Published:Updated:

`ஆம்பளைக்கு சமையல் படிப்பு எதுக்குன்னு சொன்னவங்கதான் அதிகம்! - பேக்கரி தொழிலில் கலக்கும் இளைஞர்

பேக்கரியில் முருகானந்தன் ( நா.ராஜமுருகன் )

``இங்கே யாரும், எந்தத் தொழிலும் ஆரம்பிக்கலாம். அந்தத் தொழில் குறித்த அடிப்படை அறிவும், இரவு பகல் பார்க்காமல் உழைக்கும் குணமும் இருந்தால், வெற்றி யாருக்கும் சாத்தியம்தான். அதாவது, ஸ்மார்ட் வொர்க், ஹார்டு வொர்க்குனு இரண்டும் தேவை" என்று, தம்ஸ்அப் காட்டி பேசுகிறார் முருகானந்தன்.

`ஆம்பளைக்கு சமையல் படிப்பு எதுக்குன்னு சொன்னவங்கதான் அதிகம்! - பேக்கரி தொழிலில் கலக்கும் இளைஞர்

``இங்கே யாரும், எந்தத் தொழிலும் ஆரம்பிக்கலாம். அந்தத் தொழில் குறித்த அடிப்படை அறிவும், இரவு பகல் பார்க்காமல் உழைக்கும் குணமும் இருந்தால், வெற்றி யாருக்கும் சாத்தியம்தான். அதாவது, ஸ்மார்ட் வொர்க், ஹார்டு வொர்க்குனு இரண்டும் தேவை" என்று, தம்ஸ்அப் காட்டி பேசுகிறார் முருகானந்தன்.

Published:Updated:
பேக்கரியில் முருகானந்தன் ( நா.ராஜமுருகன் )

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே உள்ள கூணவேலம்பட்டி புதூரைச் சேர்ந்தவர் முருகானந்தன். 41 வயதாகும் இவர், சாதாரண குடும்ப பின்னணியைக் கொண்டவர். குடும்ப வறுமையைப் போக்க, சமையல் சம்பந்தப்பட்ட படிப்பை முடித்துவிட்டு, சென்னை, அமெரிக்கா, கப்பல் எனப் பல இடங்களில் வேலை பார்த்தவர்.

பேக்கரியில் முருகானந்தன்
பேக்கரியில் முருகானந்தன்
நா.ராஜமுருகன்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஒரு புள்ளியில், `ஓடியது போதும்' என்று நினைத்து, பலரது எதிர்ப்பையும் மீறி, கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு, ராசிபுரம் ஆண்டகளூர் கேட் அருகே பேக்கரி, தொடர்ந்து ஹோட்டல் என சொந்தத் தொழிலில் கால் பதித்தார்.

அயராத உழைப்பு, கொடுக்கும் உணவில் தரம் என இவர் காட்டிய தொழில் பக்தி, தற்போது மாதம் ரூ. 30 லட்சம் வரை டேர்ன் ஓவர் செய்யும் அளவுக்கும் இவரை தொழிலில் வெற்றிக்கொடி நாட்ட வைத்திருக்கிறது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கோவை சாலையில் இருப்பதால், `கோவை ஸ்வீட்ஸ் அண்ட் பேக்கரி' என்று தனது கடைக்கு பெயர் வைத்திருக்கிறார். தனது பேக்கரியில் `பிஸி'யாக இருந்த முருகானந்தத்தை சந்தித்து பேசினோம்...

``விவசாய குடும்பம் என்னுடையது. மூணு ஏக்கர் நிலமிருக்கு. ஆனால், ராசிபுரம் பகுதியில் வறட்சி நிலவியதால், 2000ம் வருஷத்தில் சரியான விவசாயம் நடக்கலை. அதனால், குடும்பத்துல ஏகப்பட்ட கஷ்டம். என்னைப் படிக்க வைக்க முடியாத சூழல். அப்போது, சமையல் படிப்பு புதுசு என்பதால், அதுல சேர்ந்தேன். அக்கம் பக்கத்து திருமண வீடுகளில் வேலை பார்த்து, கிடைக்கும் வருமானத்தை வச்சு காலத்தைத் தள்ளிடலாம்னு அதுல சேர்ந்தேன்.

முருகானந்தன்
முருகானந்தன்
நா.ராஜமுருகன்

ஆனா, என்னோட உறவினர்கள், `ஆம்பளை பய சமையல் படிப்பு படிக்கிறியே. மூளைகீளை உனக்கு பிசகிபோயிட்டா?"னு அவநம்பிக்கையா பேசினாங்க. ஆனா, நான் விடாப்பிடியா அதுல சேர்ந்து, 2004-ம் ஆண்டு படிச்சு முடிச்சேன். உடனே, சென்னை கிண்டியில உள்ள ஒரு ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்ல, அதே ஆண்டு ரூ. 3,000 சம்பளத்துக்கு வேலைக்குச் சேர்ந்தேன். 2005-ம் ஆண்டு அந்த வேலையை விட்டப்ப, ரூ.15,000 சம்பளம் வாங்கினேன்.

தொடர்ந்து, அமெரிக்க நாட்டோட கப்பல் ஒண்ணுல, 2005 முதல் 2009 வரை வேலை பார்த்தேன். அந்த வேலையை விட்டப்ப, 4 லட்சம் ரூபாய் மாசம், சம்பளமா வாங்குனேன். குடும்ப கஷ்டம் கொஞ்சம் கொஞ்சமா மறைய ஆரம்பிச்சது. ஆனாலும் உறவினர்கள், `சமைச்சு போடுறதுக்கு இவ்வளவு சம்பளமா?'னு பொறாமையாதான் பேசுனாங்க.

தொடர்ந்து, கலிஃபோர்னியாவுல 2009-ல் இருந்து 2011-ம் ஆண்டு வரை வேலை பார்த்தேன். கடைசியா அங்க வேலையை விட்டப்ப மாசம் ரூ.5 லட்சம் சம்பளம் வாங்கிக்கிட்டு இருந்தேன். இந்த நிலையில்தான், எனக்கும் நித்யாவுக்கும் திருமணம் ஆனுச்சு. திருமணமாகி ஒரு வருஷம் வீட்டுலேயே இருந்தேன். `வேலையை விட்டுட்டு, சொந்தமா பேக்கரி தொடங்கப்போறேன்'னு சொன்னதும், `உனக்கு பைத்தியம் புடிச்சுருச்சா?'னு வீட்டுல தாம்தூம்னு குதிச்சாங்க.

கேக்
கேக்
நா.ராஜமுருகன்

உறவினர்களும் தெரிஞ்சவங்களும், `இருக்கிறதை விட்டுட்டு பறக்குறதுக்கு ஆசைப்படுற'னு சொன்னாங்க. ஆனா, என்னோட மனைவி என்னை உற்சாகப்படுத்தினாங்க. உடனே, பேங்குல கடனை வாங்கி ரூ. 30 லட்சம் முதலீட்டில் இந்த இடத்தை வாடகைக்குப் புடிச்சு, 2013-ம் ஆண்டு 8 வேலை ஆட்களோட இந்த பேக்கரியை ஆரம்பிச்சேன்.

அமெரிக்கா வரை போனதால், கேக்குகளில் 200 வகை, பப்ஸில் 3 வகை, ஸ்வீட்ஸில் 70 னு 450 வகைகள் செய்ய ஆரம்பிச்சோம். அதோட, டீ, காபி, ஸ்நாக்ஸ் விற்பனையும் தொடங்கினோம். ஆரம்பத்தில ரொம்ப டல்லா இருந்துச்சு.

அதன் பிறகு, எங்க கடை உணவுப் பொருள்களோட சுவை புடிச்சுப் போக, ஆறு மாசத்துல பேக்கரி பிக்கப் ஆக ஆரம்பிச்சது. சேலம் செவ்வாபேட்டையில் பேக்கரி உணவு தயாரிக்கும் பொருள்களை தரமா பார்த்து வாங்க ஆரம்பிச்சோம். பேக்கரி உணவுப் பொருட்களுக்கு, செக்கில் ஆட்டிய நல்ல எண்ணெய், கடலை எண்ணெயை மட்டும் பயன்படுத்தினோம்.

அதுக்காக, கொஞ்சம் விலை கூடுதலா வச்சு விக்க வேண்டியிருந்துச்சு. இங்க வர்ற அஞ்சு கஸ்டமர்கள்ல ஒருத்தர், `டேஸ்ட், தரம் நல்லா இருக்கு. ஆனா, விலை கூடுதலா இருக்கே'னு சொல்வாங்க. அவங்ககிட்ட அதுக்காக காரணத்தை பக்குவமா புரிய வைப்பேன். ராசிபுரம் நகரம் மட்டுமன்றி, சுத்தியுள்ள 12 கிராம மக்கள் பெரும்பாலானோர் எங்க கடைக்கு வர ஆரம்பிச்சாங்க.

டீ போடும் முருகானந்தன்
டீ போடும் முருகானந்தன்
நா.ராஜமுருகன்

பேக்கரி ஆரம்பிச்ச அடுத்த வருஷமே பியூர் சைவ ஹோட்டலை ஆரம்பிச்சோம். காலை டிபன், மதியம் மீல்ஸ், இரவு டிபன்னு கொடுத்தோம். அதையும் தரமாகவும் சுவையாகவும் கொடுத்ததால், அதற்கும் மக்கள் ஏகோபித்த ஆதரவு கொடுத்தாங்க. இதனால், வந்த வருமானத்தை எல்லாம் ஹோட்டல், பேக்கரியை டெவலெப் பண்ணுவதற்காகவே போட்டேன்.

ரூ. 2 கோடி வரை இன்வெஸ் பண்ண வேண்டியிருந்துச்சு. அதனால், வேலை ஆட்களின் தேவை அதிகரிச்சதால், வேலை ஆட்களின் எண்ணிக்கையை படிப்படியா கூட்டினேன். இப்போது, இரண்டு ஷிப்டா 60 பேர் வரை இங்கே வேலை பாக்குறாங்க. இவ்வளவு வேலை ஆட்கள் இருக்காங்களேனு அசால்டா இருக்க மாட்டேன்.

நானே ஒவ்வொரு தயாரிப்பையும் ஒரு கஸ்டமர் மனநிலையில் இருந்து சுவை பார்த்து, ஓகே பண்ணுவேன். பேக்கரி, ஹோட்டல், டீ ஸ்டால்னு எல்லா வகையிலும் தினமும் 3,500 கஸ்டமர்கள் எங்க கடைக்கு வந்துட்டுப் போற அளவுக்கு இப்போது வளர்ந்திருக்கிறோம். இதுல வந்த வருமானத்துல ஒரு பகுதியை வச்சு, நிலத்துல இன்வெஸ் பண்ணியிருக்கேன். எங்க பேக்கரிக்கு எதிரே வந்த இடத்தை வாங்கி, 4 வீடுகள், மூணு கடைகள் கட்டி வாடகைக்கு விட்டிருக்கிறேன். என்னோட மனைவி எல்லா வகையிலும் எனக்கு ஒத்தாசையா இருக்காங்க.

பேக்கரியில் முருகானந்தன்
பேக்கரியில் முருகானந்தன்
நா.ராஜமுருகன்

அதேபோல், எங்க கைப்பக்குவம் இந்தப் பகுதி மக்களுக்கு பிடிச்சுப் போனதால், கடந்த 2 வருஷத்துக்கு முன்னாடி கோவைங்கிற பெயர்லேயே கேட்டரிங் சர்வீஸையும் ஆரம்பிச்சேன். திருமணம், வீடு கிரகபிரவேஷம், கிடா வெட்டு விழாக்கள், சடங்குனு தொடர்ச்சியா ஆர்டர் வர ஆரம்பிச்சது. ஒரே நேரத்தில் 5,000 பேர்களுக்கு வரை உணவை சமைச்சு பரிமாறும் அளவுக்கு கேட்டரிங் தொழிலையும் கட்டமைச்சேன். இப்போ, எங்க கேட்டரிங் சர்வீஸ்ல 200 பேர்கள் வரை தற்காலிகமா வேலை செய்றாங்க.

மாசம் ரூ.30 லட்சம் வரை டேர்ன் ஓவர் நடக்குது. இடத்துக்கு மாத வாடகையா ரூ. 1 லட்சம் கொடுக்கிறேன். எல்லா செலவுகளும் போக, மாசம் ரூ. 5 லட்சம் வருமானம் வருது. சொந்தமா இடம் வாங்கி, அதுல ஹோட்டல், தங்கும் விடுதி, மீட்டிங் ஹால்னு கட்டும் முயற்சியில் இருக்கிறேன்.

எங்க பூர்வீகத் தொழிலான விவசாயத்தையும் கைவிடாம, வாழை, காய்கறிகள்னு வெள்ளாமை பண்ணிக்கிட்டு இருக்கிறேன். என்னைச் சுத்தியுள்ள நாலு பேர் நாலுவிதமா சொல்லி, என்னோட மனதைரியத்தைக் கலைக்கப் பார்த்தாங்க. ஆனா, உணவுத் தொழில் குறித்த அறிவு, விடாமுயற்சி, கடின உழைப்புனு எல்லாம் இருந்ததால், சாதிக்க முடிஞ்சது.

தோச சுடும் முருகானந்தன்
தோச சுடும் முருகானந்தன்
நா.ராஜமுருகன்

இதே நெடுஞ்சாலையில் பலபேர் ஹோட்டல் தொடங்கிட்டு, ஒரு மாசம், ஆறு மாசம், ஒரு வருஷம்னு குறுகிய காலத்தில் இழுத்து மூடியதைப் பார்த்திருக்கிறேன். அவங்களுக்கு, தொழில் தொடர்பா புரிதல் இல்லைன்னே சொல்லணும். பத்து வாளி சாம்பார் வச்சா, அன்னைக்குள்ள அந்த பத்து வாளி சாம்பாரையும் விற்க வைக்கணும். இல்லைன்னா, இன்னைக்கு இவ்வளவு பேர் வருவாங்க, இத்தனை வாளி சாம்பார் வைக்கணும்ங்கிற தொழில் நுணுக்கம் இருக்கணும்.

எல்லாத்தையும்விட, தூக்கத்தை தொலைச்சு உழைக்க தயாராக இருக்கணும். அதெல்லாம் இருந்தா, இந்த தொழிலில் யார் வேண்டுமானாலும் சாதிக்கலாம்" என்ற தனது வெற்றி ஃபார்முலாவை சுவைபட விவரித்தார் முருகானந்தன்.