Published:Updated:

ஊரடங்கால் பாதித்த சிறுதொழில் நிறுவனங்கள்; மீண்டுவர என்ன செய்யலாம்? - வழிகாட்டும் ஆன்லைன் நிகழ்ச்சி!

MSME Day Event
MSME Day Event

ஒவ்வொரு ஆண்டு ஜூன் 27-ஆம் தேதி அன்று சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான நாளாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் சிறுதொழில் நிறுவனங்களுக்கு உதவும் முகமாக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பு என்று பார்த்தால், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள்தான். இந்த நிறுவனங்கள்தான் மிக அதிகமான அளவில் வேலைவாய்ப்பைத் தருவதாக உள்ளன.

ஆனால், கொரோனா முதல் அலையினாலும் இரண்டாம் அலையினாலும் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளவை இந்த நிறுவனங்கள்தான். நீண்ட காலமாக தொடர்ந்த ஊரடங்கு உத்தரவினால், சிறு தொழில் செய்யும் பல நிறுவனங்கள் மோசமான பாதிப்புகளைச் சந்தித்து இருக்கின்றன. என்ன செய்தால் இந்த பாதிப்புகளில் இருந்து தப்பித்து வரமுடியும் என்றும் யோசித்து வருகின்றன.

சிறுதொழில் - Representational Image
சிறுதொழில் - Representational Image
ஃபிக்ஸட் டெபாசிட் தவிர லாபம் தரும் வேறு முதலீட்டு வழிகள் என்னென்ன? - வழிகாட்டும் ஆன்லைன் நிகழ்ச்சி

இலவச   ஆன்லைன் கருத்தரங்கம்

இந்நிலையில், பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் சிறு தொழில் நிறுவனங்கள் புதுமையாக யோசித்தால், எப்படிப்பட்ட பாதிப்பாக இருந்தாலும் அதிலிருந்து மீண்டுவர முடியும் என்பதை எடுத்துச் சொல்ல ஒரு சிறப்பு நிகழ்ச்சியை நடத்தவிருக்கிறது நாணயம் விகடன். ஒவ்வொரு ஆண்டு ஜூன் 27-ம் தேதி அன்று சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான நாளாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் சிறுதொழில் நிறுவனங்களுக்கு உதவும் முகமாக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

`கொரோனா சிக்கல் 2.0... மாத்தி யோசிப்போம், நிச்சயம் ஜெயிப்போம்' என்கிற தலைப்பில் நடைபெறும் இந்நிகழ்வில் சிறுதொழில்முனைவோர்கள் அனைவரும் கலந்துகொள்ளலாம்.

MSME Day Event
MSME Day Event

ஜுன் 27-ஆம் தேதி மாலை 5.30 - 6.30 மணி வரை நடக்கும் இந்தக் கருத்தரங்களில் K.S.கமாலுதீன், நிர்வாக இயக்குநர், புளூபாரத் எக்ஸிம் பிரைவேட் லிமிடெட், B.ராமகிருஷ்ணன், சி.இ.ஒ., கார்ப்பரேட் கிளினிக் ஆகியோர் ஆகியோர் சிறப்புரை ஆற்றுகிறார்கள்.

இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள விரும்புவர்கள் இந்த லிங்கினை http://bit.ly/msme_day க்ளிக் செய்து தங்கள் பெயரைப் பதிவு செய்துகொள்ளலாம்!

அடுத்த கட்டுரைக்கு