மும்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ் 58,000 புள்ளிகளைக் கடந்தும், தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 17,300- புள்ளிகளைத் தாண்டியும் புதிய உச்சத்தைத் தொட்டு செல்கின்றது. இதனால் பல முதலீட்டாளர்களின் போர்ட்ஃபோலியோ நல்ல லாபத்தில் இருக்கிறது.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இந்த நிலையில், இப்போது ஒரு முதலீட்டாளர் செய்ய வேண்டியது என்ன, செய்யக்கூடாதது என்ன, லாபத்தில் இருக்கும் பங்குகளை விற்றுவிடலாமா, வாங்கிய விலையைவிடக் கணிசமாகக் குறைந்துள்ள பங்குகளை மீண்டும் வாங்கிச் சேர்க்கலாமா அல்லது விற்றுவிடலாமா எனப் பல கேள்விகள் முதலீட்டாளர்களின் மனதில் எழுகின்றன.
இந்தக் கேள்விகளுக்கெல்லாம் வரும் 06.09.2021 (திங்கள்) மாலை 7.15 முதல் 8.15 வரை நாணயம் விகடன் கிளப் ஹவுஸ் வலைதளத்தில் நடத்தும் நிகழ்ச்சியில் பங்குச் சந்தை நிபுணர் ரெஜி தாமஸ் பதில் அளிக்கிறார்.

http:/bit.ly/3zHxFnG என்கிற லிங்கை கிளிக் செய்து, இந்த நிகழ்ச்சியில் கலந்து அனைத்து முதலீட்டாளர்களும் பயன் பெறலாமே!