Published:Updated:

``எனது முதலீட்டுக்கு கொரோனா வைரஸால் பாதிப்பில்லை!" காரணம் சொல்கிறார் வாரன் பஃபெட்! #WarrenBuffett

வாரன் பஃபெட் Warren Buffett
வாரன் பஃபெட் Warren Buffett

10 - 20 ஆண்டுக்காலத்துக்கு நீண்டகால முதலீடு செய்ய விரும்பும் முதலீட்டாளர்கள், நல்ல வருமானத்தைத் தந்துகொண்டிருக்கும் சிறந்த நிறுவனத்தைத் தேர்வுசெய்வதில் கவனத்தோடு இருக்க வேண்டும்.

சீனாவில் பெரும் பொருளாதாரச் சேதத்தையும் பங்குச்சந்தையில் கடும் தாக்கத்தையும் ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸின் தாக்கம்தான் முதலீட்டாளர்களைப் பெரிதும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த வைரஸின் தாக்கம் தற்போது சிங்கப்பூர், ஹாங்காங் மட்டுமல்லாது தென்கொரியா, இரான் மற்றும் இத்தாலி உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கும் பரவியுள்ளது.

வாரன் பஃபெட்
வாரன் பஃபெட்

இந்த நிலையில், பெர்க்‌ஷையர் ஹேத்வே நிறுவனத்தின் தலைவரும் பங்குச்சந்தை வணிகத்தில் பெருமுதலீட்டாளராகவும் விளங்கும் வாரன் பஃபெட், தனது முதலீட்டுக்கு கொரோனா வைரஸ் தாக்கத்தால் எந்தப் பாதிப்பும் இல்லையென்று தெரிவித்துள்ளார்.

`கொரோனா வைரஸின் தாக்கம் மிகவும் பயங்கரமான ஒன்றுதான். எனினும், நீண்டகால முதலீட்டுக்கான என் பங்குகளில் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றே கருதுகிறேன். 10 - 20 ஆண்டுக்காலத்துக்கு நீண்டகால முதலீடு செய்ய விரும்பும் முதலீட்டாளர்கள், நல்ல வருமானத்தைத் தந்துகொண்டிருக்கும் சிறந்த நிறுவனத்தைத் தேர்வுசெய்வதில் கவனத்தோடு இருக்க வேண்டும். முதலீட்டுக்கான நிறுவனத்தை நன்முறையில் தேர்வு செய்துவிட்டால், முதலீடு குறித்து பயப்படத் தேவையில்லை' என்றார்.

கிரிப்டோகரன்ஸி
கிரிப்டோகரன்ஸி

கிரிப்டோகரன்ஸி முதலீடு குறித்து கூறுகையில், அவை மதிப்பில்லாதவை. அவற்றில் முதலீடு செய்வதால் எந்த லாபமும் கிடைக்கப்போவதில்லை. எனவே, கிரிப்டோகரன்ஸி முதலீடு குறித்து நான் யோசித்ததே இல்லை என்றார்.

அடுத்த கட்டுரைக்கு