Published:Updated:

`இனி 24 மணி நேர சேவை; பொதுமக்களின் ஆர்வம்!'- நெஃப்ட் குறித்து ரிசர்வ் வங்கி

கடந்த ஜூலை 1 முதல் நெஃப்ட் மற்றும் ஆர்.டி.ஜி.எஸ் சேவைகளுக்கான கட்டணங்கள் ரத்துசெய்யப்பட்டிருந்தன. நேற்று முதல், நெஃப்ட் 24x7 மணி நேரச் சேவையாக மாற்றப்பட்டுள்ளது.

24 மணி நேரமும் நெஃப்ட் சேவை
24 மணி நேரமும் நெஃப்ட் சேவை ( vikatan )

நெஃப்ட் எனப்படும் நேஷனல் எலெக்ட்ரானிக் ஃபண்ட் டிரான்ஸ்பர் (NEFT) ஆன்லைன் பணப்பரிமாற்ற சேவை, நேற்று முதல் 24 மணி நேரமும் செயல்படத் தொடங்கியுள்ளது. அதேபோல் வார விடுமுறை நாள்கள் உட்பட, வாரத்தின் 7 நாள்களும் செயல்படவுள்ளது.

ரிசர்வ் வங்கி
ரிசர்வ் வங்கி
vikatan

வங்கி வாடிக்கையாளர்களுக்கு டிஜிட்டல் பயன்பாட்டை ஊக்குவிக்கும்விதமாக, ஆன்லைன் பணப்பரிமாற்ற சேவையை ரிசர்வ் வங்கி தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது. கடந்த ஜூலை 1 முதல் நெஃப்ட் மற்றும் ஆர்.டி.ஜி.எஸ் சேவைகளுக்கான கட்டணங்கள் ரத்துசெய்யப்பட்டிருந்தன. நேற்று முதல் நெஃப்ட் 24x7 மணி நேர சேவையாக மாற்றப்பட்டுள்ளது.

ரிசர்வ் வங்கியின் ட்விட்டர் பக்கத்தில் நேற்று நண்பகல் 12 மணிக்கு இந்த சேவை தொடங்கப்பட்டது குறித்து ட்வீட் செய்திருந்தது. அதில், 24 மணி நேரமும் ஆன்லைன் பணப்பரிமாற்ற சேவையை வழங்கும் செல்வச்செழிப்பான நாடுகளின் வரிசையில் இந்தியாவும் இணைந்துள்ளதாகப் பெருமையுடன் குறிப்பிட்டிருந்தது.

இன்று வெளியிட்டுள்ள இன்னொரு ட்விட்டர் செய்தியில், காலை 8 மணி முதல் 12 மணி வரை மொத்தம் 11.40 லட்சம் ஆன்லைன் பணப்பரிமாற்றங்கள் நடைபெற்றுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. இதன்மூலம், ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் ஆன்லைன் பணப்பரிமாற்றத்தைப் பயன்படுத்தும்படி செய்யவேண்டுமென்ற இலக்கு நோக்கி ரிசர்வ் வங்கி பயணிப்பதாகக் குறிப்பிட்டுள்ளது.