Published:Updated:

அன்பான அம்மாவுக்கு அருமையான பணத் திட்டம்!

அன்னையர் தின ஸ்பெஷல்
பிரீமியம் ஸ்டோரி
அன்னையர் தின ஸ்பெஷல்

அன்னையர் தின ஸ்பெஷல்

அன்பான அம்மாவுக்கு அருமையான பணத் திட்டம்!

அன்னையர் தின ஸ்பெஷல்

Published:Updated:
அன்னையர் தின ஸ்பெஷல்
பிரீமியம் ஸ்டோரி
அன்னையர் தின ஸ்பெஷல்

ஒவ்வோர் ஆண்டும் மே மாதம் இரண்டா வது ஞாயிற்றுக்கிழமை ‘அன்னையர் தின’மாக உலகமெங்கிலும் கொண்டா டப்படுகிறது. இந்த மே மாதம் 8-ம் தேதி அன்று அன்னையர் தினம் கொண்டாடப்படும் நிலையில், நம்மைப் பெற்ற நம் அன்பான அம்மாக்களுக்கு பண ரீதியில் என்னென்ன செய்யலாம் என்பது குறித்து நிதி ஆலோசகர் மற்றும் பிரைம் இன்வெஸ்டர். இன் நிறுவனத்தின் இணை இயக்குநர் வித்யா பாலாவிடம் கேட்டோம். அவர் சொன்ன விவரங்கள் இனி...

எமோஷனல் கவுன்சலிங்...

“இந்த அன்னையர் தினத்தில் அம்மாவுக்கு அவர்களின் பிள்ளைகள் செய்ய வேண்டிய முதல் கடமை எமோஷனல் கவுன்சலிங் செல்லும் வாய்ப்பை அவருக்கு ஏற்படுத்திக் கொடுப்பதுதான்.

ஒருவரின் மனம் மகிழ்ச்சியாக இருக்கும் போதுதான், நிதி சார்ந்த நடவடிக்கைகளை அவரால் சிறப்பாகக் கையாள முடியும். அப்போதுதான் பிள்ளைகள் தரும் ஃபைனான்ஷியல் பரிசுகளின் நன்மைகளை அவர் முழுமையாக அனுபவிக்க முடியும். அதனால், இந்த அன்னையர் தினத்தில் ஒரு எமோஷனல் கவுன்சலிங்கை உங்களுடைய அம்மாவுக்கு ஏற்படுத்திக்கொடுங்கள்” என்றவர், இந்த அன்னையர் தினத்தில் என்னென்ன ஃபைனான்ஷியல் பரிசுகளை அம்மாவுக்குக் கொடுக்கலாம் என்பதை எடுத்துச் சொன்னார்.

அன்பான அம்மாவுக்கு அருமையான பணத் திட்டம்!

தனி சேமிப்புக் கணக்கு...

தனது தனிப்பட்ட செலவுகளுக்காக ஒவ்வொரு முறையும் அப்பாவிடம் பணத்துக் காகக் கையேந்தி நிற்கும் நிலையில்தான் இன்றைய அம்மாக்கள் இருக்கிறார்கள் என்று பொத்தாம் பொதுவாகச் சொல்லிவிட முடியாது. பெரும்பாலான பெண்கள் இன்று வேலைக்குச் செல்ல ஆரம்பித்திருப்பதால், அவர்கள் கையில் பணம் புழங்க ஆரம்பித் திருக்கிறது.

பணம் சம்பாதித்தாலும் அதைக் கொண்டு வந்து கணவனிடம் கொடுக்கும் நிலை அதிகம் இருப்பதாலும், வேலைக்குச் சென்று சம்பாதிக் கும் அம்மாக்களுக்காகவும் தனி கணக்கை அன்னையர் தினத்தன்று ஆரம்பித்து, அதில் மாதம்தோறும் அவர்களுக்காக ஒரு குறிப்பிட்ட தொகையைப் போட்டுவைப்பது அவர்களுக்கு பேருதவியாக இருக்கும். இதனால், அவர்கள் மிகச் சுதந்திரமாகச் செலவு செய்வார்கள். யாரையும் எதிர்பார்த்திருக்க வேண்டிய நிலை உருவாகாது. மாதம்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையை அம்மாவுக்கென ஆரம்பிக்கப்பட்ட தனி கணக்கில் போடுவதைக் காட்டிலும், மொத்தமாக ஒரு தொகையைப் போட்டு அந்த வங்கிக் கணக்கை அம்மாவிடம் பரிசாகத் தருவது அவருக்கு நிஜமானதொரு சர்ப்ரைஸ் கிஃப்டாக இருக்கும்.

கோல்டு ஃபண்ட்...

