Published:Updated:

`இது புரட்சியை உண்டாக்கும்!' - டிஜிட்டல் கரன்சி குறித்து மோடி பேசியது என்ன?

PM Modi

பட்ஜெட்டில் ரிசர்வ் வங்கியின் சார்பில் புதிதாக டிஜிட்டல் கரன்சி அறிமுகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த டிஜிட்டல் கரன்சி குறித்து பலருக்கும் பல சந்தேகங்களும் கேள்விகளும் எழுந்தன. இந்நிலையில் பிரதமர் மோடி டிஜிட்டல் கரன்சி குறித்து சில விளக்கங்களைக் கொடுத்துள்ளார்.

`இது புரட்சியை உண்டாக்கும்!' - டிஜிட்டல் கரன்சி குறித்து மோடி பேசியது என்ன?

பட்ஜெட்டில் ரிசர்வ் வங்கியின் சார்பில் புதிதாக டிஜிட்டல் கரன்சி அறிமுகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த டிஜிட்டல் கரன்சி குறித்து பலருக்கும் பல சந்தேகங்களும் கேள்விகளும் எழுந்தன. இந்நிலையில் பிரதமர் மோடி டிஜிட்டல் கரன்சி குறித்து சில விளக்கங்களைக் கொடுத்துள்ளார்.

Published:Updated:
PM Modi

2022-23 நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் காகிதமில்ல பட்ஜெட்டாக டேப்லட் மூலம் வாசித்தார்.

சுமார் 90 நிமிடங்கள் பட்ஜெட் உரையை அவர் நிகழ்த்தினார். அந்த உரையில் ரிசரவ் வங்கி புதிதாக டிஜிட்டல் கரன்சியை அறிமுகம் செய்யும் என்று அறிவித்தார். டிஜிட்டல் கரன்சியை அறிமுகம் செய்துள்ள அதே சமயம் கிரிப்டோகரன்சிகள் சார்ந்து முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.

FM Nirmala Sitharaman
FM Nirmala Sitharaman

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கிரிப்டோகரன்சி சொத்துகள் மீதான வருமானத்துக்கு 30 சதவிகித வரியும், கிரிப்டோ சொத்துகளின் பரிமாற்றங்களுக்கு ஒரு சதவிகித டிடிஎஸ் பிடித்தம் செய்யப்படும் என்றார்.

உலகம் முழுவதும் பரவலாக முதலீடு செய்யப்பட்ட கிரிப்டோகரன்சி தொடர்பாக அரசுக்கு அழுத்தங்கள் இருந்தன. இந்நிலையில் கிரிப்டோகரன்சிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று ஒருசாரார் கோரிக்கை வைக்க இன்னொரு பக்கம் அதில் பெருமளவில் மக்கள் முதலீடு செய்திருக்கிறார்கள் தடை செய்வது பல்வேறு சிக்கல்களைக் கொண்டுவரும் என்று ஒரு தரப்பு வாதம் செய்தது. இதனால் கிரிப்டோகரன்சிகளுக்கு தடை விதிக்கப்படவில்லை.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மாறாக அரசு சார்பில் டிஜிட்டல் கரன்சி வெளியிட முடிவு செய்யப்பட்டது. இது பிட்காயின் போன்ற மற்ற கிரிப்டோகரன்சி போன்றதா, இது எவ்வாறு செயல்படும் போன்ற கேள்விகள் மக்களிடையே எழுந்தன.

இந்நிலையில் மத்திய பட்ஜெட்டில் கூறப்பட்ட டிஜிட்டல் கரன்சியை பணமாக மாற்றிக்கொள்ளலாம் என்றும், இந்த டிஜிட்டல் கரன்சி ஃபின்டெக் துறையில் புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். `ஆத்மநிர்ப அர்த்தவ்யவஸ்தா' என்ற தலைப்பில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் உரையாற்றினார்.

PM Modi
PM Modi

அந்த உரையில், ``ரிசர்வ் வங்கியின் டிஜிட்டல் நாணயம் அல்லது டிஜிட்டல் ரூபாய் ஆன்லைன் பணப்பரிவர்த்தனைகளை மிகவும் பாதுகாப்பானதாகவும், ஆபத்து இல்லாததாகவும் மாற்றும். மேலும் வரும் காலங்களில் டிஜிட்டல் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கும் வழிவகுக்கும் இந்த டிஜிட்டல் கரன்சி தற்போது புழக்கத்தில் உள்ள ரூபாயின் டிஜிட்டல் வடிவமாக இருக்கும். இது ரிசர்வ் வங்கியால் கட்டுப்படுத்தப்படும். டிஜிட்டல் கரன்சி மற்றும் அசல் நாணயம் இரண்டையும் பரிமாற்றம் செய்துகொள்ளவும் வழிவகை செய்யப்படும். இதன் மூலம் டிஜிட்டல் கரன்சி புதிய புரட்சியை உண்டாக்கும்" என்று கூறினார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism