நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

“சிக்கனமாக இருக்க என்னென்ன செய்யலாம்..?’’ வாசகர்களின் அசத்தல் கமென்ட்ஸ்

சிக்கனமாக...
பிரீமியம் ஸ்டோரி
News
சிக்கனமாக...

I N T E R A C T I O N

பல்வேறு நெருக்கடிகளால் சிக்கனமாக இருக்க வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகி இருக்கிறோம் நாம். சிக்கனமாக இருப்பதற்கு என்னென்ன செய்யலாம்... கொஞ்சம் டிப்ஸ் தாங்களேன்!” என்று நாணயம் விகடன் ஃபேஸ்புக் (https://www.facebook.com/NaanayamVikatan) மற்றும் ட்விட்டர் (https://twitter.com/NaanayamVikatan) பக்கங்களில் கேட்டிருந் தோம். இதற்கு நம் வாசகர்களின் கமென்ட்ஸ் ஒவ்வொன்றும் அசத்தல் ரகம். அவர்கள் கொடுத்த டிப்ஸ்களை நீங்களே பாருங்களேன்.

“ஒரு பொருளை வாங்கும்போது அது ஆசைக்கா அல்லது தேவைக்கா என்ற தெளிவு இருந்தால் போதும். சிக்கனம் தானாக வரும்”னு சொல்லி ருக்காரு சரவணகுமார். நைஸ் டிப்ஸ்! நாணயம் விகடனைத் தொடர்ந்து படிக்கிறீங்க போல, கீப் இட் அப்!

“நடக்கும் தொலைவில் உள்ள இடங்களுக்கு கார், இருசக்கர வாகனத்தில் செல்லாமல் நடந்து சென்றால் பணம் மிச்சம், உடல் நலத்துக்கும் நல்லது. உங்களின் தேவைக்கேற்ப மட்டுமே பொருள் களை வாங்க வேண்டும். மளிகைப் பொருள்களை மொத்தமாக வாங்கி பணம் மிச்சம் பிடிக்கலாம். பொருள்களை முடிந்தவரை பேரம் பேசி வாங்குங்கள்!” என்று அசத்தல் டிப்ஸ் கொடுத்துருக்காரு பிரசன்ன நாராயணசாமி. ஃபாலோ பண்ணிக்கிறோம் ஜி!

சிக்கனமாக...
சிக்கனமாக...

“இருசக்கர வாகனங்களை யாரும் கடன் வாங்காமலும், அடுத்தவர் வீட்டில் மணிக்கணக்கில் அமர்ந்து கொண்டு அவர்கள் வீட்டு ஃபேன், ஏசியை உபயோகப்படுத்தாமல் இருக்கலாம். இது அனைவருக்கும் நல்லது”னு கமெ ன்ட்பண்ணிருக்காங்க வாணி. ஆத்தி, இப்படியெல்லாமா நடக்குது?

“மொதல்ல சுயக்கட்டுப்பாட் டோட வாழுங்க. சிக்கனம்தானா வந்துரும்”னு சொல்லிருக்காரு பார்த்திபன். ரைட்டு!

“உங்ககிட்ட இருக்குற ஆன்லைன் ஷாப்பிங் ஆப்ஸ் எல்லாத்தையும் டெலீட் பண்ணிடுங்க. தேவையில்லாத பொருள்களை எல்லாம் வாங்கிக் குவிக்காம சிக்கனமா இருக்கலாம்”னு சொல்லிருக்காரு மணிகண்டன். டன்ஜி!

“ஆசைக்கும் தேவைக்கும் உள்ள வித்தியாசம் புரிந்து செயல்படுங்க... பட்ஜெட் போட்டு குடும்பம் நடத்தினா சிக்கனமாக இருக் கலாம்”னு சொல்லிருக்காரு காசி சின்னத்தம்பி. சூப்பரு!

“நம் உடைகளை நாமே இஸ்திரி செய்துகொள்ளலாம். வாகன உபயோகத்தைக் குறைத்து, சைக்கிளிலோ, நடராஜா சர்வீஸிலோ செல்லலாம். அதிகப்படியான ஆடைகள், ஆபரணங்கள் வாங்கு வதைத் தவிர்க்கலாம். அசைவ உணவுக்காரர்கள் காஸ்ட்லியான மட்டன், சிக்கனை மறந்துவிட்டு மீனை மட்டும் நேசிக்கலாம். ஹெல்த்துக்கும் நல்லது, பர்ஸுக்கும் நல்லது” என்று டிப்ஸ் கொடுத்துருக் காரு அஸ்ரப் அலி! பாஸு, வீட்ல ஒப்புக்கணும் இல்ல!

“நாம் சிக்கனமாக இருக்கணுமா... ஒரு மாதம் உங்களுடைய வரவு செலவுகளை ஒரு நோட் போட்டு எழுதுங்க. நீங்கள் எதில் அதிகம் செலவு செய்கிறீர்கள், எந்த செலவு களைக் குறைத்துக்கொண்டால் பணத்தைச் சேமிக்கலாம் என்கிற ஒரு வழி கண்டிப்பாகப் பிறக்கும்”னு சொல்லிருக்காரு தர் சாரதி. பட்ஜெட் பத்மநாபன்!

“ஆகாறு அளவிட்டி தாயினுங் கேடில்லை - போகாறு அகலாக் கடை” - வருமானம் குறைவாக இருந்தாலும் தேவையில்லாத செலவைக் குறைத்தாலே போதும். நம்ம தாத்தா திருவள்ளுவர் சொன்னதுதான்”னு சொல்லிருக்காரு ஶ்ரீனிவாசன். வாரும் புலவரே!

“வெளியே சாப்பிட வேண்டாம். டீ, சிகரெட் பழக்கம் இருந்தால் தவிர்க்கலாம். வார இறுதி நாள்களில் சிறுதொழில் ஒன்று புரியலாம்”னு சொல்லிருக்காரு ஜான். ஓகே சார்.