அம்மாவுக்கு நீண்டகாலமாக தங்க வளையல் வாங்க வேண்டும் அல்லது நெக்லஸ் வாங்க வேண்டும் என்கிற ஓர் ஆசை இருக்கும். அதற்குப் பணம் சேர்க்கும் விதமாக ஒரு கோல்டு ஃபண்ட் எஸ்.ஐ.பி கணக்கை ஆரம்பித்து, அதை அவருக்கு பரிசாக வழங்கலாம். அதில் மாதம்தோறும் ஒரு தொகையை அவருக்காக முதலீடு செய்து கொண்டே வந்து, நகை வாங்கத் தேவைப் படும் தொகை சேர்ந்த பிறகு, அதை எடுத்து நகை வாங்கி அம்மாவுக்கு வாங்கித் தரலாம். இந்த ஃபண்டுகளுக்கு குறைந்தபட்சம் மூன்று ஆண்டுக்கால முதலீட்டில் ஒரு நல்ல வருமானம் கிடைக்கும். தங்கத்தை நாணயங்களாக வாங்கிச் சேமிப்பது அல்லது ஆபரணங்களாக வாங்கிச் சேமிப்பதுதான். பொதுவாக, பெண்களுக்கு, குறிப்பாக அம்மாக்களுக்கு தெரியும். கோல்டு பாண்டுகள், கோல்டு இ.டி.எஃப்-கள் இருப்பதை அவர்களுக்கு அன்னையர் தினம் என்கிற நல்ல தினத்தில் அறிமுகம் செய்யும்போது, அதை அவர்கள் எமோஷனலாகப் பார்ப்பதுடன், தடையின்றி அதில் முதலீட்டையும் செய்து வருவார்கள்.

அஞ்சலக ஆர்.டி...

அம்மாக்களுக்கு மிகவும் பிடித்த சேமிப்பு எனில், அது ‘அஞ்சரைப் பெட்டி’ சேமிப்புதான். வீட்டுச் செலவுக்காக அப்பாவிடம் வாங்கும் பணத்தில் மிச்சம் பிடித்து அந்தத் தொகையை அஞ்சரைப் பெட்டியில் சேமித்து வைத்து, வீட்டின் அவசரத் தேவைக்கான பயன்பாட்டுக்கு அதை எடுத்துச் செலவு செய்வார்கள். அப்படிப்பட்ட அம்மாக் களுக்கு ஒரு அஞ்சலக ஆர்.டி சேமிப்புக் கணக்கை ஆரம்பித்து, அதை அன்னையர் தினத்தில் பரிசாகக் கொடுத்தால் அவர்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும்.

டிராவலுக்காக சேமிப்பு...

பொதுவாக, அம்மாக்கள் சுற்றுலா செல்வதற்கு அதிகம் விரும்ப மாட்டார்கள். அப்படியே விரும்பினாலும் அதை அவர்கள் வெளிப்படுத்துவது கிடையாது. 40 வயதுக்கு மேல் செய்யும் பயணங்கள் மன அழுத்தத்தை குறைப்பதுடன், எதிர்கால வாழ்க்கையைத் தைரியமாக எதிர்கொள்வதற்கு பேருதவி செய்கின்றன. அந்த வகையில், சுற்றுலா செல்வதற் கான தொகையை மாதம்தோறும் எஸ்.ஐ.பி முறையில் ஒரு மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் போட்டு, அந்தத் தொகையை அம்மாவுக்குப் பரிசளிப்பது மிகச்சிறந்த பரிசாக இருக்கும்.

வித்யா பாலா
வித்யா பாலா

ரிடையர்மென்ட் ஹோம்ஸ்...

மகனோ, மகளோ உள்ளூரில் இருக்கும்போது நம்மைப் பெற்ற அம்மாக்களை நம்முடன் வைத்திருப்பது அவசியம். ஆனால், இன்றைய நிலையில் பலரும் வெளிமாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் சென்று வேலை பார்க்கிறார்கள். தங்கள் அம்மாக்களை தங்களுடன் அழைத்துக்கொண்டு செல்ல முடியாத நிலையில் இருப்பவர் கள், தங்களின் அம்மாவை (அப்பாவையும்) ஓய்வுக் காலத்தில் அனைத்து வசதி களுடன் கூடிய ‘ரிடையர்மென்ட் ஹோம்ஸ்’ஸில் நிம்மதியாக இருக்கச் செய்யும் நிலையை உருவாக்க வேண்டும்.

‘கேட்டட் கம்யூனிட்டி’ என்று சொல்லப்படும் இந்த ரிடையர் மென்ட் ஹோம்ஸில், அவர்களின் வயதையொட்டிய பலரும் வசிப்பார்கள். பிள்ளைகளுக்குத் தொந்தரவு தராமல் அங்கு வசிக்க முடியும் என்பதைத் தாண்டி, வயதான காலத்தில் மன மகிழ்ச்சியுடன் அவர்களால் அங்கு வசிக்க முடியும். அது மாதிரியான ஒரு நல்ல ஹோமில் முதலீடு செய்து, ஒரு நல்ல வீட்டை வாங்கி அன்னையர் தினத்தன்று அதை அம்மாக் களுக்குப் பரிசாக வழங்கலாம்” என்றார் வித்யா பாலா.

அம்மாக்கள் தங்கள் பிள்ளை களிடம் இருந்து எப்போதும் எதிர்பார்ப்பது, அன்பும், அக்கறையும்தான். இந்த இரண்டையும் குறைவில்லாமல் தந்தபின், எதைத் தந்தாலும் அம்மாக்கள் நிச்சயம் ஏற்றுக் கொள்ளவே செய்வார்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism