Published:Updated:

அம்பானி, அதானி, டாடா..! - பட்ஜெட்டுக்கு முன் தொழிலதிபர்களைச் சந்தித்த மோடி

ஜி.டி.பி வளர்ச்சி விகிதம், கடந்த 6 ஆண்டுகளைவிடக் குறைவான அளவாக 4.5 சதவிகிதத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில், இந்தியப் பொருளாதாரத்தை மேம்படுத்துவது குறித்து இவர்களிடம் பேசியிருக்கிறார் மோடி.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்களுடன் நேற்று (திங்கள்கிழமை) பிரதமர் மோடி ஒரு முக்கிய சந்திப்பை நிகழ்த்தினார். இந்தச் சந்திப்பில் இந்தியப் பொருளாதாரச்சூழல் குறித்த விஷயங்கள் விவாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. குறிப்பாக, அடுத்த மாதம் தாக்கல் செய்யப்படவுள்ள பட்ஜெட்டில் என்ன மாதிரியான மாற்றங்களை எதிர்பார்க்கிறார்கள் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

முகேஷ் அம்பானி, ரத்தன் டாட்டா
முகேஷ் அம்பானி, ரத்தன் டாட்டா
vikatan

டாடா சன்ஸ் ரத்தன் டாட்டா, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் முகேஷ் அம்பானி, மஹிந்திரா & மஹிந்திரா ஆனந்த் மஹேந்திரா, அதானி இண்டஸ்ட்ரீஸ் கவுதம் அதானி, பார்தி ஏர்டெல் சுனில் மிட்டல், வேதாந்தா அனில் அகர்வால், டாடா சன்ஸ் என்.சந்திரசேகரன், எல்&டி ஏ.எம்.நாயக் ஆகிய முன்னணி தொழிலதிபர்களும் அதிகாரிகளும் இந்த ஆலோசனையில் பங்கெடுத்துள்ளனர்.

மத்திய பட்ஜெட் 2020-21 வேளாண் வளர்ச்சிக்கான பரிந்துரைகள்

நாட்டின் ஜி.டி.பி வளர்ச்சி விகிதம், கடந்த ஆறு ஆண்டுகளைவிடக் குறைவான அளவாக 4.5 சதவிகிதத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில் இந்தியப் பொருளாதாரத்தை மேம்படுத்துவது குறித்தும், உள்நாட்டு, வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக அரசுத்தரப்பில் எடுக்கப்பட்ட, எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டிருக்கிறது.

அதானி
அதானி
vikatan

பிப்ரவரி 1-ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில் தொழிலதிபர்களுடன் நடைபெற்றுள்ள இந்த ஆலோசனைக் கூட்டத்தின் பிரதிபலிப்பை வரவுள்ள பட்ஜெட்டில் எதிர்பார்க்கலாம். ஏற்கெனவே மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனும் அனைத்துத்துறை சார்ந்த முதலீட்டாளர்கள் மத்தியில் பட்ஜெட்டுக்கு முந்தைய கலந்தாலோசனைக் கூட்டங்களைத் தொடர்ந்து நடத்திவருகிறார். இந்தக் கூட்டங்களுக்குப்பின் பட்ஜெட் உரை இறுதி செய்யப்படுமென்று தெரிகிறது.