Published:Updated:

சிக்கலில் இந்தியப் பொருளாதாரம்..? வளர்ச்சிக் கணிப்பை குறைத்த மூடிஸ்... சரியும் பங்குச் சந்தை!

சரியும் இந்தியப் பங்குச் சந்தை

நாட்டின் பொருளாதாரம், வேலைவாய்ப்பு, தனிநபர் சராசரி வருமானம் எல்லாமும் ஜிடிபி வளர்ச்சி விகிதத்தோடு தொடர்புடையவை. இந்த வளர்ச்சி விகிதம் குறையும்போது அனைத்தும் பாதிப்புக்குள்ளாகும்.

சிக்கலில் இந்தியப் பொருளாதாரம்..? வளர்ச்சிக் கணிப்பை குறைத்த மூடிஸ்... சரியும் பங்குச் சந்தை!

நாட்டின் பொருளாதாரம், வேலைவாய்ப்பு, தனிநபர் சராசரி வருமானம் எல்லாமும் ஜிடிபி வளர்ச்சி விகிதத்தோடு தொடர்புடையவை. இந்த வளர்ச்சி விகிதம் குறையும்போது அனைத்தும் பாதிப்புக்குள்ளாகும்.

Published:Updated:
சரியும் இந்தியப் பங்குச் சந்தை

இலங்கை பொருளாதார நெருக்கடி உலக நாடுகள் முழுவதையும் திரும்பிப் பார்க்க வைத்தது. தொடர்ந்து பாகிஸ்தானிலும் அது போன்ற ஒரு நெருக்கடி உருவானதையும் பார்த்தோம். இவை மட்டுமல்ல அமெரிக்காவிலும் 40 ஆண்டுகளில் இல்லாத பணவீக்க உயர்வால் மீண்டும் பொருளாதார நெருக்கடி வரலாம் என்ற அச்சம் உருவாகியுள்ளது.

பொருளாதாரம்
பொருளாதாரம்

தற்போது மூடிஸ் வெளியிட்டுள்ள கணிப்பு இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்தும் கேள்வி எழுப்புவதாக இருக்கிறது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக் குறியீடாகக் கருதப்படும் ஜிடிபி வளர்ச்சி விகிதம் 2022-ல் 7.7 சதவிகிதமாகக் குறையும் எனக் கூறியுள்ளது.

நாட்டின் பொருளாதாரம், வேலைவாய்ப்பு, தனிநபர் சராசரி வருமானம் எல்லாமும் ஜிடிபி வளர்ச்சி விகிதத்தோடு தொடர்புடையவை. இந்த வளர்ச்சி விகிதம் குறையும்போது அனைத்தும் பாதிப்புக்குள்ளாகும்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

2021-ல் ஜிடிபி வளர்ச்சி விகிதம் 8.3 சதவிகிதமாக இருந்த நிலையில் 2022-ல் 7.7 சதவிகிதமாகக் குறையும் என்கிறது மூடிஸ். முன்னதாக 2022-ல் வளர்ச்சி விகிதம் 8.8 சதவிகிதமாக இருக்கும் எனக் கூறியிருந்த நிலையில் தற்போது மறு கணிப்பை வெளியிட்டுள்ளது. இது 2023-ல் மேலும் குறைந்து 5.2 சதவிகிதமாகக் குறையும் எனவும் கூறியுள்ளது.

நடப்பு நிதி ஆண்டின் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் ஜிடிபி விகிதம் 13.5 சதவிகிதமாக இருக்கிறது. இது நடப்பாண்டின் மிக வேகமான வளர்ச்சியாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

GDP
GDP

மேலும், மற்ற நாடுகளோடு ஒப்பிடுகையில் இந்தியாவின் பொருளாதாரம் பரவாயில்லை என்கிறார்கள். அமெரிக்காவை பயமுறுத்தும் அளவுக்கு வளர்ந்து வரும் சீனாவின் பொருளாதார வளர்ச்சி விகிதமே இந்திய வளர்ச்சி விகிதத்தோடு ஒப்பிடுகையில் மிக மிகக் குறைவாக இருக்கிறது.

இந்திய பொருளாதார வளர்ச்சி குறித்த கணிப்பு விவரங்கள் வெளியானதையொட்டி இந்தியப் பங்குச் சந்தைகள் இன்று கடுமையாக சரிந்து வர்த்தகமாயின.

அமெரிக்க ஃபெடரல் வங்கி தலைவர் ஜெரோம் பாவெல் வட்டி விகிதம் தொடர்ந்து அதிகரிக்கும் என்று கடந்த வாரத்தில் கூறியதும் திங்கள்கிழமை சென்செக்ஸ் 700 புள்ளிகளுக்கும் மேல் சரிந்தது. ஆனால், அடுத்த நாள் மீண்டும் ஏற்றம் கண்டு பழைய நிலைக்குத் திரும்பியது. இதனால் முதலீட்டாளர்கள் சற்று ஆசுவாசமடைந்தனர்.

பங்குச் சந்தை
பங்குச் சந்தை

இந்நிலையில், ஜிடிபி கணிப்பு புள்ளிவிவரங்கள் வெளியானதும் மீண்டும் சந்தை கடுமையான இறக்கத்தைச் சந்தித்தது. சென்செக்ஸ் 800 புள்ளிகள் வரை இறக்கம் கண்டது. நிஃப்டி 230 புள்ளிகள் வரை இறக்கம் கண்டது.

பங்குச் சந்தைகள் தொடர் ஏற்ற இறக்கத்தில் இருந்தாலும் முதலீடுகள் குறித்த முடிவுகளை முதலீட்டாளர்கள் கவனமாக எடுத்தால் இழப்புகளைத் தவிர்க்கலாம்.