Published:Updated:

இப்படியெல்லாம் பணம் சம்பாதிக்க முடியுமா? வாசகர்களின் கலகல கமென்ட்ஸ்...

வருமானம்...
பிரீமியம் ஸ்டோரி
வருமானம்...

I N T E R A C T I O N

இப்படியெல்லாம் பணம் சம்பாதிக்க முடியுமா? வாசகர்களின் கலகல கமென்ட்ஸ்...

I N T E R A C T I O N

Published:Updated:
வருமானம்...
பிரீமியம் ஸ்டோரி
வருமானம்...

"இப்படியும் பணம் சம்பாதிக்க முடியுமா? என நீங்கள் ஆச்சர்யப்பட்ட விஷயம் எது?” என்ற கேள்வியை நாணயம் விகடன் ஃபேஸ்புக் (https://www.facebook.com/NaanayamVikatan) மற்றும் ட்விட்டர் (https://twitter.com/NaanayamVikatan) பக்கங்களில் கேட்டிருந்தோம். வாசகர்கள் தங்களுடைய கமென்ட்ஸ்களை நச்சென்று பதிவிட்டிருந்தனர்.

“யூடியூப் சேனல் தொடங்கி, சாதாரண ஆள்கூட லட்சக்கணக்கில் சம்பாதித்துக் கொண்டிருப்பதைப் பார்த்து, இப்படிக்கூட சம்பாதிக்க முடியுமா என்று ஆச்சர்யப்படுகிறேன்” என்கிறார் ஆரிஃப். வாழவைக்கும் யூடியூப்புக்கு ஜே!

“தீயா வேலை செய்யணும் குமாரு படத்தில் சந்தானம் காதல் ஜோடிகளைச் சேர்த்து வைத்து சம்பாதிப்பாரு. அதைப் பார்த்துதான் ரொம்ப ஆச்சர்யப்பட்டேன்”னு கமென்ட் பண்ணிருக்காரு செல்வம். ரைட்டு!

இப்படியெல்லாம் பணம் சம்பாதிக்க முடியுமா? வாசகர்களின் கலகல கமென்ட்ஸ்...

“பங்குச் சந்தையில், பலர் பங்கு களை வாங்கி விற்று பணம் சம்பாதிப்பதைக் கேள்விப்பட்டிருக் கிறேன். ஆனால், பங்குகளை வாங்கி விற்று பணம் சம்பாதிப்பது எப்படி என்று பயிற்சி கொடுத்து, பயிற்சிக்கு கட்டணம் வசூலித்து பணம் சம்பாதிப்பதைத்தான், நான் ஆச்சர்யமான விஷயமாகப் பார்க்கிறேன்”னு சொல்லிருக்காரு கிருஷ்ண குமார். அதெல்லாம் பிசினஸ் சீக்ரெட் சார்!

“வேற யாரு? நம்ம மேனேஜர்தான்! ‘நான் ஸ்டேட் பேங்குலேர்ந்து பேங்க் மேனேஜர் பேசுது சார், உங்கள் ஏ.டி.எம் கார்டு மேலே உள்ள 16 டிஜிட் நம்பர் சொல்லுங்கோ’னு சொல்லி பணத்தை பிராடு பண்றதைப் பார்த்துதான்”னு சொல்லிருக்காரு சலீம் கமல். உஷாரய்யா உஷாரு!

“காலம் காலமா நடக்கும் வரதட்சணை வாங்கி வைத்துக் கொண்டு சம்பாதிப்பது”னு நச்சுன்னு சொல்லிருக்காரு தியாகராஜன். திருடனாய் பார்த்து திருந்தா விட்டால்..!

“பொய் சொல்லி சம்பாத்தியம் செய்கிற இப்போதைய மனிதர்களைப் பார்த்துதான் ஆச்சர்யப்படு கிறேன்”னு ஆதங்கப்பட்டு சொல்லிருக்காரு ஹலீல் பாஷா. டோன்ட் வொரி ப்ரோ!

“கூட்டணின்னு சொல்லி குரங்கை விட வேகமாய் தாவி ‘சூட்கேஸ்’ வாங்குவது, ஒயின் ஷாப்ப மூடச் சொல்லி போராட்டம் பண்ணிட்டு சைடுல கள்ளச் சாராயம் காச்சுவது, பைக் திருடுவது, ஏன் ஆடு மாடு, கோழி திருடுவது, கட்சிக் கொடி கட்டிட்டு கஞ்சா விற்பது, லாட்ஜ் நடத்துறேன்னு சொல்லிட்டு கேமரா வெச்சு மிரட்டி பணம் பார்க்குறது... இன்னும் நிறைய இருக்கு”ன்னு சொல்லிருக்காரு ஜான். போதும் போதும்... கயவாலித்தன லிஸ்ட் ரொம்ப பெருசா போகுது!

“பிஎம் கேர் எனும் ஒரு தனியார் அக்கவுன்ட். இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகள், செயலிகள் எல்லாம், அதுக்கு காசு கொடுங்க கொடுங்கன்னு விளம்பரம் கொடுத்தாங்க... வந்த பணத்துக்கும் செலவுக்கும் கணக்கு இல்லை... நல்ல பிசினஸ் மாடல்... ஒரு அக்கவுன்ட் ஓப்பன் பண்ணுன 500 ரூபாய் முதலீடு... வரி இல்லாமல் 5,000 கோடி வருமானம்!”னு விமர்சன கமென்ட் பண்ணிருக்காரு ஜானகிராமன் மோகன். இப்படியெல்லாம் பேசாதீங்க சார். ஆன்டி இண்டியன்னு சொல்லிடுவாங்க!

“ஆஸ்திரேலியாவின் டான் பிராட்மேன் தனது கடைசி டெஸ்ட் போட்டியில் அணிந்த பச்சை நிற தொப்பி 1,70,000 பவுண்டுகளுக்கு ஏலம் போனது. இந்திய ரூபாயில் இதன் மதிப்பு ஏறக்குறைய ஒன்றை கோடி! விளையாட்டு வீரர்கள் மற்றும் திரை பிரபலங்கள் தாங்கள் எப்போதோ பயன்படுத்திய பொருள்களை ஏலம் விட்டு கோடிக் கணக்கில் பணம் சம்பாதிப்பதைப் பார்க்கும்போது இப்படியும் பணம் சம்பாதிக்க முடியுமா என ஆச்சர்யப்பட்டேன்”னு சொல்லிருக்காங்க ஜோதி லட்சுமி. உலகத்துல இதெல்லாம் சகஜமுங்க!