Published:Updated:

`இந்தியர்களுக்கு போதிய அறிவு இல்லை என நினைக்க வேண்டாம்!' நிதியமைச்சருக்கு பதிலடி கொடுத்த ப.சிதம்பரம்

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

2004-2014 வரையிலான காலகட்டத்தில் 9 சதவிகிதமாக இருந்த அரசின் மொத்த வளர்ச்சி செலவினம், 2014-க்குப் பிறகு பாஜக தலைமையிலான ஆட்சிக் காலத்தில் 4 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. கணக்கு முடிவுகளைச் சரியாகக் கொண்டு வர முயற்சித்தால் நிதியமைச்சருக்கு விளங்கும் என்று ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

`இந்தியர்களுக்கு போதிய அறிவு இல்லை என நினைக்க வேண்டாம்!' நிதியமைச்சருக்கு பதிலடி கொடுத்த ப.சிதம்பரம்

2004-2014 வரையிலான காலகட்டத்தில் 9 சதவிகிதமாக இருந்த அரசின் மொத்த வளர்ச்சி செலவினம், 2014-க்குப் பிறகு பாஜக தலைமையிலான ஆட்சிக் காலத்தில் 4 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. கணக்கு முடிவுகளைச் சரியாகக் கொண்டு வர முயற்சித்தால் நிதியமைச்சருக்கு விளங்கும் என்று ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

Published:Updated:
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

காங்கிரஸ் ஆட்சியை விட பாஜக ஆட்சியில்தான் அரசு செலவினங்கள் அதிகமாகச் செய்யப்பட்டிருக்கிறது என்று பெருமையாகச் சொன்ன நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை, காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் கணக்கு கூட தெரியவில்லை என்று கலாய்த்திருக்கிறார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கடந்த சனிக்கிழமை நாட்டின் வளர்ச்சி திட்டங்களுக்கு செய்யப்படும் அரசின் செலவினங்கள் குறித்த புள்ளி விவரங்களை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். அந்த அறிக்கையில் ‘கடந்த 2004 முதல் 2014 வரையிலான 10 ஆண்டுகளில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் நாட்டின் வளர்ச்சி திட்டங்களுக்காக ரூ.49.2 லட்சம் கோடி செலவிடப்பட்டிருக்கிறது. ஆனால் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் அதே நேரம், 2014 முதல் 2022 வரையிலான 8 ஆண்டுகளில் ரூ.90.9 லட்சம் கோடி செலவிடப்பட்டு இருக்கிறது' என்று கூறியுள்ளார்.

ப.சிதம்பரம்
ப.சிதம்பரம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நிர்மலா சீதாராமனின் இந்த அறிக்கைக்கு காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்து நேற்று தனது டிவிட்டர் பதிவில் அவர் கூறியிருப்பதாவது, `நிதி தொடர்பான விஷயங்களை புரிந்துகொள்ளும் அளவுக்கு இந்தியர்களிடம் போதிய அறிவு இல்லாமல் இருப்பதாக நிதியமைச்சர் நினைப்பது வருத்தம் அளிக்கிறது. நிதியமைச்சர் வெளியிட்ட அறிக்கையில் அரசு செலவினங்கள் குறித்து கூறியுள்ள கணக்கின் வழிமுறை எல்லாம் சரியானதுதான். ஆனால், கணக்கின் முடிவுகள்தான் தவறாக உள்ளன. மத்திய அரசின் பட்ஜெட் மதிப்பானது, ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துவரும். மக்கள் தொகைப் பெருக்கம், தேவை ஆகியவற்றின் அடிப்படையில் பட்ஜெட் மதிப்பிடப்படுகிறது. இதனால் வளர்ச்சி திட்டங்களுக்கான செலவினமும், சமூக மேம்பாட்டுக்கான செலவினமும் ஆண்டுக்கு ஆண்டு அதிகரிக்கும்.

எனவே, இந்த செலவினங்களை சதவிகித அடிப்படையில்தான் கணக்கிட வேண்டுமே தவிர, மதிப்பின் அடிப்படையில் ஒப்பிடக் கூடாது. அந்த வகையில் பார்த்தால் 2014-க்குக் பிறகு வளர்ச்சி திட்டங்களுக்கான அரசின் செலவினங்கள் கணிசமாகக் குறைந்திருப்பதைப் பார்க்க முடியும். ரிசர்வ் வங்கியின் ஆண்டறிக்கையில் குறிப்பிட்டுள்ள புள்ளி விவரத்தின் அடிப்படையில் நிதியமைச்சர் தனது அறிக்கையை வெளியிட்டுள்ளார். ஆனால் 2004-2014 வரையிலான காலகட்டத்தில் 9 சதவிகிதமாக இருந்த அரசின் மொத்த வளர்ச்சி செலவினம், 2014க்குப் பிறகு பாஜக தலைமையிலான ஆட்சிக் காலத்தில் 4 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. கணக்கு முடிவுகளைச் சரியாகக் கொண்டு வர முயற்சித்தால் நிதியமைச்சருக்கும் நான் சொல்வது விளங்கும் என்று கூறியுள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism