Published:Updated:

Mindtree: ஊரடங்கிலும் ரூ.213 கோடி காலாண்டு நிகர லாபம்! - சாதித்த மைண்ட் ட்ரீ

மைண்ட்ட்ரீ
மைண்ட்ட்ரீ

``ஏப்ரல் முதல் ஜீன் மாதம் வரையிலான காலாண்டில் இந்த மைண்ட்ட்ரீ நிறுவமனாது ரூபாய் 1,908.8 கோடியை வருவாயாக ஈட்டியுள்ளது.”

கொரோனா தொடர்பான ஊரடங்கால் தகவல் தொழில்நுட்பத்துறை உள்ளிட்ட பல நிறுவனங்களும் கடுமையாகப் பாதிப்படைந்துள்ளன. இதனால், ஏற்பட்டுள்ள இழப்பை சரிசெய்ய பல ஆண்டுகள் ஆகும் என நிறுவனங்கள் வருத்தம் தெரிவித்துக்கொண்டிருக்கின்றன. இந்த நிலையில், தகவல் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த பெங்களூரில் உள்ள மைண்ட் ட்ரீ நிறுவனம் தனது முதல் காலாண்டில் ரூபாய் 213 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளதாகத் தகவல் வெளியிட்டுள்ளது.

லாபம்
லாபம்

ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையிலான காலாண்டில் இந்த மைண்ட் ட்ரீ நிறுவனமானது ரூ.1,908.8 கோடியை வருவாயாக ஈட்டியுள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு ஜூன் மாதக் காலாண்டில் வந்த வருவாயுடன் இதை ஒப்பிடும்போது 4.1 சதவிகிதம் அதிகமாகும். கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டியில் இந்நிறுவனம் ரூ.1,834.2 கோடி வருவாய் ஈட்டியது கவனிக்கத்தக்கது. எனினும், கடந்த மார்ச் காலாண்டுடன் இதை ஒப்பிடும்போது இந்த வருவாய் விகிதம் சுமார் 6.9 சதவிகிதம் குறைந்துள்ளதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால், நிகர லாபமானது ரூபாய் 92.7 கோடியில் இருந்து கிட்டத்தட்ட 130 சதவிகிதம் அதிகரித்து ரூபாய் 213 கோடியைத் தொட்டுள்ளது. காலாண்டு முடிவுகள் வெளிவர இருந்த நிலையில், அதற்கு முன்பாக மைண்ட் ட்ரீ நிறுவன பங்குகள் 1 சதவிகிதம் அதிகரித்து பங்குச் சந்தையில் செவ்வாய்க்கிழமை வர்த்தகமாகின.

“பங்கு முதலீடு... கவனமாகச்  செய்தால் லாபம்!” - ‘ஈக்னாமிக்ஸ்’ ஜி.சொக்கலிங்கம்
அடுத்த கட்டுரைக்கு