Published:Updated:

`மிட்கேப் ஃபண்டில் முதலீடு!'- நாணயம் விகடன் கான்கிளேவில் 'சுந்தரம் மியூச்சுவல் ஃபண்ட்' எஸ்.பரத்

நாணயம் விகடன் கான்கிளேவில், சுந்தரம் மியூச்சுவல் ஃபண்டின் ஈக்விட்டி நிதி மேலாளர் (ஃபண்ட் மேனேஜர்) எஸ்.பரத் பேசுகிறார்.

நாணயம் விகடன் கான்கிளேவ்
நாணயம் விகடன் கான்கிளேவ் ( vikatan )

நாணயம் விகடன் நடத்தும் ஃபைனான்ஸ் கான்க்ளேவ் (FINANCE CONCLAVE), வருகிற டிசம்பர் 14 மற்றும் 15-ம் தேதிகளில் (சனி, ஞாயிறு) சென்னையில் நடைபெறுகிறது. இந்த நிதி, முதலீட்டுத் திருவிழாவுக்கு ஐசிஐசிஐ புரூடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் செயல் இயக்குநர் மற்றும் முதன்மை முதலீட்டு அதிகாரி எஸ்.நரேன் தலைமைதாங்கிப் பேசுகிறார்.

சுந்தரம் மியூச்சுவல் ஃபண்டின் ஈக்விட்டி நிதி மேலாளர் எஸ். பரத்
சுந்தரம் மியூச்சுவல் ஃபண்டின் ஈக்விட்டி நிதி மேலாளர் எஸ். பரத்
vikatan

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு..!

முதல்நாள், டிசம்பர் 14-ம் தேதி, முழுக்க முழுக்க மியூச்சுவல் ஃபண்ட் குறித்த நிகழ்ச்சிகளாக இருக்கும். முன்னணி ஃபண்ட் மேனேஜர்கள் பல்வேறு தலைப்புகளில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு குறித்து விரிவாகப் பேசுவார்கள். இந்த நிகழ்ச்சியில் "Anatomy of the financial crisis and opportunities for investors" என்கிற தலைப்பில், ஆதித்ய பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் ஹெட் (புராடக்ட்ஸ்) அபிஷேக் சிங்கால் பேசுகிறார். இவரை அடுத்து, சுந்தரம் மியூச்சுவல் ஃபண்டின் ஈக்விட்டி நிதி மேலாளர் (ஃபண்ட் மேனேஜர்) எஸ். பரத், மிட் கேப் ஃபண்ட் பற்றி பேசுகிறார். மேலும், எடில்வைஸ் அஸெட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி திருமதி. ராதிகா குப்தா, டாடா அஸெட் மேனேஜ்மென்ட் லிமிடெட்- பிசினஸ் ஹெட் (வங்கி மற்றும் முதலீட்டுத் திட்டங்கள்) ஆனந்த் வரதராஜன் உள்ளிட்டோர் பேசுகிறார்கள்.

பங்குச் சந்தை முதலீடு..!

இரண்டாம் நாள் காலையில், பங்குச் சந்தை முதலீடு மற்றும் வர்த்தகம் குறித்த நுணுக்கங்களைப் பங்குச் சந்தை முன்னணி ஆலோசகர்கள் விளக்கிச் சொல்வார்கள். மும்பையைச் சேர்ந்த ஈக்வினாமிக்ஸ் ரிச்சர்ச் அண்ட் அட்வைசரீஸ் நிறுவனத்தின் நிறுவனர் ஜி.சொக்கலிங்கம், யூனிஃபை கேப்பிட்டல் பிரைவேட் லிமிடெட்-டின் செயல் இயக்குநர் ஜி.மாறன், முதலீட்டு ஆலோசகர் ரெஜி தாமஸ் ஆகியோர், பங்குச் சந்தை முதலீடு மற்றும் வர்த்தகம் குறித்து விரிவாகப் பேசுகிறார்கள்.

தொழில் மற்றும் பொருளாதாரம்..!

இதைத் தொடர்ந்து, வணிகம் மற்றும் இந்தியப் பொருளாதாரம் எப்படி இருக்கும் என்பது குறித்து, தொழில் வல்லுநர்கள் மற்றும் பொருளாதார நிபுணர்கள் விரிவாகப் பேசுகிறார்கள்.

சிறப்புப் பேச்சாளர்களாக, மும்பையைச் சேர்ந்த ஈக்வினாமிக்ஸ் ரிசர்ச் அண்ட் அட்வைசரி நிறுவனத்தின் நிறுவனர் ஜி.சொக்கலிங்கம், சென்னையைச் சேர்ந்த யூனிஃபை கேப்பிட்டல் பிரைவேட் லிமிட்டட்-டின் செயல் இயக்குநர் ஜி.மாறன், ஐ.எஃப்.எம்.ஆரின் முதல்வர் டாக்டர் அனந்த நாகேஸ்வரன், கார்வி தென்மண்டல தலைவர் ரெஜி தாமஸ், எடில்வைஸ் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரி திருமதி.ராதிகா குப்தா, சுந்தரம் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் ஈக்விட்டி ஃபண்ட் மேனேஜர் எஸ்.பரத், ஆரஞ்ச்கேப் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் முதன்மை செயல் அதிகாரி சுரேஷ் சம்பந்தம் மற்றும் முன்னணி முதலீட்டு நிபுணர்கள், இந்தக் கருத்தரங்கில் பேசுகிறார்கள்.

சிறப்பு பேச்சாளர்கள்
சிறப்பு பேச்சாளர்கள்
vikatan

இந்த நிகழ்ச்சி, மெட்ராஸ் மேனேஜ்மென்ட் அசோசியேஷன் (எம்.எம்.ஏ) கட்டடத்தில் நடைபெறுகிறது.

இந்த இரு நாள் நிதி மற்றும் முதலீட்டுக் கூட்டத்தில் பங்கேற்பதற்கான முன்பதிவு தொடங்கிவிட்டது. டிசம்பர் 4-ம் தேதிக்குள் பதிவு செய்பவர்களுக்கு, கட்டணத்தில் சலுகை அளிக்கப்பட்டிருக்கிறது. மேலும் மாணவர்கள், பெண்கள், மொத்தமாக ஐந்து பேருக்கு மேல் பதிவு செய்பவர்களுக்கு, கட்டணத்தில் சலுகை இருக்கிறது. முன்கூட்டியே பதிவுசெய்து இந்தக் கட்டணச் சலுகை பெறுவதோடு, உங்கள் பங்கேற்பை உறுதி செய்துகொள்ளுங்கள்.

முன்பதிவுக்கு, https://store.vikatan.com/special/nanayam/nanayam-conclave/