Published:Updated:

“லாக்டெளன் சிக்கல்... மத்திய, மாநில அரசுகள் என்ன செய்ய வேண்டும்..?” வாசகர்களின் பளிச் கருத்துகள்...

I N T E R A C T I O N

பிரீமியம் ஸ்டோரி

கொரோனா லாக்டௌன் காரணமாக வேலைக்குச் செல்ல முடியாத நிலை பலருக்கும் ஏற்பட்டிருக் கிறது. வருமானம் ஏதும் ஈட்ட முடியாத நிலையில், பலரும் கஷ்டப் படுகிறார்கள். இந்த நிலையில், மத்திய, மாநில அரசாங்கங்கள் பொருளாதார ரீதியில் என்ன செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?” என்று நாணயம் விகடன் ஃபேஸ்புக் (https://www.facebook.com/NaanayamVikatan) மற்றும் டிவிட்டர் (https://twitter.com/NaanayamVikatan) பக்கங்களில் கேட்டிருந்தோம். வாசகர்களும் தங்களது கருத்துகளைப் பளிச்சென்று பதிவிட்டிருந்தார்கள்.

“இப்போ உள்ள சூழ்நிலையில் நிறைய பேர் பேங்க்ல நகையை அடகு வைத்து குடும்ப கஷ்டத்தைச் சமாளிக்கின்றனர். இந்தச் சூழ்நிலை யில் மக்களுக்கு இரு அரசாங்கமும் செய்ய வேண்டிய உதவி, எல்லா பேங்க்லேயும் குறைவான வட்டிக்கு நகைக் கடன் தர வேண்டும். மீட்கும் நாளையும் கொஞ்சம் அதிகரிக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட அனைத்து பேங்கிலும் குறைவாக நகை வைத்தவர்களின் நகைக் கடனை முடிந்தால் ரத்து செய்யலாம்” என்று சொல்லிருக்கிறார் வாணி. அருமை யான யோசனை மேடம்!

“அனைத்து சமையல் காஸ் இணைப்புக்கும் காஸ் டெலிவரி செய்யும்போது மாதம் 5,000 வட்டி இல்லாத கடனாக ஆறு மாதம் வழங்கணும். பிறகு, மாதம்தோறும் 5,000 திரும்பப் பெற்றுக்கொள்ளலாம். மற்றவர்களுக்கு ரேஷன் கடைகளில் 5,000 வழங்கலாம். மற்ற அனைத்துக் கடன்களுக்கும் மாதத் தவணை இல்லாமல் இரண்டு ஆண்டுகள் கால நீட்டிப்பு செய்து தர வேண்டும்” என்று பதிவிட்டிருக்கிறார் சிவகுமார். சூப்பர் ஜி...

“லாக்டெளன் சிக்கல்... மத்திய, மாநில அரசுகள் என்ன செய்ய வேண்டும்..?” வாசகர்களின் பளிச் கருத்துகள்...

“பெட்ரோல்,டீசல் விலையைக் குறைக்க வேண்டும். விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும்.ஜி.எஸ்.டி வரியை உணவுப் பொருள் களுக்கு 1% எனக் குறைக்க வேண்டும்”னு சொல்லிருக்காரு நஜீம். நடந்தா நல்லாத்தான் இருக்கும்!

“பணக்காரர்கள் மேலும் பணக்காரர் ஆகுறாங்க; ஏழைகள் மேலும் ஏழைகள் ஆகுறாங்க இந்த லாக்டௌன்ல. ஆறு மாதத்துக்கு ஜி.எஸ்.டி வருவாயில் இருந்து வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர் களுக்கு மாதம்தோறும் உதவித் தொகை வழங்கலாம்”னு தன்னோட யோசனையைச் சொல்லியிருக்காரு பிரசன்ன நாராயணசாமி.

“இ.எம்.ஐ தவணை கட்டலைன்னா சிபில்ல சேராதபடிக்கு ஒரு வருஷம் ஒத்திவைக்கலாம். இரண்டு மாசத்துக்கு தலா 5,000 இலவசமா தந்து உதவலாம் ரேஷன் கார்டு வழியா. பணம் சார்ந்த உதவி அல்லாம வேற எந்த உதவியும் இந்த நேரத்துல பயனற்றதே”னு சொல்லிருக்காரு சுரேஷ் நந்தகுமார்.

“வீட்டு வாடகை, அத்தியாவசப் பொருள்கள், மருத்துவம் என ஏதாவது உதவி செய்யலாம்” என்று தன் எதிர்பார்ப்பைச் சொல்லி இருக்காரு விளாங்குடி அரசு.

“வீட்டு வாடகையில் இருப்பவர் களிடம் ஒரு மாத வாடகையை வீட்டின் உரிமையாளர்கள் வாங்கக் கூடாது என்று அரசாங்கம் அறிவிக்க வேண்டும். வாடகை வீட்டில் இருப்ப வர்களுக்கு இது உதவியாக இருக்கும்” என்று சொல்லிருக்காரு சுரேஷ்குமார்.

“கொரோனா தொற்றுக்கு மருந்து கண்டுபிடிக்கனும். பிறகு ஊரடங்கை நீக்கணும். மத்ததெல்லாம் மக்களே பார்த்துக்கொள்வாங்க”னு சொல்லிருக்காரு நிஷாந்த். கரெக்ட்டு...

“இவர்களால் கார்ப்பரேட் கடனை மட்டும்தான் தள்ளுபடி செய்ய முடியும். எங்களைப் போன்ற பாமர மக்களுக்காக ஏதும் செய்ய முடியாதுங்க. பாவம் ஏழை மக்கள்! நாங்களே எங்களைப் பார்த்துக் கொள்கிறோம்” என ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்துருக்காரு சக்தி கணேஷ்!

நீங்க என்ன நினைக்கிறீங்க மக்களே..!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு