Published:Updated:

`தன்னிறைவு இந்தியா; சிறு, குறு தொழில்துறைக்கு ரூ.3 லட்சம் கோடி கடன்’-நிர்மலா சீதாராமன் பிரஸ் மீட் ஹைலைட்ஸ் #LiveUpdates

 நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன்

நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த, பிரதமர் மோடி நேற்று நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், ரூ.20 லட்சம் கோடி நிவாரணம் அறிவித்தார். இதைத் தொடர்ந்து, பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் தொடர்பாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களைச் சந்திக்கிறார்.

13 May 2020 5 PM

வருமான வரி தாக்கல் - கால அவகாசம்!

’வருமான வரி தாக்கல் கெடு தேதி, 4 மாதங்கள் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. வருமான வரி தாக்கல் கெடு, ஜூலை 31 லிருந்து நவம்பர் 30 -ஆக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

13 May 2020 5 PM

டிடிஎஸ் பிடித்தம் 25% குறைப்பு!

டிடிஎஸ் என்னும் முன்கூட்டியே பிடித்தம் செய்யபடும் வரி 25% குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வரி பிடித்தம் குறைப்பு, நாளை முதலே அமலுக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், மக்களிடம் 50,000 கோடி பணபுழக்கம் அதிகரிக்கும் என அமைச்சர் அறிவித்திருக்கிறார்.

மின்வாரியங்ளுக்கு 90 ஆயிரம் கோடி ரூபாய் நிதி வழங்கப்படும் என்று அறிவித்த நிதி அமைச்சர், வாடிக்கையாளர்களுக்கு இதன் பயனைக் கொடுக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் இந்த நிதி வழங்கப்படும் என்று அறிவித்தார்.

13 May 2020 5 PM

ரூ.200 கோடிக்குக் குறைவான அரசு டெண்டர்கள்!

’வாராக்கடன் பட்டியலில் உள்ள சிறு தொழில் நிறுவனங்களுக்கு புதிய கடனாக ரூ.50,000 கோடி வழங்கப்படும்’ என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதேபோன்று, ரூ.200 கோடிக்குக் குறைவான அரசு டெண்டர்கள், இனி சர்வதேச அளவில் வெளியிடப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ரூ.200 கோடிக்குக் குறைவான அரசு டெண்டர்கள் இனி இந்திய நிறுவனங்களுக்கு மட்டுமே கிடைக்கும்.

13 May 2020 5 PM

பி.எஃப் தொகையை அரசே செலுத்தும்!

`மேலும், மூன்று மாதங்களுக்கு பி.எஃப் தொகையை, அதாவது ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய 3 மாதங்களுக்கான பி.எஃப் தொகையை மத்திய அரசு செலுத்தும்’ என செய்தியாளர் சந்திப்பில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். ஏற்கெனவே 3 மாத சலுகையை அரசு வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. `நிறுவனங்களின் நிதி அழுத்தத்தைக் குறைக்க, வணிக மற்றும் தொழிலாளர்களுக்கான ஈபிஎஃப் உதவியை இன்னும் 3 மாதங்களுக்குத் தொடர அரசு முடிவுசெய்கிறது’ என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

13 May 2020 4 PM

ரூ.20,000 கோடி மதிப்பிலான துணைக் கடன்

`சிறப்பாகச் செயல்படும் சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கு, சுமார் ரூ.50,000 கோடி கடன் வழங்கப்படும். ஏற்கெனவே கடன் பெற்று செலுத்த முடியாமல் உள்ள சிறு குறு தொழில் நிறுவனங்கள் இதற்குத் தகுதியானவை’ என நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கு ரூ.20,000 கோடி மதிப்பிலான துணைக் கடன் வழங்கப்படும். இந்த சிறப்பு திட்டம் மூலம் 2 லட்சம் சிறு குறு தொழில் நிறுவனங்கள் பயன்பெறுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடன் பெறும் சிறு குறு நிறுவனங்கள், முதல் 1 ஆண்டுக்கு கடனை திருப்பிச் செலுத்தத் தேவையில்லை. RERA-வின் கீழ் பதிவுசெய்த ரியல் எஸ்டேட் நிறுவனங்கள், கட்டுமானத்தை முடிக்க வேண்டியதற்கான கால அவகாசமும் நீட்டிப்பு.

