ஆகாஷ்
நிதி ஆயோக் அமைப்பின் புதிய தலைவராக சில நாள்களுக்கு முன்பு பதவியேற்றார் ஐ.ஏ.எஸ் அதிகாரியான பரமேஸ்வரன் அய்யர். யார் இந்த பரமேஸ்வரன் அய்யர்?
பரமேஸ்வரனின் அப்பா, இந்திய ஏர் ஃபோஸில் அதிகாரியாக இருந்தவர். இவர் ஶ்ரீநகரில் பிறந்தாலும், டேராடூனில் பள்ளிப் படிப்பை படித்தார். கல்லூரிப் படிப்பை முடித்ததும் ஏதாவது ஒரு நிறுவனத்தில் சேர்ந்து வேலை பார்க்க வேண்டும் என்றே பரமேஸ்வரனின் பெற்றோர்கள் விரும்பி னார்கள். அந்த ஆசையை நிறைவேற்ற அவர் டி.சி.எம் (DCM) நிறுவனத்தில் இன்டர்வியூக்குப் போனார், வேலை கிடைக்கவில்லை. ஐ.டி.சி நிறுவனத்தில் இன்டர்வியூ முடிந்ததும், ஒரு பாக்கெட் பிஸ்கெட்டைத் தந்து வீட்டுக்கு அனுப்பிவிட்டார்கள் வேலை தரவில்லை. ஓபராய் ஹோட்டலில் வேலை கிடைத்தாலும், காய்கறி வெட்டும் வேலை தொடர்ந்து தரப் பட்டதால், 10 நாளில் அந்த வேலையை விட்டுவிட்டார்.

அதன் பிறகு, சிவில் சர்வீஸ் பரீட்சை எழுதி, ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆனார். உலக வங்கிக்காக டெல்லியிலும் வாஷிங்டனிலும் பணியாற்றிய பரமேஸ்வரன், சுவஜால் திட்டத்தில் பணிபுரிந்து எல்லோருக்கும் சுத்தமான குடி தண்ணீர் கிடைக்கச் செய்ததுடன், ஆப்கானிஸ் தானிலும் அந்தத் திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றினார்.
ஐந்து ஆண்டுகள் குடிநீர் மற்றும் தூய்மைப் பணிகள் துறையில் அனுபவம் பெற்ற இவர், 20 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான இந்தியாவின் முதன்மைத் திட்டங்களில் ஒன்றான ஸ்வச் பாரத் மிஷனை (Swachh Bharat Mission) செயல்படுத்தியதில் முக்கிய பங்காற்றியவர்.