நவி ஃபின்சர்வ் (Navi Finserv) கடன் பத்திரங்களை வெளியிட்டு பொது மக்களிடமிருந்து நிதித் திரட்டுகிறது. இந்தக் கடன் பத்திரங்களுக்கு INRBonds மூலம் விண்ணப்பிக்கலாம்.
தனியார் நிறுவனமான நவி ஃபின்சர்வ் பிரைவேட் லிமிடெட் தனிநபர்கள், எஸ்எம்இ துறை நிறுவனங்களுக்கு கடன் உதவி அளித்து வருகிறது. போதிய அளவுக்கு மூலதனத்தை கொண்டிருப்பது மற்றும் கடன் குறைவாக இருப்பது இந்த நிறுவனத்தின் பாசிடிவ் அம்சங்களாகும். H1FY22 –ல் இழப்பை சந்திருப்பது மற்றும் இந்த நிறுவனம் வழங்கி இருக்கும் பாதுகாப்பற்ற தனிநபர் கடன்களில் இருக்கும் ரிஸ்க் ஆகியவை நெகடிவ் அம்சங்களாகும்.

கடன் பத்திர வெளியீடு முக்கிய விவரங்கள் வருமாறு:
திரட்டப்படும் நிதி: ரூ. 600 கோடி
முக மதிப்பு ரூ.1,000
குறைந்தபட்ச முதலீடு ரூ.10,000
திட்டத்தின் பெயர் பாதுகாப்பான என்சிடி (Secured NCD)
தரக் குறியீடு ஏ/ நிலையானது
பட்டியல் என்எஸ்இ & பிஎஸ்இ
2022 ஜூன் 10, வெள்ளிக் கிழமை வரை இந்தக் கடன் பத்திரத்தில் முதலீடு செய்ய முடியும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.