Published:Updated:

அத்தியாவசியப் பொருள்களுக்கு ஜிஎஸ்டி; மாநிலங்கள் எதிர்க்காததே காரணம்! - வருவாய் செயலாளர் விளக்கம்

ஜிஎஸ்டி | GST

மாநிலங்கள் தங்களின் வரி வருவாயை அதிகரிக்க வேண்டிய சூழல் காரணமாகவே அரிசி, கோதுமை, பால், தயிர், நெய் போன்றவற்றுக்கு 5 சதவிகித ஜிஎஸ்டி வரி விதிக்க ஒப்புக்கொண்டன. மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவிக்காததற்கான காரணம் வாட் வரி மூலம் வந்துகொண்டிருந்த வருவாய் இப்போது இல்லை என்பதுதான்.

அத்தியாவசியப் பொருள்களுக்கு ஜிஎஸ்டி; மாநிலங்கள் எதிர்க்காததே காரணம்! - வருவாய் செயலாளர் விளக்கம்

மாநிலங்கள் தங்களின் வரி வருவாயை அதிகரிக்க வேண்டிய சூழல் காரணமாகவே அரிசி, கோதுமை, பால், தயிர், நெய் போன்றவற்றுக்கு 5 சதவிகித ஜிஎஸ்டி வரி விதிக்க ஒப்புக்கொண்டன. மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவிக்காததற்கான காரணம் வாட் வரி மூலம் வந்துகொண்டிருந்த வருவாய் இப்போது இல்லை என்பதுதான்.

Published:Updated:
ஜிஎஸ்டி | GST

பிராண்ட் அல்லாத பாக்கெட்டில் அடைத்து விற்பனை செய்யப்படும் அரிசி, கோதுமை, தயிர், நெய், பால் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களுக்கும் 5 சதவிகித ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டது.

இந்த வரி விதிப்பு ஏழை, நடுத்தர மக்களை வெகுவாக பாதிக்கும் என்பதால் மக்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பு எழுந்தது. எதிர்க்கட்சிகளும் இதுதொடர்பாகத் தங்களது எதிர்ப்புகளையும் கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றன. இதன் காரணமாகத் தொடர்ந்து நாடாளுமன்றமும் அமளி துமளியாகவே உள்ளது.

நிறைவேறியது ஜிஎஸ்டி...
நிறைவேறியது ஜிஎஸ்டி...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்நிலையில், இதுதொடர்பாக மத்திய வருவாய் செயலாளர் தருண் பஜாஜ் ஊடகங்களிடம் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது, ஜிஎஸ்டி வரி விதிப்பு முடிவுகளை மத்திய அரசு எடுப்பதில்லை. ஜிஎஸ்டி கவுன்சில் குழுதான் முடிவுகளை எடுக்கிறது. ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரைகள் அனைத்தும் நிதி அமைச்சர் முன்னிலையில் அனைத்து மாநில நிதி அமைச்சர்களுடனும் விவாதிக்கப்பட்டு அவர்களின் கருத்துகள் கேட்ட பின்னரே முடிவுகள் எடுக்கப்படும்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அந்த வகையில் சமீபத்தில் பிராண்டட் பொருள்களோ, பிராண்டட் அல்லாத பொருள்களோ பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் பொருள்களுக்கு 5 சதவிகிதம் ஜிஎஸ்டி வரி விதிக்க வேண்டும் என்ற பரிந்துரை முன்வைக்கப்பட்டது. இந்தப் பரிந்துரை குறித்து ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட போது எந்தவொரு மாநில நிதி அமைச்சரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இதுபோன்ற விவாதங்களில் யாரேனும் ஆட்சேபனை தெரிவித்தால் அதன்படி முடிவுகள் எடுக்கப்படும். பலமுறை மாநிலங்களின் எதிர்ப்பு காரணமாக முடிவுகள் கைவிடப்பட்டுள்ளன.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

அத்தியாவசியப் பொருள்களுக்கு 5 சதவிகித ஜிஎஸ்டி வரி விதிக்கும் முடிவுக்கு அனைத்து மாநிலங்களும் ஒப்புக்கொண்டன. அதன்பிறகே இந்த வரி விதிப்பு அமல்படுத்தப்பட்டது.

இந்த வரி விதிப்புக்கு மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவிக்காததற்கான காரணம் வாட் வரி மூலம் மாநிலங்களுக்கு வந்துகொண்டிருந்த வருவாய் இப்போது இல்லை என்பதுதான்.

மாநிலங்கள் தங்களின் வரி வருவாயை அதிகரிக்க வேண்டிய சூழல் காரணமாகவே அரிசி, கோதுமை, பால், தயிர், நெய் போன்றவற்றுக்கு 5 சதவிகித ஜிஎஸ்டி வரி விதிக்க ஒப்புக் கொண்டன.

ஆவின் பொருள்கள்
ஆவின் பொருள்கள்

மாநிலங்களின் ஒப்புதலுக்குப் பிறகு, வரி விதிப்பு அமல்படுத்தப் பட்டது என்று அவர் கூறியுள்ளார். மாநிலங்கள் மக்களுக்காக யோசித்து எதிர்ப்பு தெரிவித்திருந்தால் மிகுந்த அத்தியாவசியப் பொருள்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிக்கப்படாமல் இருந்திருக்கும் மக்களும் வரிச் சுமைக்கும் விலைவாசி ஏற்றத்துக்கும் ஆளாகியிருக்க மாட்டார்கள்.