Published:Updated:

சரியான மியூச்சுவல் ஃபண்டை தேர்வு செய்வது எப்படி? - வழிகாட்டும் ஆன்லைன் நிகழ்ச்சி

மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் ஏற்கெனவே முதலீடு செய்திருப்பவர்களுக்கு தாங்கள் சரியான திட்டத்தைதான் தேர்வு செய்திருக்கிறோமா என்கிற சந்தேகம் இருக்கும். அது போன்றவர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பது மூலம் முழுத் தெளிவு பெறலாம்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

நாணயம் விகடன் மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட் இணைந்து நடத்தும் `சரியான மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தை தேர்வு செய்வது எப்படி?' என்ற ஆன்லைன் நிகழ்ச்சி நடக்கிறது.

அக்டோபர் 3-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.30 to 11.30 மணி வரை நடைபெறுகிறது.

Mutual fund (Representational Image)
Mutual fund (Representational Image)
மியூச்சுவல் ஃபண்ட்... கடன் சந்தை சார்ந்த ஃபண்ட் திட்டங்கள்..!

இதில், நிதி ஆலோசகர் வித்யா பாலா (https://primeinvestor.in/), ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் பிராந்திய தலைவர் ஜீவன் கோஷி ஆகியோர் பேசுகிறார்கள்.

அனுமதி இலவசம் பதிவு செய்ய: https://bit.ly/NV-ICICIPru

அண்மைக் காலத்தில் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வது அதிகரித்துள்ளது. குறிப்பாக சீரான முதலீட்டுத் திட்டம் என்கிற எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இப்பொதெல்லாம் சராசரியாக மாதம் ரூ.10,000 எஸ்.ஐ.பி முறையில் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யப்பட்டு வருகிறது.

மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் ஏற்கெனவே முதலீடு செய்திருப்பவர்களுக்கு தாங்கள் சரியான திட்டத்தைதான் தேர்வு செய்திருக்கிறோமா என்கிற சந்தேகம் இருக்கும். அது போன்றவர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பது மூலம் முழுத் தெளிவு பெறலாம்.

சரியான மியூச்சுவல் ஃபண்ட்
சரியான மியூச்சுவல் ஃபண்ட்
பங்குச் சந்தை: எந்தப் பங்கில் எப்போது முதலீடு செய்யலாம்? - வழிகாட்டும் நாணயம் விகடன் நிகழ்ச்சி

புதிதாக முதலீடு செய்யத் திட்டமிட்டவர்கள் சரியான திட்டத்தை தேர்வு செய்ய இந்த நிகழ்ச்சி வழிகாட்டியாக இருக்கும்.

அனுமதி இலவசம் பதிவு செய்ய: https://bit.ly/NV-ICICIPru

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு