Published:Updated:

பணத்தைத் துரத்தி முடியும் பாதி வாழ்க்கை!

மிடில் கிளாஸ்...
பிரீமியம் ஸ்டோரி
மிடில் கிளாஸ்...

மிடில் கிளாஸ் டு மில்லியனர் - 2

பணத்தைத் துரத்தி முடியும் பாதி வாழ்க்கை!

மிடில் கிளாஸ் டு மில்லியனர் - 2

Published:Updated:
மிடில் கிளாஸ்...
பிரீமியம் ஸ்டோரி
மிடில் கிளாஸ்...

ஒரு சராசரி மனிதன் பணம் சம்பாதிக்கவும் பணத்தைத் துரத்திக் கொண்டும் தனது வாழ்நாளில் 50 சதவிகிதத்தைச் செலவிடுகிறான். ஒருவர் அவரின் 25 வயதில் வேலைக்குச் சேர்கிறார் அல்லது சுயதொழில் ஆரம்பிக்கிறார் எனில், அவரின் 58 வயது வரை தொடர்ந்து பணத்தைத் துரத்திச் செல்கிறார்.

எம்.சதீஷ் குமார் 
நிறுவனர், 
http://sathishspeaks.com/
எம்.சதீஷ் குமார் நிறுவனர், http://sathishspeaks.com/

ஆணோ, பெண்ணோ, பணத்துக்காக ஒருவரின் விருப்பங்கள், ஆசைகள், பொழுது போக்குகள், தூக்கம் ஆகியவற்றை விட்டுக் கொடுக்கிறார். கூடுதல் போனஸ், சம்பள உயர்வு, பதவி உயர்வு பெற்று அதிக பணம் சம்பாதிக்கத் தொடர்ந்து போராடுகிறார். சிலர், கையில் போதிய பணம் இல்லாததால், அதிக பதற்றத்துடன் இயங்குகிறார்கள். காரணம், அந்த அளவுக்கு அவர்களுக்குப் பணம் என்பது அவசியம் தேவையான ஒரு பொருளாக இருக்கிறது.

போதிய பணம் தங்களிடம் இல்லாததால், பலரும் தாங்கள் விருப்பப்பட்டதை அடைய முடியாத நிலையில் உள்ளனர். பலர் பணம் இல்லாமல் பல இடங்களில் அவமானப் பட்டிருக்கக்கூடும். இவற்றையெல்லாம் மனதில் கொண்டு அவர்கள் பணத்தைத் துரத்தும் சூழ்நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.

அந்த வகையில் பணம் என்பது மனித வாழ்க்கையில் மிக முக்கியமான ஓர் அம்சமாக இருக்கிறது. அதை யாரும் புறக்கணிக்க முடியாது. பணம் சம்பாதிப்பது என்பது வாழ்க்கையில் மிக முக்கியமானது என்று எல்லோருக்கும் தெரியும். அது, தெரிந்தவர்கள்தாம் பெரிய கவலை எதுவும் இல்லாமல் இருக்கிறார்கள்.

பணம் சம்பாதிப்பது தொடர்பாக பல்வேறு இடங்களில் நான் பேசும் கூட்டங் களில் ஒரு முக்கியமான கேள்வியைக் கேட்பேன். அந்தக் கேள்வியை இப்போது உங்களிடம் கேட்கிறேன். உங்களுக்குப் பணம் பற்றிய எவ்வளவு அறிவு, திறமை இருக்கிறது, அதை எப்படி நிர்வகிப்பது, வாழ்நாள் முழுவதும் சம்பாதிக்கும் பணத்தைப் பல மடங்கு பெருக்குவது எப்படி என்பது தெரியுமா?

பணத்தைத் துரத்தி முடியும் பாதி வாழ்க்கை!

பணத்தை நிர்வகிக்கும் திறமை, அதைச் சரியாக முதலீடு செய்யும் திறமை அல்லது அந்தத் திறமை கொண்ட நிதி ஆலோசகர் களைப் பயன்படுத்திக்கொண்டால், ஒருவர் வாழ்நாள் முழுக்க பணத்தைத் துரத்திக் கொண்டு செல்லத் தேவை இருக்காது.

நம்மில் பலர் லாட்டரி சீட்டு அடித்து பெருந்தொகை அல்லது ஏதாவது போட்டி யில் ஜெயித்து பெருந்தொகை கிடைத்தால், நம் வாழ்க்கையே தலைகீழாக மாறிவிடும் என்று நினைக்கிறோம். ஆனால், உண்மை அதுவல்ல. லாட்டரியில் பரிசு பெற நினைக்கும் பலரிடமும், ‘‘பரிசுத் தொகையைக்கொண்டு நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள்’’ என்று கேட்டால், அவர்கள் சொல்லும் பதில் ஆச்சர்யமாக இருக்கும். ஆனால், பல ஆண்டுகள் கழித்து, பரிசுத் தொகையைக்கொண்டு அவர்கள் வாழ்க்கையில் வெற்றிநடை போட்டு இருக்கிறார்களா என்று பார்த்தால், சுவாரஸ்யமான உண்மைகள் நமக்குத் தெரியும்.