13 May 2020 4 PM

நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான முதலீட்டு வரம்பு ரூ.10 கோடியில் இருந்து ரூ.20 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

13 May 2020 4 PM

அடமானம் இல்லா கடன்!

`தன்னிறைவு இந்தியா; சிறு, குறு தொழில்துறைக்கு ரூ.3 லட்சம் கோடி கடன்’-நிர்மலா சீதாராமன் பிரஸ் மீட் ஹைலைட்ஸ் #LiveUpdates

`சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கு, அடமானம் இல்லாமல் கடன் வழங்கப்படும்’ என நிதி அமைச்சரின் செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிடப்பட்டது. மேலும், இன்று அறிவிக்கப்படும் 15 திட்டங்களில், 6 திட்டங்கள் சிறு குறு தொழில் துறைக்கானது என்று குறிப்பிட்ட நிர்மலா சீதாராமன், அக்டோபர் மாதம் வரை 3 லட்சம் கோடி மதிப்பிலான கடன் வழங்கப்படும்.

`ஏழைகளுக்கு உதவுவதற்காக ரூ.1.7 லட்சம் கோடி மதிப்புள்ள நிவாரண நிதியை அரசாங்கம் ஒதுக்கியுள்ளது. ஒவ்வொரு சுகாதார ஊழியருக்கும் ரூ.50 லட்சம் காப்பீட்டுத் தொகையை பன்முகத்தன்மைகொண்ட யோஜனா வழங்கியுள்ளது’ என மத்திய நிதித்துறை அமைச்சர் தெரிவித்தார்.

13 May 2020 4 PM

`தொடர்ந்து சிறப்பு பொருளாதாரம் தொடர்பாக அறிவிப்புகளை வெளியிடுவோம்!’

கொரோனா காலத்தில் மத்திய அரசின் திட்டங்கள் குறித்து பேசிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாரமன், `41 கோடி ஜன் தன் வங்கி கணக்குகளில் பிரதம மந்திரியின் கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ் நேரடியாக பணம் வரவு வைக்கப்பட்டுள்ளது. 52,606 கோடி ரூபாய் 41 கோடி ஜன் தன் கணக்குகளுக்கு நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளது. 71,700 மெட்ரிக் டன் உணவு தானியங்கள் பல்வேறு மாநில அரசுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன’ என்றவர் `அடுத்த சில நாட்களுக்கு தொடர்ச்சியாக சிறப்பு பொருளாதாரம் தொடர்பாக அறிவிப்புகளை வெளியிடுவோம்’ என்று செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்டார்.

13 May 2020 4 PM

`உள்ளூர் தயாரிப்புகளை சர்வதேச விற்பனை பொருட்களாக மாற்றுவதே அரசின் நோக்கம்’ என்று தெரிவித்த நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட உடனேயே இந்த கொரோனா என்கிற பேரிடர் வந்திருக்கிறது என்று குறிப்பிட்டார்.

13 May 2020 4 PM

சிறு, குறு தொழில்துறைக்கு ரூ.3 லட்சம் கோடி கடனுதவி!

சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள்
சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள்

’சிறு, குறு தொழில்துறைக்கு ரூ.3 லட்சம் கோடி கடனுதவி’ வழங்கபடவுள்ளதாக மத்திய அமைச்சர் தனது அறிவிப்பில் தெரிவித்தார். மேலும் சிறு, குறு தொழில்துறைக்கு இன்று 6 சலுகை அறிவிப்புகள் வெளியிடப்படுகின்றன என்றும் அவர் தெரிவித்தார். ரூ. 3 லட்சம் கோடி கடனுதவி திட்டத்தால் 45 லட்சம் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் பயன்பெறும் என்றும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

13 May 2020 4 PM
`தன்னிறைவு இந்தியா; சிறு, குறு தொழில்துறைக்கு ரூ.3 லட்சம் கோடி கடன்’-நிர்மலா சீதாராமன் பிரஸ் மீட் ஹைலைட்ஸ் #LiveUpdates

`ஏழைகள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் மூத்த குடிமக்கள் மீது எங்களுக்கு ஒரு பொறுப்பு உள்ளது என்பதை நாங்கள் மறந்துவிடவில்லை. பொது முடக்கத்தால் புலம்பெயர் தொழிலாளர்கள், ஏழைகள் பாதிக்கப்பட்டிருப்பதை அரசு உணர்ந்துள்ளது’ என மத்திய அமைச்சர் தெரிவித்தார்,

13 May 2020 4 PM

ஊரடங்கு காலத்தில் கைகொடுத்த திட்டங்கள்!

``உள்ளூர் வர்த்தக சின்னங்களை சர்வதேச அளவில் கொண்டு சேர்க்க இத்திட்டம் பயன்படும். மக்கள் சொல்வதை கேட்டு, அதற்கு ஏற்ப அரசு நடவடிக்கை எடுக்கும். தூய்மை இந்தியா, ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு, இலவச கேஸ் சிலிண்டர் போன்றவை ஊரடங்கு காலத்தில் கைகொடுத்துள்ளன. பிரதான் மந்திரி கிசான் திட்டம், நேரடியாக ஏழைகளுக்கு பணம் செலுத்துதல் போன்றவை முழு முடக்க காலத்தில் மிகவும் உதவிகரமாக இருந்து வருகிறது” என்றார் மத்திய நிதி அமைச்சர்

13 May 2020 4 PM

மருத்துவம், மின் உற்பத்தி துறையில் தன்னிறைவு! 

தன்னிறைவு இந்தியா திட்டம் குறித்து பேசிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், மருத்துவம், மின் உற்பத்தி உள்ளிட்ட துறைகளில் தன்னிறைவு அடைந்திருப்பதாக குறிப்பிட்டார். மேலும் அவர் ``தற்சார்பு இந்தியா என்றால் உலகத்துடன் இருந்து இந்தியா துண்டுத்துக்கொள்ளும் என்றும் அர்த்தம் கிடையாது. அது தன்னம்பிக்கை தருவது” என்றார்.

13 May 2020 4 PM

தன்னிறைவு இந்தியா!

``5 அம்ச நோக்கங்களுடன் `தன்னிறைவு இந்தியா’ என்ற திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இந்தியா சுயசார்புடன் இயங்க இந்த திட்டங்கள் உதவும். இந்தியாவில் தொழில் தொடங்குவது எளிதாக்கப்படும்” என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். மேலும் தேசம் தன்னிறைவு அடைவதுடன் உலகுக்கும் உதவும் வகையில் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்த திட்டங்கள் மூலம் இந்தியாவில் உற்பத்தியை அதிகரிப்பதுடன் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் இந்த புதிய திட்டங்கள் உதவும் என அவர் தெரிவித்தார்.

13 May 2020 4 PM

``பொருளாதாரத்தை மீட்டெடுக்க பிரதமர் தொலைநோக்கு திட்டத்தை நேற்று அறிவித்திருந்தார். அலதுறை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது” -மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்

13 May 2020 4 PM

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து வருகிறார். இதில் ரூ. 20 லட்சம் கோடிக்கான திட்டங்களை வெளியிட்டு பேசி வருகிறார்.

13 May 2020 4 PM

ரூ. 20 லட்சம் கோடிக்கான திட்டங்கள் என்னென்ன?

இன்னும் சற்று நேரத்தில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களைச் சந்தித்து பொருளாதார ஊக்குவிப்பு திட்டங்கள் குறித்து பேசவுள்ள நிலையில், என்ன என்ன அறிவிப்புகள் வெளியாகும் என்ற எதிர்ப்பார்ப்பு மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

`தன்னிறைவு இந்தியா; சிறு, குறு தொழில்துறைக்கு ரூ.3 லட்சம் கோடி கடன்’-நிர்மலா சீதாராமன் பிரஸ் மீட் ஹைலைட்ஸ் #LiveUpdates
13 May 2020 3 PM

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர் சந்திப்பு!

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட ஊரடக்கு காரணமாக நாட்டில் பொருளாதாரம் பெரும் சரிவை சந்தித்தது. இந்த நிலையில் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த, பிரதமர் மோடி நேற்று நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் ரூ.20 லட்சம் கோடி நிவாரணம் அறிவித்தார். இதைத்தொடர்ந்து, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்னும் சற்று நேரத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் அது தொடர்பான புதிய திட்டங்களை அறிவிக்கவுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு