Published:Updated:

`லாபகரமானவையா இண்டெக்ஸ் ஃபண்டுகள்?' - வழிகாட்டும் நாணயம் விகடன் வெபினார்!

நாணயம் விகடன் வெபினார்
நாணயம் விகடன் வெபினார் ( new )

இண்டெக்ஸ் ஃபண்ட்கள் என்பவை ஏதாவது ஒரு பங்குச் சந்தை குறியீட்டின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருப்பவையாகும்.

நாணயம் விகடன் மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் இணைந்து நடத்தும் `இண்டெக்ஸ் ஃபண்ட்கள் & இ.டி.எஃப்க்கள்: முதலீடு செய்வது மூலம் கிடைக்கும் லாபங்கள்..!' என்ற ஆன்லைன் நிகழ்ச்சி, மே 9-ம் தேதி காலை 10.30 மணி முதல் 11.30 மணிக்கு நடைபெறுகிறது.

Investment
Investment
Image by Tumisu from Pixabay

இந்த நிகழ்ச்சியில் மியூச்சுவல் நிபுணர் ஶ்ரீகாந்த் மீனாட்சி (இணை நிறுவனர், Primeinvestor.in) மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் பிராடெக்ட் ஸ்பெஷலிஸ்ட் செந்தில் பாபு ஆகியோர் சிறப்புரையாற்றுகிறார்கள்.

இண்டெக்ஸ் ஃபண்ட்கள் என்பவை ஏதாவது ஒரு பங்குச் சந்தை குறியீட்டின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருப்பவையாகும். இதனால், இந்த ஃபண்டில் ஃபண்ட் மேனேஜருக்கு பெரிதாக வேலை இல்லை. எனவே, இந்த ஃபண்டில் முதலீட்டு செலவு குறைவாகும். இதேபோல்தான் இ.டி.எஃப் என்கிற எக்சேஞ்ச் டிரேடட் ஃபண்ட்கும் ஆகும்.

நாணயம் விகடன் வெபினார்
நாணயம் விகடன் வெபினார்

இவற்றில் முதலீடு செய்வதால் முதலீட்டாளர்களுக்கு என்ன லாபம் என்பது இந்த நிகழ்ச்சியில் விரிவாக எடுத்துரைக்கப்படுகிறது.

அனுமதி இலவசம். பதிவு செய்ய: https://bit.ly/NV-ICICIPru

அடுத்த கட்டுரைக்கு