Published:Updated:

தமிழகத்தின் தலைசிறந்த தொழில்முனைவோர்களை கௌரவிக்கிறான் விகடன்!

நாணயம் பிசினஸ் ஸ்டார் அவார்டு அப்டேட்ஸ்...

நாணயம் பிசினஸ் ஸ்டார் அவார்டு
நாணயம் பிசினஸ் ஸ்டார் அவார்டு

திறமைகளை அங்கீகரிக்க விகடன் என்றைக்குமே தவறியதில்லை. அரசியல், சினிமா, சமூகப்பணி, விளையாட்டு, இலக்கியம் எனப் பல்துறை சார்ந்த சாதனையாளர்களை ஒவ்வோர் ஆண்டும் விருதுகள் அளித்து விகடன் பெருமைப்படுத்துவது அனைவரும் அறிந்ததே. இந்தப் பணியில் தொழில்துறையினரையும் சேர்க்கும்வண்ணம், 2017-ல் 'நாணயம் பிசினஸ் ஸ்டார் அவார்டு' என்ற ஒன்றைத் தொடங்கியது விகடன். அதன்படி கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழகத்தில் தொழில்துறையில் கோலோச்சிவரும் ஜாம்பவான்களைக் கண்டறிந்து அவர்களைப் பெருமைப்படுத்தியது நாணயம் விகடன். அந்த வரிசையில் இது மூன்றாவது வருடம்.

Naanayam Business Awards 2019 Winners
Naanayam Business Awards 2019 Winners

இந்த வருடமும் வெவ்வேறு பிரிவுகளில் தொழில்துறையில் சாதித்துவரும் சாதனையாளர்களைக் கண்டறிந்து வெற்றியாளர்களைத் தேர்வுசெய்துள்ளது நாணயம் விகடன் குழு. இந்த வருடமும் தமிழகத்தின் தலைசிறந்த தொழில்முனைவோர்களுக்கு விருது அளித்து, கௌரவிப்பதில் பெருமை கொள்கிறது நாணயம் விகடன்.

இந்த ஆண்டில் வாகை சூடியிருக்கும் வெற்றியாளர்கள் குறித்து விரிவாகத் தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்..!

Panel Discussion on Current Trends in Real Estate Industry. Topic: Real Estate-Future Outlook - Commercial Space 1. Moderator : Ms. Meera Siva, Chartered Financial Analyst (CFA) and Leading Real estate Columnist. 2. Mr. Navin Ranka, Director, SPR Group

Panel Discussion
Panel Discussion

3. Mr. Vijay kumar, RERA - Real Estate (Regulations and Development) Act, Advocate 4. Mr.Amit Damodar, President, Chennai Real Estate Agents Association - CREAA. CREAA is a democratic organisation which follows best practices, and is fully compliant with all prevailing laws.

பணியாளர்களிடம் வித்தியாசமான அணுகுமுறை, புதுமையான புராடக்டுகள், கிரியேட்டிவான பணிச்சூழல்... ஸ்டார்ட்அப்களில் கெத்து காட்டும் ஆரஞ்ச் ஸ்கேப்!

Start-up Champion Award
Start-up Champion Award

Start-up Champion Award - Suresh Sambandam Founder Orangescape & CEO,kissflow

சுரேஷ் சம்பந்தம், ஆரஞ்சு ஸ்கேப் - சாப்ட்வேர் துறையில் கால்பதிக்க கணினி பொறியியல் கல்வி அவசியம் என்ற விதியை உடைத்து சுயமாக சாப்ட்வேர் தொழில்நுட்பத்தைக் கற்று இன்று ஆரஞ்சு ஸ்கேப் நிறுவனத்தை நிறுவியுள்ளார் சுரேஷ் சம்பந்தம். மென்பொருள் துறையில் புரோகிராம் உருவாக்குவதை விட வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நிறுவனமே வெற்றி பெரும் என்கிறார் சுரேஷ் சம்பந்தம்.

எண்ணற்ற தொழில்முனைவோர்களையும், ஏராளமான வேலைவாய்ப்புகளையும் தொடர்ந்து உருவாக்கிவரும் டிரஸ்ட்!

Business Mentor (Institution) Award
Business Mentor (Institution) Award

Business Mentor (Institution) Award - Bharatiya Yuva Shakti Trustஇங்கிலாந்தில் தொழில் முனைவோருக்கு அனைத்து விதமான உதவிகளையும் இளவரசர் செய்யும்போது, ஏன் இந்தியாவிலும் தொழில்முனைவோரை ஊக்குவிக்கக்கூடாது என்பதை நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது தா ன் பாரதிய யுவசக்தி டிரஸ்ட்.தொழில் முனைவோரின் ஐடியாக்களை மேம்படுத்துவதும், புதிய மார்கெட்டுகளுக்கு பொருட்களை எடுத்துச் செல்ல உதவும் ஒரு சிறு கருவிதான் மென்டரிங்'' என்கிறார் பாரதிய யுவசக்தி டிரஸ்டின் நிறுவனர் லட்சுமி வெங்கடேசன்

``இங்கிலாந்தில் தொழில் முனைவோருக்கு அனைத்து விதமான உதவிகளையும் இளவரசர் செய்யும்போது, ஏன் இந்தியாவிலும் தொழில்முனைவோரை ஊக்குவிக்கக்கூடாது என்பதை நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்டதுதான் பாரதிய யுவசக்தி டிரஸ்ட். தொழில் முனைவோரின் ஐடியாக்களை மேம்படுத்துவதும், புதிய மார்கெட்டுகளுக்கு பொருட்களை எடுத்துச்செல்ல உதவும் ஒரு சிறு கருவிதான் மென்டரிங்'' என்றார் லட்சுமி வெங்கடேசன்.

Social Consciousness Entrepreneur Award - Paul Basil Founder & CEO, Villgro Innovations Foundation

தோல்விகளோடு போராடி, ஃபீனிக்ஸ் பறவையாக எழுந்து, உயரப் பறந்து தங்கள் துறையில் உச்சம் தொட்டவர்கள்!

C.K Kumaravel & K.Veena
C.K Kumaravel & K.Veena

Phoenix Entrepreneur Award - C.K Kumaravel & K.Veena Groom India Salon & Spa Pvt.Ltd.

வேட்டியை எல்லோருக்குமான ஃபேஷன் ஸ்டேட்மெண்ட்டாக மாற்றிக்காட்டியவர்! Business Innovation Award - K R Nagarajan Founder & Chairman, Ramraj Cotton

தமிழகத்தின் தலைசிறந்த தொழில்முனைவோர்களை கௌரவிக்கிறான் விகடன்!

``ஆனந்த விகடன் எப்படி நாளிதழ் உலகில் பசுமை விகடன், நாணயம் விகடன், சக்தி விகடன் போன்ற விதவிதமான பொருட்களை வெற்றிகரமாகத் தந்துவருகிறதோ, அதுபோல் தான் ராம்ராஜூம் லிட்டில் ஸ்டார், ஜென் எக்ஸ் போன்ற விதவிதமான பொருட்களைத் தயாரித்து வருகிறது. நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதும் தமிழர் கலாச்சாரத்தை புத்துணர்வோடு வைப்பதுமே ராம்ராஜின் நோக்கம்'' என்று நெகிழ்ந்தார் கே.ஆர். நாகராஜன்

நூற்றுக்கணக்கான பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு தரும் பள்ளிக் கல்வி மட்டுமே படித்தவர்!

Rising Star Entrepreneur - T Sathish Kumar

Managing Director, Milky Mist Dairy Food Private Limited

Rising Star Entrepreneur - T Sathish Kumar
Rising Star Entrepreneur - T Sathish Kumar

``என்னுடைய வெற்றிக்குக் காரணம் தமிழக விவசாயிகள் மட்டுமே. என் தந்தை என்னை சுயமாக சிந்திக்க அனுமதித்தார். என்னை அது பெரிதும் ஊக்கப்படுத்தியது. என்னையும் ஒரு தொழிலதிபராக அது மாற்றியது'' என்கிறார் `Rising Star Entrepreneur' விருதுபெற்ற டி.சதீஷ்குமார்.

தன்னுடைய முன்னேற்றம் மட்டுமல்ல, தன்னுடன் இருக்கும் அனைவருக்குமான முன்னேற்றத்துக்கு உழைப்பவர்.

Business Mentor Award - Arun Jain

Business Mentor Award - Arun Jain
Business Mentor Award - Arun Jain

``எதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதைப் புரிந்து செயல்படுவது மிகவும் அவசியம். நாம் பயணிக்கும் பாதையில் கவனமாக நடந்தால் வெற்றியை அடையலாம்'' என்று அனுபவத்தில் இருந்து பேசினார் `Business Mentor Award' வென்ற அருண் ஜெயின்.

தோல்விகளைப் பாடமாகவும், வெற்றிகளைப் படிகளாகவும் மாற்றி மேலும் மேலும் வெற்றி நடைபோடும் வெற்றியாளர்! Self made Entrepreneur Award - M Ponnuswami Chairman & Managing Director, Pon Pure Chemical India Pvt Ltd

Self made Entrepreneur Award - M Ponnuswami
Self made Entrepreneur Award - M Ponnuswami

``அந்தக் காலத்தைவிட வசதிகள் நிறைய இருக்கின்றன. இணையம்தான் முக்கிய பங்காற்றி வருகிறது. அதன்மூலம் நம் தொழிலை முன்னேற்றலாம். வாடிக்கையாளர்களை சரியாக அணுகினால், நம்மை அவர்கள் முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்வார்கள்'' என்று தனது எண்ணம் பகிர்ந்தார் `Self made Entrepreneur Award' வென்ற எம்.பொன்னுசுவாமி

Lifetime Achievement Award - M M Murugappan
Lifetime Achievement Award - M M Murugappan
Awardees of Naanayam Vikatan Business Star Awards 2019
Awardees of Naanayam Vikatan Business Star Awards 2019