உதாரணமாக, நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம் (கோன் பனேகா குரோர்பதி) நிகழ்ச்சி மூலம் ரூ.5 கோடி பரிசு பெற்ற ஒருவர், அதற்குமுன் கடைகளுக்கு பால் பாக்கெட்டுகள் போட்டுக் கொண்டிருந்தார். இந்த நிகழ்ச்சியில் ஜெயித்ததன் மூலம் அவருக்கு கோடிக்கணக்கில் பணம் கிடைத்தது. ஆனால், மூன்றாண்டுகள் கழித்து அவரை மீண்டும் சந்தித்தபோது, அவர் பெற்ற அத்தனை பணத்தையும் இழந்து, மீண்டும் பால் பாக்கெட் போட்டு உயிர் வாழ்ந்து கொண்டிருந்தார்.

லாட்டரி பரிசு மூலம் பெருந்தொகை பெற்றவர்களில் சுமார் 70% பேர் ஐந்து ஆண்டுகளில் அவர்களின் பணத்தை முழுமையாகக் காலி செய்துவிட்டு மீண்டும் பழைய நிலைக்கே வந்துவிடுகிறார்கள் என்கிறது ஒரு புள்ளிவிவரம்.

இதற்கு முக்கியமான காரணம், அவர்கள் பணத்தை எப்படி நிர்வாகம் செய்ய வேண்டும் என்கிற நிதித் திட்ட மிடல் சரியாக இல்லாததும், சரியாக முதலீடு செய் யாததும்தான். இந்த நிலை லாட்டரி சீட்டில் பரிசு பெற்றவர் களுக்கு மட்டுமல்ல, பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், முன்னணி நடிகர்கள் / நடிகைகள் ஆகியோருக்கும் பொருந்தும். அவர்கள் தங்களின் இளமைக் காலத்தில் அல்லது அவர்கள் புகழின் உச்சத்தில் இருந்த காலத்தில் மிகப் பெரும் தொகையைச் சம்பாதித்திருப்பார்கள். ஆனால், அந்தப் பணத்தையெல்லாம் ஐந்து, பத்து ஆண்டுகளில் முழுமையாக இழந்துவிட்டு, செலவுக்குப் பணம் இல்லாமல் திண்டாடும் சூழ்நிலையை அடைந்திருப்பார்கள்.

கார் பழுதடைந்தால், மெக்கானிக் கடைக்கு எடுத்துச் செல்கிறோம். உடல்நிலை சரியில்லை எனில், மருத்துவரைப் பார்க்கச் செல்கிறோம். வீடு கட்ட வேண்டும் எனில், கட்டுமானப் பொறியாளரின் உதவியை நாடுகிறோம். ஆனால், பணத்தை முதலீடு செய்ய வேண்டும் எனில், மட்டும் நண்பர்கள், உறவினர்கள், உடன் படித்தவர்கள், உடன் வேலை பார்ப்பவர்கள், அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் ஆகியோரின் உதவியை நாடுகிறோம். இங்கேதான் நாம் பெரும் தவற்றை செய்து நம் பணத்தை இழக்கிறோம்.

பணத்தை நிர்வகிக்கவும், அதைப் பல மடங்காகப் பெருக்குவதற்கு சிறப்புத் தகுதிகள் தேவை. அதிகம் சம்பாதிக்கும் பலரும் கடன் சிக்கல் மற்றும் இதர பிரச்னை களில் சிக்கித் தவிர்ப்பதற்கான முக்கியமான காரணம், அவர்கள் சரியான நிதித் திட்டமிடலைச் செய்தாததும், நல்ல நிதி ஆலோசகர்களை அணுகாததும்தான். அதிகரித்துவரும் முதலீட்டாளர் தேவைகள் மற்றும் சிக்கலான முதலீடுகள், குழப்பமான காப்பீட்டுத் திட்டங்கள் நம்மிடையே இருக்கும்போது, நிபுணர்களின் முழுமையான ஆலோசனை வலுவாகத் தேவைப்படுகிறது.

நாம் நல்ல சேமிப்பாளர்களாக இருக்கிறோம் என்று பெருமை பட்டுக்கொள்கிறோம். ஆனால், மோசமான முதலீட்டாளர் களாக இருக்கிறோம் என்கிற உண்மையைத் தெரிந்துகொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். சரியான சொத்து ஒதுக்கீடு (அஸெட் அலொ கேஷன்) மற்றும் முதலீட்டுத் திட்டங்களைத் தேர்வு செய் வதில் நீண்ட காலமாகவே போதிய நிதி அறிவு இல்லாமல் இருக்கிறோம்.

நிதி விஷயங்கள் குறிப்பாக, முதலீடு, காப்பீடு, வருமான வரிச் சேமிப்பு போன்றவற்றை நிபுணத்துவம் கொண்ட மற்றும் அனுபவம் வாய்ந்த கல்வி அறிவு கொண்ட நிதி ஆலோசகர்களிடம் விட்டுவிட வேண்டும். நிதி நிபுணரின் பணி மருத்துவர் களைப் போன்றதாகும். அவர் களின் உதவியுடன்தான் நம் நிதிக் கஷ்டத்தைத் தீர்க்க முடியும். உங்களுடன் நீண்ட காலத்துக்கு இணைந்து பயணிக் கக்கூடிய நிதி ஆலோசகரைத் தேர்வு செய்வது அவசியம். உங்கள் நிதி இலக்கு மற்றும் கனவுகளை அடைய உங்கள் முதலீட்டுக் கலவையைத் (போர்ட்ஃபோலியோ) தொடர்ந்து குறிப்பிட்ட இடை வெளியில் தவறாமல் மதிப்பாய்வு செய்துவர வேண்டியது அவசியமாகும்.

(கோடீஸ்வரர் ஆவோம்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism