Published:Updated:

``மோடி அரசாங்கம் சிறு தொழில்களுக்கு எதிராக இருக்கிறது...’’ - கோவை TACT ஜேம்ஸ் அதிரடி!

சிறுதொழில்

ஒரு காலத்தில் 1,780 பொருள்களை பெரிய நிறுவனங்கள் உற்பத்தி செய்யக் கூடாது என்ற தடை உத்தரவு இருந்தது. இந்த உத்தரவு தற்போது முழுவதுமாக நீக்கப்பட்டுள்ளது.

``மோடி அரசாங்கம் சிறு தொழில்களுக்கு எதிராக இருக்கிறது...’’ - கோவை TACT ஜேம்ஸ் அதிரடி!

ஒரு காலத்தில் 1,780 பொருள்களை பெரிய நிறுவனங்கள் உற்பத்தி செய்யக் கூடாது என்ற தடை உத்தரவு இருந்தது. இந்த உத்தரவு தற்போது முழுவதுமாக நீக்கப்பட்டுள்ளது.

Published:Updated:
சிறுதொழில்

இந்தியாவில், பன்னாட்டு மற்றும் பெரிய வர்த்தக நிறுவனங்களால் 1.5 லட்சம் சிறிய கடைகள் மூடப்பட்டுள்ளது என அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு (CAIT) கூறியுள்ளது. இதற்கு பன்னாட்டு நிறுவனங்களைக் கட்டுப்படுத்த எந்தவித ஒழுங்குமுறை சட்டமும் இந்தியாவில் இல்லாததுதான் காரணம் என இந்த அமைப்பு குற்றஞ்சாட்டுகிறது.

பன்னாட்டு மற்றும் பெரிய நிறுவனங்கள் அளிக்கும் தள்ளுபடிகள் மற்றும் விலை நிர்ணயங்களால் சில்லறை வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இந்தியாவில் சில்லறை வியாபாரம் மற்றும் சிறு, குறு தொழில்களை உயிர்ப்புடன் வைத்திருக்க வேண்டுமானால் வர்த்தகங்களைக் கண்காணிக்க ஆணையம் அமைக்க வேண்டும் எனவும் இந்த அமைப்பு கூறியுள்ளது.

நிறுவனங்கள்
நிறுவனங்கள்

``இந்த நிறுவனங்கள் சட்டவிரோதமான பொருள்களின் பரிவர்த்தனைகள், சட்டவிதிகளை மீறுதல், ஜி.எஸ்.டி மற்றும் வருமான வரி கட்டாமல் ஏய்த்தல் என சட்டவிரோத காரியங்களில் ஈடுபடுகின்றனர். ஆனால், இவர்களுக்கு இன்னும் பாதுகாப்பு வழங்கப்படுவது ஏன் என்று புரியவில்லை” என்று CAIT தலைவர் பி.சி.பார்தியா மற்றும் பொதுச் செயலாளர் பிரவீன் கண்டேல்வால் தங்களது அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

இந்த மாதம் நாடாளுமன்றத்தில் பேசிய மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் சோம் பிரகாஷ், நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட இ-காமர்ஸ் கொள்கைகளை இன்னும் நடைமுறைப்படுத்தவில்லை என்றும், இ-காமர்ஸ் தளங்களை ஒழுங்குப்படுத்த ஆணையம் அமைக்கும் திட்டம் எதுவும் அரசாங்கத்திடம் இல்லை என்றும் கூறியுள்ளார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இது குறித்து கோவை TACT அமைப்பின் தலைவர் ஜேம்ஸிடம் கருத்து கேட்டோம்.

``பன்னாட்டு நிறுவனங்களின் வருகையால் சிறிய கடைகள் மட்டுமல்லாது தொழிற்சாலைகளும் மூடப்பட்டுள்ளன. இதனால் வேலைவாய்ப்பு இழப்பு பெரிதும் ஏற்படுகிறது. உற்பத்தித் துறையில், பன்னாட்டு நிறுவனங்கள் கேட்கும் விலையில் உதிரிபாகங்களை உற்பத்தி செய்ய முடியாததால், உலகில் எங்கு விலை குறைவாகக் கிடைக்கிறதோ, அவற்றை அங்கே வாங்கிக் கொள்கிறார்கள். அவர்களுடன் எங்களால் போட்டி போட முடிவதில்லை. இதனால், இந்தியாவில் லட்சக்கணக்கான சிறு, குறு விவசாயிகள் மற்றும் வியாபாரிகளின் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்படுகின்றன. இதற்கு அரசாங்கத்தின் கொள்கை முடிவுகள்தான் காரணம்.

TACT ஜேம்ஸ்
TACT ஜேம்ஸ்

மோடி அரசாங்கம் சிறு தொழில்களுக்கு உறுதுணையாக இல்லை என்பதைவிட எதிராக இருக்கிறது. இவர்களது கொள்கை முடிவுகள் அனைத்தும் பன்னாட்டு நிறுவனங்கள் வாழ்ந்தால் போதும் என்பதுபோல் இருக்கிறது. 1991-ம் ஆண்டு இந்தியா உலகமயமாக்குதலுக்குக் கையெழுத்து போட்டதில் இருந்தே சிறு, குறு தொழில்களின் அடையாளத்தை இழக்க ஆரம்பித்து விட்டோம். உலகமயமாக்குதலுக்குப் பின்பு பெரிய நிறுவனங்கள் அனைத்தும் சிறிய நிறுவனங்கள் உற்பத்தி செய்யக்கூடிய பொருள்களை அவர்களே உற்பத்தி செய்யத் தொடங்கிவிட்டனர். இது 2022-ல் பெரிய அளவில் வளர்ந்து ஒட்டுமொத்தமாகத் தற்போது சிறிய தொழில்களை முடக்கி வருகிறது.

ஒரு காலத்தில் 1,780 பொருள்களை பெரிய நிறுவனங்கள் உற்பத்தி செய்யக் கூடாது என்ற தடை உத்தரவு இருந்தது. இந்த உத்தரவு தற்போது முழுவதுமாக நீக்கப்பட்டுள்ளது. கடந்த அரசுகள் இந்த உத்தரவைக் கொஞ்சமாவது கடைப்பிடித்து வந்தன. ஆனால், இந்த அரசு எந்தப் பன்னாட்டு நிறுவனமும் எந்தத் தொழிலில் வேண்டுமானாலும் ஈடுபடலாம் என்ற நிலையை உருவாக்கிவிட்டது. இது வேலைவாய்ப்பு இழப்பு, தொழில்கள் அழிப்பு போன்ற பெரிய தாக்கங்களை ஏற்படுத்தும்.

சிறுதொழில் நிறுவனங்கள்
சிறுதொழில் நிறுவனங்கள்

இந்தத் தாக்கங்களைத் தடுக்க கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும். பன்னாட்டு நிறுவனங்கள் மளிகைக்கடை தொடங்க வேண்டுமானாலும், மால்களைத் தொடங்கிவிடுகின்றனர். சிறிய கடைகள் பொருள்களை வாங்கி வந்து வியாபாரம் செய்யும்போது 5 பைசா, 10 பைசா லாபம் வைத்து விற்கின்றனர். ஆனால், மால்களில் உடனடியாக ரூ.1 குறைத்து விற்பதால், மக்கள் அங்கேயே வாங்குகின்றனர். அதனால், சிறிய வியாபாரங்கள் அடிபடுகின்றன. இப்படி குறு, சிறு வர்த்தகங்கள் பாதிக்கப்படாமல் இருக்க, அரசு சட்டத்தை இயற்ற வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். இந்தந்த தொழில்களில் பன்னாட்டு நிறுவனங்கள் ஈடுபடக் கூடாது என்ற தடுப்புச் சட்டங்களை எதிர்பார்க்கிறோம்’’ என்று கூறினார்.

சிறுதொழில் நிறுவனங்கள்தான் மக்களுக்கு அதிக அளவில் வேலைவாய்ப்பைத் தந்து வருகின்றன. அவை நன்றாக இருந்தால்தான் பல கோடி மக்களுக்கு வேலை கிடைக்கும் என்பதை மத்திய அரசாங்கம் மறந்துவிடக் கூடாது!