Published:Updated:

`கந்து வட்டி சிக்கல்: மீள்வது எப்படி?' - வழிகாட்டும் நாணயம் விகடனின் கருத்தரங்கு!

கந்து வட்டி சிக்கல்
கந்து வட்டி சிக்கல்

கந்துவட்டி சட்டத் திட்டங்கள் குறித்து ஆடிட்டர் வி.தியாகராஜன், சிக்கலிருந்து மீள்வது எப்படி என்பது குறித்து வழக்கறிஞர் ஆர்.சரவணன் ஆகியோர் பேசுகிறார்கள்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

நாணயம் விகடன் மற்றும் ஜூனியர் விகடன் இணைந்து வழங்கும் `கந்து வட்டி சிக்கல்: மீள்வது எப்படி?' என்கிற ஆன்லைன் நிகழ்ச்சி வரும் செப்டம்பர் 5-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 - 7.00 மணி வரை நடக்கிறது.

Money (Representational Image)
Money (Representational Image)
ஆன்லைன் டிரேடிங்: நஷ்டத்தை சமாளிக்க கந்து வட்டியில் கடன்; இளைஞரின் விபரீத முடிவு!

இதில், கந்துவட்டி சட்டத் திட்டங்கள் குறித்து ஆடிட்டர் வி.தியாகராஜன் (www.bizlane.in), சிக்கலிருந்து மீள்வது எப்படி என்பது குறித்து வழக்கறிஞர் ஆர்.சரவணன் (Lawyerchennai.com) ஆகியோர் பேசுகிறார்கள்.

முன் பதிவு செய்ய: https://bit.ly/3fMNn9n

பலர் அவசர தேவைக்காக கந்து வட்டிக்கு பணம் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். இதில் காலையில் 750 ரூபாய் வாங்கினால் மாலையில் 1,000 ரூபாயாக திரும்ப கொடுக்க வேண்டும். இப்படி கடனை மேலும் மேலும் வாங்கிவிட்டு கடனை கட்ட முடியாமல் பலர் தங்கள் உயிரை மாய்த்துக்கொண்டுள்ளனர்; தீக்குளித்து மரணம் அடைந்துள்ளனர்.

கந்து வட்டி சிக்கல்
கந்து வட்டி சிக்கல்
வளர்ந்துவரும் நேரடிக் கடன் வசதி... யாரெல்லாம் பயன்படுத்தலாம்? கந்து வட்டி இனி ஒழியுமா?

பணம் வாழ்க்கைக்கு மிக முக்கியம்தான். ஆனால், அதற்கு கொடுக்கும் வட்டியானது வங்கி வட்டியை விட அதிகமாக இருக்கும்போது ரன் வட்டி, மீட்டர் வட்டி என பல பெயர்களில் அழைக்கப்பட்டாலும் பொதுவாக கந்து வட்டி என சொல்லப்படுகிறது. இந்தக் கந்து வட்டி சிக்கலிருந்து மீள தற்கொலை தீர்வு அல்ல. கந்து வட்டி சிக்கலுக்கு என்ன தீர்வு என்பதை விளக்கி சொல்லும் நிகழ்ச்சிதான் இது.

கட்டணமில்லா இந்த கருத்தரங்கில் கலந்துகொள்ள முன் பதிவு செய்யவும்: https://bit.ly/3fMNn9n

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு