Published:Updated:

`தங்கத்தில் இப்படியும் முதலீடு செய்யலாம்!' - MMTC-பிரின்ஸ் ஜுவல்லரியின் புதிய அறிவிப்பு

பிரின்ஸ் ஜுவல்லரி ( prince jewellery )

தங்கம் மற்றும் வெள்ளி இரண்டும், பார்கள் மற்றும் நாணயங்களாகவும் பிரின்ஸ் ஜூவல்லரி ஷோரூம்களில் கிடைக்கும். இவை திரும்பப்பெறும் உத்தரவாதத்துடன் விற்பனை செய்யப்படுகின்றன. வாடிக்கையாளர்கள் எந்த நேரத்திலும் பிரின்ஸ் ஜூவல்லரி விற்பனை நிலையங்களில் அதை மாற்றி பணம் பெற்றுக் கொள்ளலாம்.

`தங்கத்தில் இப்படியும் முதலீடு செய்யலாம்!' - MMTC-பிரின்ஸ் ஜுவல்லரியின் புதிய அறிவிப்பு

தங்கம் மற்றும் வெள்ளி இரண்டும், பார்கள் மற்றும் நாணயங்களாகவும் பிரின்ஸ் ஜூவல்லரி ஷோரூம்களில் கிடைக்கும். இவை திரும்பப்பெறும் உத்தரவாதத்துடன் விற்பனை செய்யப்படுகின்றன. வாடிக்கையாளர்கள் எந்த நேரத்திலும் பிரின்ஸ் ஜூவல்லரி விற்பனை நிலையங்களில் அதை மாற்றி பணம் பெற்றுக் கொள்ளலாம்.

Published:Updated:
பிரின்ஸ் ஜுவல்லரி ( prince jewellery )

தங்கம் எல்லோருக்கும் பிடிக்கும். அது ஆபரணமாக இருந்தாலும் சரி முதலீடாக இருந்தாலும் சரி. தங்கத்தில் கணிசமான முதலீடு எப்போதும் இருப்பது நல்லது என்று எல்லா நிதி ஆலோசர்களும் கூறிவருகின்றனர். அந்த வகையில் பெரும்பாலான மக்கள் தங்களால் முடிந்த வகையில் தங்கத்தை வாங்கி சேமித்து வருகின்றனர்.

அவை தங்க ஆபரணங்கள், தங்கப் பத்திரங்கள், தங்க நாணயங்கள், தங்கக் கட்டிகள் எனப் பல வகை உண்டு. சமீபத்தில் அக்‌ஷய திருதியையை முன்னிட்டு பிரின்ஸ் ஜுவ்வலரி 999.9+ தூய்மையான தங்க நாணயங்களை அறிமுகப்படுத்தி உள்ளது.

999.9 தூய தங்கம்
999.9 தூய தங்கம்
999.9 purity gold

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்துப் பெண் கடவுளாகக் கருதப்படும் லட்சுமியின் உருவம் பொறிக்கப்பட்ட தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்களை சுஹாசினி மணிரத்னம், கரூர் வைஸ்யா வங்கியின் பிரிசியஸ் மெட்டல்ஸ் பிரிவு தலைவர் கே.மகேந்திரன் முன்னிலையில் சென்னை தி.நகர் பனகல் பார்க்கில் உள்ள பிரின்ஸ் ஜூவல்லரி ஷோரூமில் வெளியிட்டார்.

இந்த நாணயங்கள் பிரின்ஸ் ஜூவல்லரி மற்றும் எம்.எம்.டி.சி (மினரல்ஸ் அன்ட் மெட்டல் டிரேடிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா) இணைந்து அறிமுகப்படுத்தியுள்ளன. உலகம் முழுவதும் உள்ளவர்கள் செல்வம், சக்தி மற்றும் செழிப்பு ஆகியவற்றின் உருவமாக விளங்கும் பெண்கடவுள் லட்சுமி உருவம் பொறித்த நாணயங்களைத் திருமணம், பிறந்தநாள், ஆண்டுவிழா மற்றும் மத பண்டிகைகள் உள்ளிட்ட நல்ல சந்தர்ப்பங்களில் பரிசளிக்க சிறந்ததாக இருக்கும்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த ஒவ்வொரு நாணயமும் சிறந்த சுத்திகரிப்பு மற்றும் சுத்தமான செயல்முறையின் மூலம் தயாராகிறது. இதனால் இவை தூய்மையான தங்கமாகும். இவை 24 காரட் உயர் தர தூய தங்கமாகும். 999.9+ மேலான தூய்மையைக் கொடுக்க முயற்சி செய்கின்றன.

இதுகுறித்து பிரின்ஸ் ஜூவல்லரியின் நிறுவனர் பிரின்சன் ஜோஸ் கூறுகையில், ``89 ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பர்யம் கொண்ட பிராண்டான பிரின்ஸ் ஜூவல்லரியின் மீது எம்.எம்.டி.சி நம்பிக்கை கொண்டு வருடத்தின் மங்களகரமான நாட்களில் ஒன்றான அட்சய திருதியையில் தங்க நாணயங்களை சில்லரையில் விற்பனை செய்ய பிரின்ஸ் ஜூவல்லரியை தேர்வு செய்திருக்கிறது. இது பிரின்ஸ் ஜுவல்லரிக்கு கிடைத்த பாக்கியம்” என்றார் .

பிரின்ஸ் ஜுவல்லரி
பிரின்ஸ் ஜுவல்லரி
prince jewellery

இந்த நாணயங்கள் ஓவல், வட்டம் மற்றும் சதுர வடிவத்தில் வருகின்றன. மேலும், அவை 24 காரட் சுத்தமான தங்கமாக கிடைக்கின்றன. அழகான பேக்கிங்கில் பாதுகாப்பாக சீல் செய்யப்பட்டு, தனித்தனியாக வரிசை எண் கொண்ட மதிப்பீட்டில் சான்றளிக்கப்பட்டு இந்த நாணயங்கள் கிடைக்கும். 1 கிராம், 2 கிராம், 5 கிராம், 8 கிராம், 10 கிராம், 20 கிராம், 50 கிராம், மற்றும் 100 கிராம் ஆகிய எடைகளில் இந்த நாணங்கள் கிடைக்கின்றன.

வெள்ளி நாணயங்கள் 10 கிராம், 20 கிராம், 50 கிராம், 100 கிராம், 250 கிராம், 500 கிராம் மற்றும் 1 கிலோ எடைகளில் கிடைக்கின்றன. தங்கம் மற்றும் வெள்ளி இரண்டும், பார்கள் மற்றும் நாணயங்களாகவும் அனைத்து பிரின்ஸ் ஜூவல்லரி ஷோரூம்களிலும் கிடைக்கும். இந்த பார்கள், நாணயங்கள் திரும்பப்பெறும் உத்தரவாதத்துடன் விற்பனை செய்யப்படுகின்றன. வாடிக்கையாளர்கள் தேவைப்பட்டால் எந்த நேரத்திலும் பிரின்ஸ் ஜூவல்லரி விற்பனை நிலையங்களில் அதை மாற்றி பணம் பெற்றுக் கொள்ள முடியும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism