Published:Updated:

கிரிப்டோகரன்சி: முதலீடு செய்வதற்குமுன் தெரிந்துகொள்ள வேண்டியவை என்னென்ன? வழிகாட்டும் நிகழ்ச்சி

கிரிப்டோகரன்சி நிகழ்ச்சி
News
கிரிப்டோகரன்சி நிகழ்ச்சி

எப்போது கிரிப்டோகரன்சிக்கான மசோதா நிறைவேற்றப்படும், கிரிப்டோகரன்சிகள் மீதான தெளிவு எப்போது பிறக்கும் என்பது தீர்மானமாகத் தெரியாத சூழலில் கிரிப்டோ வர்த்தகத்தில் ஈடுபடுபவர்கள் ஓரளவேனும் அதுகுறித்த சாதக பாதக அம்சங்களைத் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் உள்ளது.

கிரிப்டோகரன்சி எனப்படும் டிஜிட்டல் கரன்ஸி வர்த்தகம் உலகம் முழுவதும் பிரபலமாகிவருகிறது. இந்தியாவிலும் சமீப காலமாக கிரிப்டோ வர்த்தகம் சூடுபிடித்துவருகிறது.

இளைஞர்கள் இதில் அதிக ஆர்வத்துடன் முதலீடு செய்துவருகிறார்கள். ஆனால், இன்னமும் கிரிப்டோ கரன்சிகளுக்கு முறையான அங்கீகாரம் அரசினாலோ, ரிசர்வ் வங்கியினாலோ வழங்கப்படாத சூழலில் பலருக்கு இதில் முதலீடு செய்யலாமா வேண்டாமா என்ற சந்தேகமும் தயக்கமும் இருந்துவருகிறது. கிரிப்டோகரன்சி வர்த்தகத்தை நெறிப்படுத்துவதற்கான முயற்சிகளை அரசு மேற்கொண்டு வருகிறது.

Crypto Currency
Crypto Currency
Pixabay

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஆனால் எப்போது அதற்கான மசோதா நிறைவேற்றப்படும், கிரிப்டோகரன்சிகள் மீதான தெளிவு எப்போது பிறக்கும் என்பது தீர்மானமாகத் தெரியாத சூழலில் கிரிப்டோ வர்த்தகத்தில் ஈடுபடுபவர்களுக்கு ஓரளவேனும் அதுகுறித்த விழிப்புணர்வும் அதன் சாதக பாதக அம்சங்களும் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் உள்ளது.

பலர் கிரிப்டோ வர்த்தகத்தை முன்வைத்து மோசடியிலும் ஈடுபடுகிறார்கள். அதிக லாபம் என்ற ஆசையைக் காட்டி முதலீட்டாளர்களை இழுத்து பின்னர் ஏமாற்றிவிடுகிறார்கள்.

எனவே கிரிப்டோகரன்சி வர்த்தகம் குறித்து நாணயம் விகடன் ஆன்லைன் மூலம் ஒரு விரிவான விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டுள்ளது.

அனுமதி இலவசம். கலந்துகொள்ள https://bit.ly/Nv-Giottus

நாணயம் விகடன் மற்றும் ஜியோட்டஸ் கிரிப்டோகரன்சி எக்ஸ்சேஞ்ச் இணைந்து `கிரிப்டோகரன்சி... பாசிட்டிவ் & நெகட்டிவ் அம்சங்கள்!' என்ற தலைப்பில் ஆன்லைன் நிகழ்ச்சியை நடத்துகின்றன.

இந்த நிகழ்ச்சி வரும் டிசம்பர் 19-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 12.30 முதல் 01.30 மணிவரை நடைபெறும்.

இதில், இன்ஃபோசிஸ் நாலேஜ் சென்டரின் முதன்மை ஆலோசகர் எஸ்.ராமச்சந்திரன் மற்றும் ஜியோட்டஸ் கிரிப்டோகரன்சி எக்ஸ்சேஞ்ச்-ன் இணை நிறுவனர் மற்றும் முதன்மை செயல் அதிகாரி ஜி. அர்ஜுன் விஜய் ஆகியோர் சிறப்புரையாற்றுகிறார்கள்.

கிரிப்டோகரன்சி நிகழ்ச்சி
கிரிப்டோகரன்சி நிகழ்ச்சி

கிரிப்டோகரன்சி பற்றி விரிவான அறிமுகத்தை இந்நிகழ்ச்சி வழங்க உள்ளது. கிரிப்டோகரன்சி வர்த்தகத்தில் ஆர்வமுள்ளவர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பயனடையலாம்.

இந்நிகழ்ச்சிக்கு அனுமதி இலவசம். கலந்துகொள்ள https://bit.ly/Nv-Giottus என்ற லிங்கில் சென்று பதிவு செய்யவும்.