Published:Updated:

புதிய ஃபண்ட் அறிமுகம்: இ.டி.எஃப் & இண்டெக்ஸ் ஃபண்ட்..!

புதிய அறிமுகம்

மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் புதிய ஃபண்டுகளை அவ்வப்போது அறிமுகம் செய்கின்றன. ஆனால் ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மூன்று மாதங்கள் புதிய ஃபண்டுகள் வெளியிடுவதற்கு சந்தைக் கட்டுப்பாட்டு ஆணையமான செபி தடை விதித்திருந்தது.

புதிய ஃபண்ட் அறிமுகம்: இ.டி.எஃப் & இண்டெக்ஸ் ஃபண்ட்..!

மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் புதிய ஃபண்டுகளை அவ்வப்போது அறிமுகம் செய்கின்றன. ஆனால் ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மூன்று மாதங்கள் புதிய ஃபண்டுகள் வெளியிடுவதற்கு சந்தைக் கட்டுப்பாட்டு ஆணையமான செபி தடை விதித்திருந்தது.

Published:Updated:
புதிய அறிமுகம்

மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள், புதிய ஃபண்டுகளை அவ்வப்போது அறிமுகம் செய்கின்றன. ஆனால் ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மூன்று மாதங்களில், புதிய ஃபண்டுகள் வெளியிடுவதற்கு
சந்தைக் கட்டுப்பாட்டு ஆணையமான செபி தடை விதித்திருந்தது. தற்போது இந்தத் தடை முடிவுக்கு வந்துள்ளதை அடுத்து, புதிய ஃபண்டுகள் வெளியிட மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் தயாராகியிருக்கின்றன.

மியூச்சுவல் ஃபண்ட்
மியூச்சுவல் ஃபண்ட்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மோதிலால் ஆஸ்வால் எஸ்&பி பிஎஸ்சி ஹெல்த்கேர் இடிஎப் (Motilal Oswal S&P BSE Healthcare ETF)

மோதிலால் ஆஸ்வால் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், நிஃப்டி ஹெல்த்கேர் குறியீட்டில் முதலீடு செய்யும் புதிய திட்டத்தை அறிமுகம் செய்திருக்கிறது. இந்தத் திட்டத்தில் ஜூலை 22-ம் தேதி வரை முதலீட்டை மேற்கொள்ளலாம். ஜூலை 30-க்குப் பிறகு மறுமுதலீட்டை என்ஏவி மதிப்பின் அடிப்படையில் மேற்கொள்ள முடியும். குறைந்தபட்சம் 500 ரூபாயில் இருந்து முதலீட்டை மேற்கொள்ள முடியும்.

எஸ்ஐபி முறையில் முதலீடு செய்யும் வசதி உள்ளது. பொதுவாக, ஹெல்த்கேர் துறை தற்காப்பு வகையின் கீழ் வருவதால் அதன் ஏற்ற இறக்கங்கள் குறைவாக இருக்கும். என்றாலும் செக்டோரல் வகை திட்டங்கள் அதிக ரிஸ்க் உடையவை ஆகும். அதனால் அதிக ரிஸ்க் எடுக்கும் திறன் உடைய முதலீட்டாளர்கள் மட்டும் இந்தத் திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மோதிலால் ஆஸ்வால் எஸ் & பி பிஎஸ்சி பைனான்சியல் எக்ஸ் பேங்க் 30 இன்டெக்ஸ் பண்ட் (Motilal Oswal S&P BSE Financial Ex Bank 30 Index Fund)

மோதிலால் ஆஸ்வால் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் நிதித்துறை மற்றும் வங்கித்துறை சார்ந்த நிறுவனங்களில் முதலீடு செய்யும் மற்றொரு வகை திட்டத்தை இந்த வாரம் அறிமுகம் செய்துள்ளது. இந்தத் திட்டத்தில் ஜூலை 22 வரை முதலீட்டை மேற் கொள்ளலாம். ஜூலை 30-க்குப் பிறகு மறுமுதலீட்டை என்ஏவி மதிப்பின் அடிப்படையில் மேற்கொள்ள முடியும்.

என்.எஃப்.ஒ
என்.எஃப்.ஒ

குறைந்தபட்சம் 500 ரூபாயில் இருந்து முதலீட்டை மேற்கொள்ளலாம். கடந்த இரண்டு ஆண்டுகளாக நிதித்துறை மற்றும் வங்கித்துறை சார்ந்த நிறுவனங்கள் அதிக வருவாயை தரவில்லை. பங்குச் சந்தை கடுமையான வீழ்ச்சியை சந்தித்து உள்ள இந்தத் தருணத்தில், அதிக வீழ்ச்சி அடைந்த வங்கித் துறையில் முதலீட்டை மேற்கொள்வது சந்தை சரிவில் இருந்து மீண்டு வரும்போது அதிக லாபத்தை ஒருவருக்கு பெற்றுத்தரும்.

எனினும், ஒரு துறையின் கீழ் முதலீட்டை மேற்கொள்ளும் செக்டோரல் வகை திட்டங்கள், அதிக ரிஸ்க் உடையவை ஆகும். அதனால் அதிக ரிஸ்க் எடுக்கும் திறன் உடைய முதலீட்டாளர்கள் மட்டும் இந்தத் திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம்.