Published:Updated:

கிரிப்டோகரன்சி முதலீடு: A to Z தெரிந்துகொள்ள வேண்டுமா? வழிகாட்டும் ஆன்லைன் நிகழ்ச்சி

கிரிப்டோகரன்சி
News
கிரிப்டோகரன்சி ( cryptocurrency )

கிரிப்டோ வர்த்தகத்தில் ஈடுபடுவது பாதுகாப்பானதா, எந்த கிரிப்டோகரன்சியை வாங்குவது, கிரிப்டோகரன்சி வர்த்தகத்தில் மோசடிகளும் நடக்கின்றனவே என இப்படி பல விதமான கேள்விகள் முதலீட்டாளர்களிடையே எழுந்துவருகின்றன. இவை அனைத்திற்கும் பதிலளிக்கும் வகையில் இந்நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

கிரிப்டோகரன்சி எனப்படும் டிஜிட்டல் கரன்சி வர்த்தகம் இளைய தலைமுறையினர் உட்பட அனைத்து தரப்பினரிடமும் பிரபலமாகிவருகிறது.

அடிக்கடி ஏற்ற இறக்கத்துக்குள்ளாகும் நிலையிலும் கிரிப்டோகரன்சி வர்த்தகத்தில் தீவிரமாக முதலீடு செய்துவருகிறார்கள். இதனால் இந்தியாவில் தொடர்ந்து கிரிப்டோகரன்சி வர்த்தகம் சூடுபிடித்துவருகிறது.

Cryptocurrency
Cryptocurrency
Pixabay

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஆனாலும் இதில் பலருக்கும் பல கேள்விகள், சந்தேகங்கள் உள்ளன. இன்னும் இதற்கு முறையான அங்கீகாரம் கிடைக்கவில்லை. ரிசர்வ் வங்கியும், அரசும் இதுகுறித்து தீவிரமாக ஆலோசித்துவருகின்றன.

இத்தகைய சூழலில் கிரிப்டோ வர்த்தகத்தில் ஈடுபடுவது பாதுகாப்பானதா, எந்த கிரிப்டோகரன்சியை வாங்குவது, கிரிப்டோகரன்சி வர்த்தகத்தில் மோசடிகளும் நடக்கின்றனவே என இப்படி பல விதமான கேள்விகள் முதலீட்டாளர்களிடையே எழுந்துவருகின்றன.

எனவே இந்த கேள்விகளுக்கு எல்லாம் பதில் வழங்கும் வகையிலும், கிரிப்டோகரன்சி தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ஆன்லைனில் ஒரு விரிவான விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்த நாணயம் விகடன் திட்டமிட்டுள்ளது.

நாணயம் விகடன் மற்றும் ஜியோட்டஸ் கிரிப்டோகரன்சி எக்ஸ்சேஞ்ச் இணைந்து `கிரிப்டோ கரன்சி... உங்கள் கேள்விகள், எங்கள் பதில்கள்!’ என்ற நிகழ்ச்சியை ஆன்லைனில் நடத்தவுள்ளன.

கிரிப்டோகரன்சி
கிரிப்டோகரன்சி
cryptocurrency

இந்த இலவச வெபினார் நிகழ்ச்சி ஜனவரி 23 (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 12.30 - 01.30 மணிவரை நடைபெறும். இதில், ஜியோட்டஸ் கிரிப்டோகரன்சி எக்ஸ்சேஞ்ச் இணை நிறுவனர் மற்றும் முதன்மைச் செயல் அதிகாரி ஜி.அர்ஜுன் விஜய் சிறப்புரையாற்றுகிறார்.

உங்களுடைய அனைத்து கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் விடை கிடைக்க கலந்துகொண்டு பயன்பெறுங்கள்.

அனுமதி இலவசம் பதிவு செய்ய: https://bit.ly/Nv-giottus