Published:Updated:

``இந்தியா உலகத்திலேயே தலைசிறந்த டிஜிட்டல் சமூகமாக உருவாகப்போகிறது!" - முகேஷ் அம்பானி

முகேஷ் அம்பானி உறுதி
முகேஷ் அம்பானி உறுதி

`வியாபாரத்தை முன்னேற்ற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துங்கள்' என்று பிரதமர் மோடி கூறியதை மேற்கோள் காட்டிய அம்பானி பேச்சு.

`உலகப் பொருளாதார அடிப்படையில் இந்தியா மூன்றாம் பெரிய நாடாக உருவெடுக்கும் பாதையில் உள்ளது' என்று ரிலையன்ஸ் நிறுவனத் தலைவர் ``இந்தியா மூன்றாம் பெரிய வணிக நாடாக வரப்போகிறது என்பதில் எந்த ஓர் ஐயமும் இல்லை. அது ஐந்து ஆண்டுகளில் நடக்க சாத்தியம் ஆகுமா அல்லது 10 ஆண்டுகள் ஆகுமா என்று வேண்டுமானால் விவாதிக்கலாம்" என்றார்.

இந்தியா உலகத்திலேயே தலைசிறந்த டிஜிட்டல் சமூகமாக உருவாகப்போகிறது. 2019-ம் ஆண்டுக்கான உலக மக்கள்தொகை அறிக்கையின்படி பொருளாதார ரீதியில் இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகளைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு ஐந்தாம் பெரிய நாடாக இந்தியா உருவாகி உள்ளது. இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் (GDP) 2.94 ட்ரில்லியன் டாலராகவும், இங்கிலாந்து 2.83 ட்ரில்லியன் டாலராகவும், பிரான்ஸ் 2.71 ட்ரில்லியன் டாலராகவும் உள்ளன.

`ரூ.5 லட்சம் கோடி சொத்து மதிப்பை எட்டிய முதல் இந்தியர்!- முகேஷ் அம்பானி புதிய சாதனை

சென்ற ஆண்டு முதல் மைக்ரோசாஃப்ட் நிறுவனமும் ரிலையன்ஸ் நிறுவனமும் இந்தியாவின் வியாபாரத்தைப் பலவகைகளில் முன்னேற்ற, அடுத்த 10 ஆண்டுகளுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது" என்றார்.

`வியாபாரத்தை முன்னேற்ற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துங்கள்' என்று பிரதமர் மோடி கூறியதை மேற்கோள் காட்டிய அம்பானி, "தொழில்நுட்பங்கள் ஒவ்வொருவரின் வாழ்வையும் எளிமையாக்கும். வருங்கால சமுதாயத்தினர் வாழ்வு நிலை, நம் வாழ்கையைப்போல இருக்காது, மிகச்சிறப்பாக இருக்கும்" என்று கூறியுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு