Published:Updated:

யு.பி.ஐ சேவைக்கு கட்டணம் வசூலிக்கும் திட்டம் இல்லை - நிதி அமைச்சகம் விளக்கம்!

யுபிஐ ( UPI )

யு.பி.ஐ சேவையானது மக்களுக்கு பணப் பரிவர்த்தனையை எளிதாக்கியுள்ளது; உற்பத்தி மற்றும் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த உதவுகிறது. அதனால் யு.பி.ஐ சேவைக்கு கட்டணம் வசூலிக்கும் திட்டம் ஏதும் பரிசீலனையில் இல்லை - மத்திய நிதி அமைச்சகம்.

2016 ஏப்ரல் 11-ல் ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜனால் யு.பி.ஐ சேவை வசதி தொடங்கப்பட்டது. கார்டு பரிவர்த்தனைகளுக்கு மாற்றாக அறிமுகப்படுத்தப்பட்ட யு.பி.ஐ பரிவர்த்தனை சேவையின் பயன்பாடு தற்போது இந்தியாவில் அதிகரித்துள்ளது.

இதுவரை யு.பி.ஐ சேவையைப் பயன்படுத்த எந்தக் கட்டணமும் வசூலிக்கப்படவில்லை. இதனால் இந்தச் சேவையை மக்கள் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், ஒவ்வொரு யு.பி.ஐ பண பரிவர்த்தைக்கும் கட்டணம் வசூலிப்பது குறித்து இந்திய ரிசர்வ் வங்கி பங்குதாரர்களிடம் கருத்து கேட்டுள்ளதாகவும், இது தொடர்பாக முன்மொழிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் வந்த செய்தியைத் தொடர்ந்து மத்திய நிதி அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

யு.பி.ஐ தொழில்நுட்பம்
யு.பி.ஐ தொழில்நுட்பம்

யு.பி.ஐ சேவையானது மக்களுக்கு பணப் பரிவர்த்தனையை எளிதாக்கியுள்ளது; உற்பத்தி மற்றும் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த உதவுகிறது. அதனால் யு.பி.ஐ சேவைக்கு கட்டணம் வசூலிக்கும் திட்டம் ஏதும் பரிசீலனையில் இல்லை என்று மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

யு.பி.ஐ சேவையை வழங்கும் நிறுவனங்கள் கட்டணம் மூலம் ஈட்டும் நிதியை வேறு வழிகள் மூலம் பெற்றுக்கொள்ள நிதியமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையை ஊக்குவிக்க கடந்த ஆண்டைப் போல இந்த ஆண்டும் மத்திய அரசு தேவையான நிதி உதவிகளை யு.பி.ஐ சேவையை வழங்கும் நிறுவனங்களுக்கு அளிக்கும் என்று குறிப்பிட்டுள்ளது.