Published:Updated:

உங்களைக் கோடீஸ்வரர் ஆக்கும் பண ஆளுமை எப்படி இருக்க வேண்டும்?

மிடில் கிளாஸ் டு மில்லியனர்
பிரீமியம் ஸ்டோரி
News
மிடில் கிளாஸ் டு மில்லியனர்

மிடில் கிளாஸ் டு மில்லியனர் - 7

நீங்கள் கோடீஸ்வரர் ஆவது என்பது உங்கள் பண ஆளுமையைப் (Money Personality) பொறுத்து அமைகிறது என்றால் மிகையாகாது. பண விஷயத்தில் நீங்கள் எப்படி முடிவுகளை எடுக்கிறீர்கள் என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?

எம்.சதீஷ் குமார் 
நிறுவனர், 
http://sathishspeaks.com/
எம்.சதீஷ் குமார் நிறுவனர், http://sathishspeaks.com/

நீங்கள் பணக்காரர் ஆவதற்கு முதல் படி, உங்கள் பண ஆளுமையை நீங்கள் முழுமை யாகப் புரிந்துகொள்வதுடன், அதை மேம்படுத்துவதாகும். இந்தப் பண ஆளுமை யானது, உங்களின் செலவு, சேமிப்பு மற்றும் முதலீடு ஆகியவற்றில் உங்களின் சரியான அணுகுமுறையை வடிவமைக்க உதவும்.

பணத்துடனான நமது நடத்தை முக்கியமாக ஐந்து பிரிவாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. சுய பகுப்பாய்வு செய்து எந்தப் பிரிவு சுயவிவரம் உங்களுக்குப் பொருந்தும் அல்லது எந்தப் பிரிவின் கலவை உங்களுக்குப் பொருந்தும் என்பதைப் புரிந்துகொள்வது மூலம் நீங்கள் நிச்சயம் கோடீஸ்வரர் ஆகலாம்.

சேமிப்பவர் (The Saver)

இந்த நபரை நீங்கள் இந்தியாவில் எங்கும் காணலாம். அதாவது, சம்பளம் அல்லது சம்பாத்தியத்தில் பெரும் பகுதியைச் சேமிப் பவர்களாக இவர்கள் இருப்பார்கள்.

பொதுவாக, இந்தியர்கள் சிறந்த சேமிப்பவர் களாக (Great Savers) இருப்பார்கள். ஆனால், மோசமான முதலீட்டாளர்களாக (Poor Investors) இருக்கிறார்கள். ஃபிக்ஸட் டெபாசிட்டில் நம்மவர்களின் சேமிப்பு தோராயமாக 140 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. இதில், கிட்டத்தட்ட ரூ.82,000 கோடி உரிமை கோரப்படாத தொகையாக இருக்கிறது.

இந்த வகை நபர்கள் இலக்கு எதுவும் இல்லாமல் பணத்தைச் சேமிக்கிறார்கள். இவர்கள் பணத்தை ஒரு பாதுகாப்பாக மட்டுமே பார்க்கிறார்கள். மேலும், இவர்கள் பணத்தைக் கண்டு அடிக்கடி பயப்படுவார்கள். இவர்கள் எல்லா இடங்களிலும் பேரம் பேசு கிறார்கள். இவர்கள் எப்போதும் சிறந்த பேரத்தை விரும்புகிறார்கள்.

இந்தப் பிரிவு பண ஆளுமையின் மிகப் பெரிய பிரச்னை என்னவென்றால், அவர்கள் தங்களிடமுள்ள பணத்தை ஒருபோதும் முழுமையாக அனுபவிப்பதில்லை. மிக முக்கிய மாக, இவர்கள் தங்களின் முதலீடு மூலம் என்ன வருமானம் கிடைக்கிறது, அது பணவீக்க விகிதத்தைவிட அதிகமாக இருக்கிறதா, முதலீடு மற்றும் முதலீட்டின் மூலம் கிடைக்கும் வருமானத்துக்கு வருமான வரிச் சலுகை இருக்கிறதா, வருமான வரி எவ்வளவு, அந்த வரியில் அனுகூலம் (நிபந்தனைக்கு உட்பட்டு, புத்திசாலித்தனமாகக் குறைவான வரிக் கட்டுதல்) இருக்கிறதா என எதையும் கவனிக்கவே மாட்டார்கள். பணத்தைச் செலவு செய்யாமல் சேமிக்க வேண்டும் என்பது மட்டுமே இவர்களின் நோக்கமாக இருக்கும். வேறு எந்த நோக்கமும் இவர்களுக்கு இருக்காது!

மாடல்: வில்சன் ஜாக்
மாடல்: வில்சன் ஜாக்

செலவாளி (The Spender)

புகழ்பெற்ற முதலீட்டாளர் வாரன் பஃபெட்டின் முக்கியமான மேற்கோள், “உங்களுக்குத் தேவையில்லாத பொருள்களை நீங்கள் வாங்கிக் குவித்தால், விரைவில் உங்களுக்குத் தேவையான பொருள்களை விற்க வேண்டியிருக்கும்!”

முன்னணி இ-காமர்ஸ் நிறுவனங்களான அமேசான், ஃப்ளிப்கார்ட் ஆகியவை ‘பிக் பில்லியன் டே’ என்கிற பெயரில் பிரமாண்ட தள்ளுபடி விற்பனையை நடத்துகின்றன. உலகம் முழுவதும் மற்றும் இந்தியாவிலும்கூட மிகவும் பிரபலமான விற்பனையாகும். இந்த நாளில் செல்போன் மட்டுமே சுமார் ரூ.11,500 கோடிக்கு விற்பனை ஆகிறது. இந்த செல்போன்களை அடுக்கினால் துபாயிலுள்ள புர்ஜ் கலிஃபா கோபுரத்தைப் போல் 1,000 மடங்காகும். இந்த புர்ஜ் கலிஃபா (Burj Khalifa) ஒரு வானளாவிய (skyscraper) கோபுரம் ஆகும். இதுவே உலகின் உயரமான கட்டடமும்கூட. இது 163 அடுக்குளைக் கொண்ட 2,716 அடி உயரமுள்ள கட்டடமாகும்.

செலவழிப்பவர்கள் தன்னிச்சையானவர்கள் மற்றும் அவர்கள் தேவையில்லாத பொருள்கள் மற்றும் சேவைகளை வாங்கிக் குவிக்கிறார்கள். அவர்கள் தங்களின் உடனடித் திருப்திக்காக அல்லது மன அழுத்தத்தின் காரணமாகப் பொருள்களை வாங்கி வீடு முழுக்க நிரப்புகிறார்கள். பெரும்பாலும் அவர்கள், பொருள்களை வாங்கிய பிறகு ஒருவித வருத்த நிலையை அடைகிறார்கள்; உணர்கிறார்கள், இது தேவையற்றதாக அல்லது ஆடம்பரமாகக் கருதப்படுகிறது.

இதுபோன்று அவசியம் இல்லாமல் அநாவசியமாகக் கண்டபடி செலவு செய்பவர்கள் விரைவிலேயே கடன் வலையில் விழுந்துவிடுகிறார்கள். மேலும், அவர்கள் கிரெடிட் கார்டுகளில் அதிக பாக்கி வைத்திருப்பவர்களாக உள்ளனர். அவர்களின் நிதிநிலை மற்றும் குடும்ப வரவு – செலவு (Budget) எப்போதும் சீராக இருக்காது. கிட்டத்தட்ட வாழ்நாள் முழுக்க அதிக வட்டியிலான கடன்களுக்கு வட்டி கட்டிக்கொண்டிருப்பார்கள். வெளிப்பார்வைக்கு வசதி யானவர்கள், பணக்காரர்கள் என்பது போல் இவர்கள் தங்களைக் காட்டிக்கொள்வார்கள்.

சேமிக்கும் நபர் ஒருவர், செலவாளி ஒருவரைத் திருமணம் செய்யும்போது, அவர் ஒரு பொறுப்பற்ற நபர் என்று உணர்கிறார். செலவாளியுடன் அவர் வாழும் வாழ்க்கையைப் பாதுகாப்பாக உணர மாட்டார்.

அதேபோல, செலவாளி ஒருவர், சேமிப்புக்கு அதிக முக்கியத்துவம் தரும் ஒருவரைத் திருமணம் செய்துகொண்டு வாழும்போது, அந்த உறவு உவப்பானதாக இருக்காது. செலவாளி, சேமிப்பவரை ஒரு சலிப்பான நபராக உணர்கிறார். மேலும், அவர் வாழ்க்கையை அனுபவிக்கவில்லை அல்லது அவருக்கு ஆசைகள், கனவுகள் எதுவும் இல்லை என நினைப்பார்.

பண எந்திரம் (The Money Machine)

பணத்துக்காக வெறித்தனமாக வேலை செய்பவர்களை நம்மிடையே அதிகம் பார்க்கிறோம். அவர்கள் தங்கள் சம்பளம் / வருமானத்துக்காக எல்லாவற்றிலும் சமரசம் செய்கிறார்கள். அவர்கள் தங்கள் குடும்பம், உறவுகள், தங்கள் உடல் மற்றும் மன ஆரோக்கியம், அவர்களின் பொழுதுபோக்குகள் மற்றும் அவர்களின் கனவுகள், ஆசைகளைக்கூட சமரசம் செய்கிறார்கள். இவர்களைப் பண எந்திரம் (The Money Machine) என்றுகூட குறிப்பிடலாம்.

அவர்களின் முதன்மையான முன்னுரிமையாக மேலும் மேலும் பணம் சம்பாதிப்பதாக இருக்கும். அவர்கள் எப்போதும் தங்கள் பணம் சம்பாதிக்கும் வெற்றியை வெளிப்படுத்தும் நபர்களாக இருக்கிறார்கள். மேலும், அவர்கள் எப்போதும் அங்கீகாரத்துக்காக ஏங்கு கிறார்கள். அவர்கள் சம்பாதிப்ப தற்காக மட்டுமே தங்கள் வாழ்க்கையை முழுமையாக அர்ப்பணிக்கிறார்கள்.

அதேநேரத்தில், அவர்கள் சம்பாதிக்கும் பணத்தை அவர்கள் அனுபவிக்க மாட் டார்கள். ஏனினில், அவர்கள் தங்கள் வாழ்க்கையில் சம்பாதித்த பணத்தை அனுபவிக்க அவர்களுக்கு நேரம் இருக்காது. எந்தப் பெரிய பணமும் அவர்களைத் திருப்திப் படுத்த முடியாது. அவர்கள் தொடர்ந்து மேலும் மேலும் பணம் சம்பாதித்துக்கொண்டே இருப்பார்கள். எதற்கு இவ்வளவு அதிகமாகப் பணம் சம்பாதிக்கிறோம் என்று தெரியாமலே அவர்கள் பணத்தைச் சேர்த்துக் கொண்டிருப்பார்கள். பணம் சம்பாதிப்பதன் நோக்கம் அறியாமல் இவர்கள் இப்படிச் செயல்படுவதால், இவர்கள் சம்பாதித்த பணத்தால் இவர்களுக்கு எந்த நன்மையும் கிடைக்காது.

பணம் பற்றி அறியாதவர்கள் (Money Hippies)

இந்தப் பிரிவினர் பணத்தைப் பற்றி அரிதாகவே சிந்திக்கிறார்கள்; பணம் சமூகத்துக்குக் கேடானது என்று அவர்கள் நம்புகிறார்கள். எல்லா பிரச்னை களுக்கும் பணம்தான் மூலகாரணம்; பணம் ஒருபோதும் மகிழ்ச்சியை வழங்காது என நினைக்கிறார்கள்.

அவர்களுக்கென ஒருபோதும் லட்சியம், குறிக்கோள், இலக்கு எதுவும் இருக்காது. அவர்களுக்கு எந்த ஆசையும் கனவுகளும் இல்லை. அவர்கள் கவலைக்குரியவர்கள் என்று அவர்களுக்குத் தெரியும். ஆனால், அதைப் பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை.

ஆகவே, யார் சிறந்த பண ஆளுமை, அதிக பணத்தைப் பெறுவதற்கு நாம் யாராக இருக்க வேண்டும் என்கிற கேள்வி நம் அனைவரின் மனதிலும் எழுவது இயற்கையாகும்.

பணத் துறவி (Money Monk)

பணத்தைக் கையாள்வதற்கான சிறந்த வழி, நாம் பணத் துறவியாக (Money Monk) இருக்க வேண்டும். அதாவது, பணத்தை நிர்வகிப்பதில் வெற்றி பெற, நமக்கு பண ஆளுமை கொஞ்சமாவது இருக்க வேண்டும்.

ரிஸ்க் எடுப்பதில் கொஞ்சம் சூதாட்டக்காரர்களாக இருக்க வேண்டும். நம் குடும்பத்துக்கும் மற்றவர்களுக்கும் சிறந்த அனுபவத்தைக் கொடுப்பதற்கும் கொஞ்சம் செலவு செய்பவர்களாக இருக்க வேண்டும்.

தொண்டு உள்ளத்துடன் சம்பளம் / வருமானத்தில் சிறிது செலவு செய்பவராக இருந்தால், அவர் அதிக மாகப் பெறுவார். மேலும், எதிர்கால நிதி இலக்கு களுக்காக அதிகமாகச் சேமிப்பவராக இருப்பவர்தான் சிறந்த பண ஆளுமை கொண்டவர் ஆவர்.

நீங்கள் நிதிச் சுதந்திரத்தைப் பெறப்போவதைப் பற்றி நம்பிக்கையுடன் இருங்கள். பணத்தைக் கையாளுவதில் புத்திசாலியாகச் செயல்படுங்கள். நிதானம் என்பது பணத்தைச் சேமிப்பதில், செலவு செய்வதில், முதலீடு செய்வதில் மொத்தத்தில் நிர்வகிப்பதில் அதிக முக்கியத்துவம் பெறுகிறது.

சேமிப்புடன் தொடங்குங்கள்; அதைச் சரியாக முதலீடு செய்ய கற்றுக் கொள்ளுங்கள். உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் காப்பீடு மூலம் காத்துக்கொள்ளுங்கள். அதன் பிறகு, தேவையான செலவுகளைச் செய்து இனிய, மகிழ்ச்சியான நினைவுகளை உருவாக்குங்கள்.

பணம் குறித்த இந்த அணுகுமுறை உங்களை நிச்சயம் கோடீஸ்வரர் ஆக்கும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

வரும் வாரத்தில், குறைந்த முயற்சியில் அதிக பணத்தை ஈட்டுவது எப்படி என்று பார்ப்போம்.

(கோடீஸ்வரர் ஆவோம்)