Published:Updated:

பட்ஜெட் 2022: அரசின் புதிய அறிவிப்புகள் ஹீரோவா ஜீரோவா? நாணயம் விகடனின் ஆன்லைன் அலசல் நிகழ்ச்சி

Union Budget 2022-23

இந்த பட்ஜெட்டானது பொருளாதாரத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லும் மிக அருமையான பட்ஜெட் என ஒரு தரப்பினரும், இந்த பட்ஜெட் கார்ப்பரேட் நிறுவனங்களுக்குத்தான் நிறைய நன்மைகளைச் செய்துள்ளது. சாதாரண மனிதர்களுக்கு எந்த நன்மையையும் செய்யவில்லை என இன்னொரு தரப்பினரும் பேசி வருகின்றனர்.

2022-23-ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் செவ்வாய்க்கிழமை அன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் ஆகியிருக்கிறது. இந்த பட்ஜெட் பற்றி பலரும் பலவிதமாக கருத்து சொல்லி வருகின்றனர்.

இந்த பட்ஜெட்டானது பொருளாதாரத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லும் மிக அருமையான பட்ஜெட் என ஒரு தரப்பினரும், இந்த பட்ஜெட் கார்ப்பரேட் நிறுவனங்களுக்குத்தான் நிறைய நன்மைகளைச் செய்துள்ளது, சாதாரண மனிதர்களுக்கு எந்த நன்மையையும் செய்யவில்லை என இன்னொரு தரப்பினரும் பேசி வருகின்றனர்.

FM Nirmala Sitharaman
FM Nirmala Sitharaman
AP Photo / Altaf Qadri

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்த பட்ஜெட் பற்றி முழுமையாக அலசி ஆராய்வதற்கு ஒரு சிறப்பு நிகழ்ச்சியை நாணயம் விகடன் - ஹீலியோஸ் வெல்த் மேனேஜ்மென்ட் நிறுவனமும் இணைந்து ஜூம் இணையதளத்தில் நடத்துகிறது.

நாளை (புதன்கிழமை) மாலை 7 மணி முதல் 8 மணி வரை நடக்கவுள்ள இந்த நிகழ்ச்சியில் மூன்று முக்கியமான நிபுணர்கள் இந்த பட்ஜெட் பற்றி தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்க இருக்கிறார்கள்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சிறுதொழில் நிறுவனங்களுக்கு இந்த பட்ஜெட்டில் என்னென்ன சாதகம், என்னென்ன பாதகம் என்பது பற்றி கொடீசியா அமைப்பின் தலைவர் எம்.வி.ரமேஷ் பாபு பேசுகிறார். அவருடன் சென்னையின் பிரபல ஆடிட்டர் கோபால கிருஷ்ண ராஜு, இந்த பட்ஜெட் விதித்துள்ள வரிகள் பற்றி பேசுகிறார்.

பட்ஜெட் 2022: அரசின் புதிய அறிவிப்புகள் ஹீரோவா ஜீரோவா?  நாணயம் விகடனின் ஆன்லைன் அலசல் நிகழ்ச்சி

இந்த பட்ஜெட்டால் பங்குச் சந்தை ஏற்றம் காணுமா, என்னென்ன செக்டார் பங்குகளைக் கவனிக்க வேண்டும் என்பது பற்றி ஐ.டி.பி.ஐ கேப்பிட்டல் நிறுவனத்தின் ஆராய்ச்சிப் பிரிவின் தலைவர் ஏ.கே.பிரபாகர் பேசுகிறார்.

இந்தக் கட்டணமில்லா நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதி இலவசம். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள விரும்புகிறவர்கள் இந்த லிங்கை க்ளிக் செய்து பதிவு செய்துகொள்ளுங்கள்.

பதிவு செய்ய: https://bit.ly/3Ggi7Kb

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism