்காம் திறமையின்மை நுகர்வோருக்கும் சுமையாக இருக்காது.

நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன்

சமூகக் கட்டமைப்பு தொடர்பான திட்டங்கள்

  • சமூகக் கட்டமைப்புகளை மேம்படுத்துவதில் தனியார் துறை மூலம் ரூ.8,100 கோடி நிதி திரட்டப்படும். இதன்மூலம், நாட்டின் அவசரத் தேவையைப் பூர்த்திசெய்ய எதிர்பார்க்கிறோம்.

விண்வெளித்துறையில் தனியார் பங்களிப்பு

இந்தியாவிடம் இஸ்ரோ உள்ளது. இது நமக்கு நிறைய பரிசுகளைக் கொண்டுவந்துள்ளது. இருப்பினும், தற்போது தனியார் துறையுடன் இணைந்து நிறைய பணிகளைச் செய்துவருகிறது.

இந்தியா விண்வெளித்துறை பயணத்தில் தனியார் துறையும் இணைந்து பணியாற்ற வேண்டும் என விரும்புகிறோம். அவர்கள், தங்களின் திறன்களை மேம்படுத்த இஸ்ரோவின் வசதிகள் மற்றும் பிற சொத்துகளைப் பயன்படுத்த அனுமதிக்கப்படுவர்.

அணுசக்தித் துறையில் தனியாருக்கு அனுமதி. மருத்துவத் துறையில் பயன்படும் கதிரியக்கத் தனிமங்களைத் தயாரிப்பதில் தனியார் பங்களிப்புக்கு அனுமதி வழங்கப்படுகிறது" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு